பொங்கல் வாழ்த்து !
புத்தாண்டு
வாழ்த்து !
(ஆண்டு: 2020)
உலகம்
போற்றும் உயர்மறை தந்த,
.........ஒப்பில் லறிஞன் ஒள்ளிய தலைவன்
வலவன்
எங்கள் வள்ளுவன் பெயரால்
..........வழங்கிடு மாண்டு ஈரா யிரத்து
ஐம்பத்
தொன்று பிறந்தது இன்று
!
..........ஆன்றவிந் தடங்கிய அறவோன் தந்த
தேம்பா
வமுதம் திருக்குறள் போற்றி,
...........தீதில் வாழ்க்கை வாழ்குவம் வாழி !
சொக்கத்
தமிழ்மதி சுறவம் முதனாள்,
..........சொல்லே ருழவன் ஆட்டைத் தலைநாள் !
உக்கக்
கலைஞன் உழவன் திருநாள்,
...........உலகப் புரவலன் ஏரகன் பெருநாள் !
பொங்கல்
திருநாள் இந்நாள்,
பொன்னாள் !
...........பூந்தமிழ் நண்ப ! வாழிய வாழி !
தங்கத்
தமிழை நெஞ்சினில் மாந்தி,
...........தாழ்மை உணர்வைச் செஞ்சரம் சேந்தி,
எங்கும்
என்றும் நம்பணி செய்வோம்
!
...........இனிய தமிழ்மக ! வாழிய ! வாழி
!
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம்
(தை),01]
{15-01-2020}
---------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற கவிதை !
---------------------------------------------------------------------------------------------