இன்சொற்கு இளகும் சான்றோர் !
-----------------------------------------------------------------------------------------------------------
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக் கடிகை ! ஒவ்வொரு செய்யுளிலும் நந்நான்கு கருத்துகளைச் சொல்வதால் நான்கு மணிகளைக் கோத்த ஆரம் என்னும் பொருளில் நான்மணிக் கடிகை என்று வழங்கப்படுகிறது ! இதிலிருந்து ஒரு பாடல் !
------------------------------------------------------------------------------------------------------------
பாடல்:
எண்
(12).
------------------------------------------------------------------------------------------------------------
கந்திற்
பிணிப்பர்
களிற்றைக்
கதந்தவிர
மந்திரத் தாற்பிணிப்பர்
மாநாகம்
– கொந்தி
இரும்பிற்
பிணிப்பர் கயத்தைச்சான் றோரை
நயத்திற்
பிணித்து
விடல்.
----------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து
எழுதிய
பாடல்.
---------------------------------------------------------------------------------
கந்திற்
பிணிப்பர் களிற்றை; கதந்தவிர
மந்திரத்தாற்
பிணிப்பர் மாநாகம்
– கொந்தி
இரும்பிற்
பிணிப்பர்
கயத்தை;
சான்றோரை
நயத்திற்
பிணித்து
விடல்.
-----------------------------------------------------------------------------------------------------------
பொருள்:
----------------
தூண்
போன்ற
பெரிய
தறியில்
தொடரி
(சங்கிலி) கொண்டு
பிணித்து
யானையைத்
தன்வயப்
படுத்திவிடுவார்
பாகன்
!
சீறுகின்ற
நல்ல
பாம்பினை
அதன்
சினம் அடங்கும்
வகையில்
மந்திரத்தால்
கட்டுப்படுத்தித்
தன்வயப்
படுத்திவிடுவார்
மந்திரவாதி
!
கயமைக்
குணம்
படைத்த
கீழ்மக்களைக் கோலினால்
ஒறுத்து,
இரும்புத்
தளையிட்டு
அடக்கித் தன்வயப்படுத்திடுவார் நாடாளும்
மன்னர் !
அதுபோல்,
சான்றோரை
இன்சொல்
முதலியவற்றால்
தன்வயப்
படுத்திவிடுவர்
அறிவார்ந்த
மேன்மக்கள்
!
------------------------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------
கந்து
= தூண் (யானை
கட்டும்
தறி)
; பிணிப்பர்
= கட்டி வைப்பர்;
களிறு
= யானை; மாநாகம்
= நல்லபாம்பு;
கொந்தி
= உடம்பை ஒறுத்து;
இரும்பில்
பிணிப்பர்
= இரும்பு விலங்கு
கொண்டு
தளைப்படுத்துவர்;
கயத்தை
= கீழ்மகனை;
நயத்தில்
= நயமான இன்சொல்,
பணிவு
முதலிவற்றால்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com}
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2052,கும்பம்(மாசி),20]
{04-03-2021}
----------------------------------------------------------------------------------------------------------