name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

பாக்கள் (01) ஆசிரியப் பாவும் அதன் இனமும் ! !

ஆசிரியப்பாவும் அதன்  இனமும் இலக்கணமும் !




ஆசிரியப் பா




ஆசிரியப்பாவும் அதன் இனமும்

சீர்கள்

(01)          ஈரசைச் சீர் நான்கும் = ஆசிரிய உரிச்சீர் (.22.யாப்பு)

(02)          ஈரசைச் சீர் நான்கும் = இயற்சீர் என்றும் பெயர் (பக்.23.யாப்பு)

(03)         ஈரசை  கூடியசீர்  இயற்சீர்   அவை

             ஈரிரண்  டென்பர்  இயல்புணர்ந்தோரே !

             மூவசைச் சீர் உரிச் சீர் இருநான்கினுள்

              நேரிரு நான்கும்  வெள்ளைஅல்லன,

              பாவினுள்  வஞ்சியின்  பாற்பட்  டனவே !

              நாலசைச்  சீர்பொதுச்  சீர்பதினாறே,

               ஓரசைச்  சீருமஃ  தோரிரு  வகைத்தே ! (பக்.23. யாப்பு)

 

(04)   நேரசை இறுதியாகிய மூவசைச் சீர் (காய்ச்சீர்) நான்கும் = வெண்பா

       உரிச்சீர்! (.24)

(05)    நிரையசை இறுதியாகிய மூவசைச் சீர் (கனிச்சீர்) நான்கும் = வஞ்சி

       உரிச்சீர் (.24)

(06)    நாலசைச் சீர் 16-ம்............ = பொதுச்சீர் (.24)

(07)   ஓரசைச் சீர்  இரண்டும் = அசைச்சீர் (.24)

(08)   நாலசைச் சீர் செய்யுளில் பொதுவாக வராது. ஆனால் அருகி வரும்

      (.25)

(09)   தண்பூ, நறும்பூ என்று முடியும் நாலசைச்  சீர்கள் எட்டும், அசை

      பிரிக்கையில் காய்ச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(10)   தண்ணிழல், நறுநிழல் என்று முடியும் நாலசைச் சீர்கள் எட்டும்

       அசை பிரிக்கையில் கனிச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(11)   ஆசிரியப் பாவினுள்  குற்றுகரம் வந்துழி அன்றி நாலசைச் சீர் வாரா

       (.26)

தளை (பக்.30)

 

(12)           மாமுன் நேர்  (நேர் முன் நேர்)..............= நேரொன்றாசிரியத் தளை

(13)           விளமுன் நிரை (நிரை முன் நிரை)...= நிரையொன்றாசிரியத்

             தளை

(14)           மாமுன் நிரை ( நேர் முன் நிரை).........= இயற்சீர் வெண்டளை

(15)           விளமுன் நேர் (நிரை முன் நேர்)..........= இயற்சீர் வெண்டளை

(16)           காய்முன் நேர்...................................................= வெண்சீர் வெண்டளை

(17)           காய்முன் நிரை... ............................................= கலித்தளை

(18)           கனிமுன் நிரை.................................................= ஒன்றிய வஞ்சித்தளி

(19)           கனிமுன் நேர்.....................................................= ஒன்றாத வஞ்சித்தளை




ஆசிரிப்பா வகைகள் (பாக்.64.யாப்பு) (பக்.432. நன்னூல்)

(01)     நேரிசை ஆசிரியப்பா = ஈற்றயலடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீரடிகளாகவும் வருவது. (பக்.432. நன்னூல்)

(02)     இணைக்குறள் ஆசிரியப்பா = முதலடியும் ஈற்றடியும்நாற்சீரடியாக, இடையடிகள் ஒன்றிரண்டு சீர்கள் குறைந்து வருவது. (பக்.432.நன்னூல்)

(03)     நிலைமண்டில ஆசிரியப்பா = எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாக வருவது. (பக்.432.நன்னூல்)

(04) அடிமறி மண்டில ஆசிரியப்பா = எவ்வடியை எவ்வடியாக மாற்றினாலும் ஓசையும், பொருளும் மாறுபடாதது. (பக்.432.நன்னூல்)      

          

