கொத்து (01) மலர் (025)
----------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களின் நெட்டெழுத்துக் குறிப்பேட்டில்
பதிவு செய்யப் பெற்ற எனது
முத்திரைக் கவிதை !!
(ஆண்டு 1975)
-----------------------------------------------------------------------------------------------------------
நேரிய பாதையில் நடந்திடப் போந்தால்
நேர்ப்படும் இடையூறு ! ---அதைக்
கூரிய மதியால் வென்றிட எண்ணல்
குவலயக் கோட்பாடு !
சீரிய வாழ்வும் செவ்விய நோக்கும்
சிறப்பது பண்பாடு ! --- அதைப்
பாரியல் போடுப் பற்றிட வாய்க்கின்
பல்கிடும் பெரும்பீடு !
------------------------------------------------------------------------------------------------------------
வண்ண மலரூதும் வண்டனைய வாழ்வினிலே
வறுமை, நெடுநீர்மை, வாளாமை அகற்றிடுக !
திண்மை, தாளாண்மை, திறமை, வளம்பெருக்கும்
தித்திக்கும் தமிழ்க்கனியே ! தேனிலவே ! வாழியநீ !
-------------------------------------------------------------------------------------------
கற்பாறையில் விதைக்கப்படுவது முளைப்பது இல்லை !
கருத்தோட்டத்தில் இலக்கில்லாதது தழைப்பது இல்லை !
பொற்கிண்ணத்தை உலையிட்டாலும் சோறாவ தில்லை !
புகழ்பெற்றவன் வீட்சியடைந்தால் மீட்சியும் இல்லை !
ஒரே நோக்கம் ---அஃது உயர்வுக்குப் படிக்கல் !
நேரிய பாதை –அது நிறைவுக்குக் கடைக்கால் !
வாழ்க ! வளம்பெறுக !!
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------