உயிரீற்றுச்
சிறப்புப் புணர்ச்சி
சில
மரப் பெயர் முன் வல்லினம்
நூற்பா.166.(உயிரீற்று சில மரப் பெயர் முன் வல்லினம் புணர்தல்) (பக்.134)
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து
வரப் பெறுவனவும் உள வேற்றுமை வழியே. (நூற்பா.166)
உயிரீற்று சில மரப் பெயர்களுக்கு முன் (மேற்கூறிய பொது விதியால் வரும் வல்லெழுத்து மிகாமல்) அவற்றுக்கு இனமாகிய மெல்லெழுத்து, வேற்றுமையில் வரப்பெறும் (பக்.134) (நூற்பா.166)
விள + காய் = விளங்காய் (பக்.135) (நூற்பா.166)
கள + கனி
= களங்கனி (பக்.135)
மா + துளிர்
= மாந்துளிர் (பக்.135)
காயா + பூ
= காயாம்பூ (பக்.135)
(வேற்றுமை வழியில்
இனஎழுத்து மிகுந்தது)
உயிரீற்று சில
மரப் பெயர்களுக்கு முன் மேற்கூறிய
பொது விதிக்கு இணங்க வருமொழி வல்லெழுத்து மிகும் - வேற்றுமையில் (பக்>134)
பலா + காய்
= பலாக்காய் (பக்.135) (நூற்பா.166)
ஆத்தி + பூ
= ஆத்திப்பூ (பக்.135)
வாழை + பழம்
= வாழைப்பழம் (பக்.135)
(வேற்றுமை வழியில் வல்லெழுத்து மிகுந்தது ) (பக்.135)
உயிரீற்று சில மரப் பெயர்களுக்கு முன் (மேற்கூறிய பொது விதியால் வரும் வல்லெழுத்து மிக்கும்) அவற்றுக்கினமாகிய மெல்லெழுத்து தோன்றியும் வேற்றுமையில் விகற்பித்து வரப்பெறும் (பக்.135)
யா + கோடு
= யாங்கோடு; யாக்கோடு(நூற்பா.166)
காயா + கோடு
= காயாங்கோடு; காயாக்கோடு
(வேற்றுமை
வழியில் விகற்பித்து வந்தது)
(பக்.135)
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-----------------------------------------------------------------------------------------