 (05) ஆசிரியப்பா இனங்கள் (பக்.434. நன்னூல்)

 

(06)     ஆசிரியத் தாழிசை

(07)     ஆசிரியத்துறை

(08)     ஆசிரிய விருத்தம்

 

ஆசிரியப்பாவின் இலக்கணம் (பக்.86.யாப்பு) (பக்.432. நன்னூல்)

(01)  ஈரசைகளையுடைய நான்கு சீர்களை ஓரடியாகப் பெற்று வரும். மூவசைச் சீர்களும் அருகி வரும்.(பக்.432. நன்னூல்)

(02)  அடிதோறும் நாற்சீராய், இயற்சீர் பயின்றும், அயற்சீர் விரவியும், வஞ்சி உரிச்சீர் தழுவாமல், தன்றளை தழுவியும், பிற தளை மயங்கியும், அகவலோசை உடைத்தாய் வருவது ஆசிரியப்பா (பக்.86.யாப்பு)

(03)      நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் ஆசிரியப்பாவில் வராது (பக்.86, 143. யாப்பு)

(04)    இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடியும், வஞ்சியடியும்,, ஆசிரியப் பாவினுள் வந்து மயங்கப்பெறும். (பக்.144. யாப்பு)

(05)    நேரிசை  ஆசிரியப்பாவில் மட்டும் ஈற்றயலடி முச்சீராக வரும் (பக்.86)

 

நேரிசை ஆசிரியப்பா

 

நிலத்தினும்   பெரிதே   வானினும்  உயர்ந்தன்று

நீரினும்   ஆரள   வின்றே  சாரற்

கருங்கோற்  குறிஞ்சிப்  பூக்கொண்டு

பெருந்தேன்  இழைக்கு  நாடனொடு  நட்பே !

 

(01)        இஃது ஈற்றயலடி முச்சீரான் வந்த  நேரிசை ஆசிரியப்பா. (பக்.86.யாப்பு)

 

நெடு,வரைச்   சா,ரற்  குறுங்,கோட்,டுப்   பல,வின்

விண்,டுவார்  தீஞ்,சுளை  வீங்,குக,வுட்  கடு,வன்

உண்,டு  சிலம்,பே,றி  யோங்,கிய  இருங்,கழைப்

           படி,கம்  பயிற்,று  மென்,

மடி,யாக்  கொலை,வில்  என்,னை,யர்  மலை,யே !

 

(01)   இப்பாடலுள் தன்சீரும் (ஆசிரியச்சீரும்) (நேர், நேர்; நிரை, நிரை), வெண்சீரும் (நேர், நிரை; நிரை, நேர்; தேமாங்காய்), நேர் நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் (?) வந்து, வெண்டளையும், தன் தளையும் (ஆசிரியத் தளையும்) , கலித் தளையும், வஞ்சித் தளையும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க ! (பக்.142. யாப்பு)

(02)     இப்பாடலில்  ஆசிரியத்தளை = 6 (நேர் முன் நேர் =4; நிரை முன் நிரை =2), வெண்சீர் = 9  (நேர் முன் நிரை , நிரை முன் நேர் = 8 ; காய் முன் நேர் = 1 ), கலித்தளை = 1 (காய்முன் நிரை = 1) ஆகியவை வந்துள்ளன. மேலே குறிப்பிட்டுள்ளவாறு வஞ்சி உரிச் சீரோ வஞ்சித் தளையோ வரவில்லை.

 

இணைக்குறள் ஆசிரியப்பா

(01)          ஈற்றடியும் முதலடியும் ஒழிந்து, இடை அடிகள் இரண்டும், பலவும்,   

 குறளடியானும், சிந்தடியானும் வருவன இணைக்குறள்   ஆசிரியப்பா (பக்.87.யாப்பு)

(02)          இடைபல குறைவது இணைக்குறளாகும்”  அவியனார்

 

நீரின் தண்மையுந் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

           சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே.

 

(03)   இது முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய், இடையடி இருசீரானும்,

         முச்சீரானும், வந்தமையால்,இணைக்குறள் ஆசிரியப்பா.

(04)   நேரொன்றாசிரியத் தளையில் அமைந்த இப்பாடலில், வெண்சீர்

         வெண்டளை ஓரிடத்தில் விரவி வந்துள்ளமை காண்க .

