கொத்து (01) மலர் (054)
------------------------------------------------------------------------------------------------------------
*******திருமண அழைப்பிதழ்******
கோ.வெங்கடாசலம் – சி.தனலட்சுமி
நாள் : 21-4-1985
------------------------------------------------------------------------
ஏரார் வள்ளுவன் இப்புவி தோன்றிய
ஈரா யிரத்து ஈரெட் டாண்டு
சித்திரைத் திங்கள் சீரிய ஒன்பது
முத்திரைப் பொன்னாள் முகிழ்ஞா யிற்றில்
காலைப் பொழுதில் கண்மணி நம்பி
ஓலைக் கவிதை உள்ளுறை செல்வன்
எந்தன் இளவல் இனிய தமிழ்த்தேன்
வேங்க டாசலம் விளங்கிழை நங்கை
தனலெட் சுமியைத் தன்கரம் பற்றி
மணவினை ஏற்கும் மங்கல நிகழ்ச்சி
சோளம் பள்ளம் சுருங்கில் தன்னில்
மேளம் ஏழில் மேவிட அமையும்
!
ஆன்றவிந் தடங்கிய அருமைச் சான்றீர்
!
மனங்கவர் நண்பீர் ! மகளீர் ! கிளையீர் !
அன்புடன் எனதிவ் வழைப்பினை ஏற்று
இன்மணம் நிகழும் எழில்மனை வருக
!
முன்னமை வுறுக ! முற்றவை பொலிக
!
உன்னியர் விழைய உறுமெய் யன்பால்
இல்லறம் ஏற்றிடும் இணைக்கு
நல்லறம் காட்டி நல்வாழ்த் தருள்கவே
!
அன்பன்
கோ.கிருஷ்ணன், பண்டக உதவியாளர்,
அ.தொ.ப.நி. சேலம்
-------------------------------------------------------------------------------------------------------------
{ குறிப்பு:
திரு. கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான்
எழுதித் தந்த கவிதை வடிவிலான
அழைப்பிதழ்}
--------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.comj]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
{25-04-1985}
--------------------------------------------------------------------------------------------------------------