கொத்து (14) மலர் (001)
-----------------------------------------------------------------------------------------------------------
திருமண அழைப்பிதழ்
வை.வேதரெத்தினம் – இரகு.கலைச்செல்வி
நாள் : 2—7—1972
-----------------------------------------------------------------------
பெருந்தகை வள்ளுவர் பெயரால் நிகழும்,
ஈரா யிரத்துமூன் றென்றுரை யாண்டில்,
ஆனித் திங்கள் ஆனபத் தொன்பது,
ஞாயிறு காலை நற்கதிர் தோன்றி,
ஐயிரு நாழிகை அளவில் செல்வி,
கலைச்செல் விதனைக் கைத்தலம் பற்றி
வாழ்க்கைத் துணையாய் வரித்திட உள்ளேன் !
ஆன்றவிந் தடங்கிய அருமைச் சான்றீர் !
மனங்கவர் நண்பீர் ! மகளீர் ! கிளையீர் !
அன்புடன் எனதிவ் வழைப்பினை ஏற்றுச்
சீர்மணம் நிகழும் சேரன் குளமாம்
ஊரகம் வருக ! உறுமெய் யன்பால்
இல்லறம் ஏற்றிடும் எமக்கு
நல்லறம் காட்டி நல்வாழ்த் தருள்கவே !
*********************************
அன்புடன்,
வை.வேதரெத்தினம்
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்
------------------------------------------------------------------------------------------------------------