(05)  ஆசிரியப் பா நான்கும்என்னும் அசைச் சொல்லான் இறுவதே சிறப்பு. (பக்.88.யாப்பு)

(06)      என்னும் அசைச் சொல் அன்றி ஆசிரியப் பாக்கள்”, “”, ”ஆய்”,        என்”, “என்றும் இறும். (பக்.88.யாப்பு)

 

நிலைமண்டில ஆசிரியப்பா

(07)     எல்லா அடிகளும் தம்முள் அளவொத்து நாற்சீர் அடியால் வருவது

          நிலைமண்டில ஆசிரியப்பா (பக்.89.யாப்பு)

(08)  நிலைமண்டில ஆசிரியப்பாஎன்என்னும் அசைச் சொல்லால் இறுவது சிறப்புடைத்து. (பக்.89.யாப்பு)

 

சா,ரல்  நா,  செவ்,வியை  யா,கும,தி

யா,ரஃ  தறிந்,திசி  னோ,ரே  சா,ரற்

சிறு,கோட்,டுப்  பெரும்,பழந்  தூங்,கி   யாங்,கிவன்

உயிர்,தவச்  சிறி,து  கா,மமோ  பெரி,தே.

 

(09)  இது எல்லா அடிகளும் நாற்சீராய் அளவொத்து வந்தமையால், நிலைமண்டில ஆசிரியப்பா ஆகும். மண்டிலம் எனினும் நிலை மண்டிலம் எனினும் ஒக்கும் (பக்.89.யாப்பு)

(10)     இதில் நேரொன்றாசிரியத் தளை 1,2,3,4,5,6,7,8, நிரையொன்றாசிரியத் தளை1, இயற்சீர் வெண்டளை1,2,3,4,5,6,7,8 வெண்சீர் வெண்டளை1, கலித்தளை 1, ஆகியவை விரவி வந்துள்ளன.

 

அடிமறி மண்டில ஆசிரியப்பா

(01)   எல்லா அடியும், முதல், நடு, இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும், பொருளும் பிழையாது வருவன அடிமறி மண்டில ஆசிரியப்பா. (பக்.89.யாப்பு)

 

சூ,ரல்  பம்,பிய  சிறு,கால்  யா,றே

சூ,ரர  மக,ளிர்  ,ரணங்  கின,ரே

வா,ரலை  யெனி,னே  யா,னஞ்  சுவ,லே

சா,ரல்  நா,  நீ,வர  லா,றே

(02)         இதனை எல்லாவடியும் முதல், நடு இறுதியாக உச்சரித்து ஓசையும் பொருளும் பிழையாது வந்தமையால் அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும் (பக்.90.யாப்பு)

(03)         இதில் நேரொன்று ஆசிரியத் தளை 1,2,3,4,5,6,7,8,9   நிரை யொன்று ஆசிரியத் தளை 1, 2, 3, 4, இயற்சீர் வெண்டளை 1,2, மூன்றும் விரவி வந்துள்ளன.

 

ஆசிரியத் தாழிசை (பக்.91)

 

(01)   மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியத் தாழிசை ஆகும் (பக்.91.யாப்பு)

(02)     ஆசிரியத் தாழிசை பொதுவாக ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வரும்.  இவ்வாறு அல்லாமல் ஒரேயொரு தாழிசை தனியாக  வருவதும் உண்டு. (பக்.91. யாப்பு)

கன்,று   குணி,லாக்   கனி,யுகுத்,   மா,யவன்

இன்,றுநம்   மா,னுள்   வரு,மேல்   அவன்,வா,யிற்

கொன்,றை,யந்   தீங்,குழல்   கே,ளா,மோ   தோ,ழி !

 

பாம்,பு    கயி,றாக்   கடல்,கடைந்,   மா,யவன்

ஈங்,குநம்   மா,னுள்   வரு,மே   லவன்,வா,யில்

ஆம்,பலந்   தீங்,குழல்   கே,ளா,மோ   தோ,ழி !

