கொத்து (01) மலர் (36)
-------------------------------------------------------------------------------------------------------------------------
கடல் புறா என்னும் தொடர்கதைக்காக
“லதா” வரைந்த படத்தை வைத்துக்கொண்டுஎழுதி
ஒரு கவிதை !
(ஆண்டு. 1970)
----------------------------------------------------------------------------
சிவந்த கன்னமும் செம்மா துளைவாயும்
சேல்போன்ற நீளவிழியும்,
குவிந்த புருவமும் கோலக் கருங்குழலும்
குங்குமப்பூ தோய்ந்தஉடலும்
அமுதம் பொழிகின்ற நெஞ்சும் கலசங்கள்
அழகூட்டும் மின்னலிடையும்
குமுதம் எனைமெல்லக் கொல்லாமல் கொல்கிறதே,
குயிலேநீ ஓடிவருவாய் !
அன்பைப் பரிமாறி அணைத்து உறவாடி,
அருவியில் நீராடுவோம் !
இன்பம் பயிராக இளமைப் பயன்காண
இணைந்து விளையாடுவோம் !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------