 

கொல்,லை,யஞ்  சா,ரற்  குருந்,தொசித்,   மா,யவன்

எல்,லிநம்   மா,னுள்   வரு,மே   லவன்,வா,யில்

முல்,லை,யந்  தீங்,குழல்  கே,ளா,மோ தோ,ழி !

 

(01)             இத்தாழிசையுள் வரும்  11 + 11 + 11  தளைகளிள் இயற்சீர் வெண் டளையும், வெண்சீர் வெண்டளையும் 7 + 4; 8 + 3; 6 + 5 என்ற அளவில் அமைந்துள்ளன. ஆசிரியத் தளை ஒன்று கூட வரவில்லை.


ஆசிரியத் துறை (பக்.92)

 

(02)   () நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும் () நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து  இடைமடக்காய் வருவனவும் () நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும் () நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும்  ஆசிரியத் துறை எனப்படும் (பக்.92.யாப்பு)

(03)    சீர் வரையறுத்து  இலாமையால் எனைத்துச்  சீரானும் அடியானும்

         வரப் பெறும் (பக்.92. யாப்பு)

(04)          முதல் அயலடி குறைந்தும், நடு ஈரடி குறைந்தும், மிக்கும் வருவன ஆசிரியத் துறையாம்.(பக்.92 யாப்பு)

 

வண்,டுளர்   பூந்,தார்   வளங்,கெழு   செம்,பூட்,சேய்   வடி,வேபோ,லத்

தண்,டளிர்ப்,பூம்   பிண்,டித்   தழை,யேந்,தி   மா,வின,வித்

தணந்,தோன்  ,யா,ரே

தண்,டளிர்ப்   பூம்,பிண்,டித்   தழை,யேந்,தி   வந்,துநம்

பண்,டைப்  பதி,வின,விப்  பாங்,கு  பட,மொழிந்,து  படர்ந்,தோனன்,றே !

 

(05)             இது நான்கடியாய், ஈற்றயலடி குறைந்து, இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை. (பக்.93 யாப்பு)

(06)             இப்பாடலில் வரும் 21 தளைகளுள் இயற்சீர் வெண்டளை 9-ம், வெண்சீர் வெண்டளை  4-ம், நேரொன்றாசிரியத் தளை 5-ம், கலித்தளை 3-ம் அமைந்துள்ளன.

 

ஆசிரிய விருத்தம் (பக்.95)

(01)     கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தம்  ஆகும் (பக்.95.யாப்பு)

(02)     எண்சீருக்கு மிகையாக வரும் விருத்தங்கள் சிறப்பில்லாதவை (பக்.95)

 

விடஞ்,சூ  ழர,வினி,டை  நுடங்,  மினல்,வாள்

...........வீ,சி  விரை,யார்,வேங்

கடஞ்,சூழ்  நா,டன்  கா,ளிங்,கன்  கதிர்,வேல்

..........பா,டும்  மா,தங்,கி

வடஞ்,சேர்  கொங்,கை  மலை,தாந்,தாம்  வடிக்,கண்

...........ணீ,லம,லர்  தாந்,தாம்

தடந்,தோ  ளிரண்,டும்  வேய்,தாந்,தா  மென்,னுந்

............தன்,கைத்,தண்  ணுமை,யே !

 

(03)     இஃது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம்

(04)     இந்த ஆசிரிய விருத்தத்துள் அமைந்துள்ள 23 தளைகளுள் நேரொன்றாசிரியத்தளை 10 –ம், இயற்சீர் வெண்டளை -5ம், கலித்தளை  6-ம், வெண்சீர் வெண்டளை 2-ம் வந்துள்ளன.

(05)     ஆசிரியப் பாவில் வேற்றுத் தளையும், அடியும் விரவி வரும் (பக்.129.யாப்பு)

(06)     அகவற்பாக்களில் கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சி உரிச் சீர் இரண்டும் புகப்பெறா. இவை ஒழிந்த சீர்கள் எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் வந்து மயங்கப்பெறும் (பக்.141.யாப்பு)

(07)     எல்லாத்தளையும் (வெண்பா நீங்கலாக) எல்லாப் பாவினுள்ளும், பாவினத்துள்ளும் வந்து மயங்கப் பெறும் (பக்.141. யாப்பு)


-------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

 

-------------------------------------------------------------------------------------------------