நன்றியில்லாத மக்கள் ஈங்கு நாங்கள் அல்லவோ!
தமிழுக்கு வளம் சேர்க்கும்
வள்ளல்கள் தமிழ் நாட்டிற்கு வெளியில் மட்டுமன்று, தமிழ்
நாட்டிற்கு உள்ளேயும் நிரம்ப இருக்கிறார்கள். தமிழ் மக்களின்
பணத்தைக் கோடி கோடியாக வாரிக் குவித்து வாழ்க்கை
வசதிகளைப் பெருக்கிக் கொண்ட திரைப்படத் துறை வள்ளல்கள், தமிழுக்கு வளம் சேர்க்கும்
திருப்பணிகளைப் பாரீர் !
தமிழ்ப் படங்களுக்குத்
தலைப்பு வைக்க இவர்களுக்குத் தமிழ்ச் சொற்களே கிடைக்கவில்லை தமிழில் சொல்வளம் வறண்டுதான்
போய்விட்டது !! நேற்று தொடங்கி கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த
தமிழ்ப் படங்களின் அழகிய தமிழ்ப் பெயர்களைப் பாரீர் !
--------------------------------------------
வெளிவந்த
படங்கள்
-------------------------------------------
”ராட்சசி”,
”ஜாக்பாட்”, ”சர்கார்”, ”கில்லி”, ”ரன்”, ”சாக்லெட்”,
”தர்பார்”, ”பசங்க,” ”றெக்க”,
”மெட்ரோ”, ”தெகிடி”, ”மெர்க்குரி”,
”தொரட்டி”, ”தொட்டி ஜெயா”, ”நேப்பாளி”, ”டிமாண்டி காலனி”, ”டிக் டிக் டிக்”, ”மான்ஸ்டர்”, ”அயோக்யா”, ”ஆம்பள” “பேட்ட”,
”என்ஜிகே,” ”மிஸ்டர் லோக்கல்”, ”சூப்பர் டீலக்ஸ்”, ”டார்லிங் டார்லிங் டார்லிங்”,
”ஆரஞ்சு மிட்டாய்”, ”மிளகா”, ”பாய்ஸ்”, ”ஜீன்ஸ்”, “மதுர,”
”மெர்சல்,” ”வாலு”, ”ஜோக்கர்”,
”ப்ரண்ட்ஸ்”, ”காலா” “லிங்கா”,
”ஐரா”, ”டிஷ்யூம்”, ”யு டர்ன்”,
”ரோமியோ ஜீலியட்”
விரைவில்
வெளிவரவிருக்கும் படங்கள்
-----------------------------------------------------------------------------
விஜய் நடிக்கும் ”பிகில்”
தனுஷ் நடிக்கும் ”பட்டாஸ்”, ”அசுரன்”
விஜய் சேதுபதி நடிக்கும்
”லாபம்”, ”துக்ளக் தர்பார்”
சிவ கார்த்திகேயன் நடிக்கும்
”ஹீரோ”
விஷ்ணு விஷால் நடிக்கும்
”ராட்சஸன்”
ஜெய் நடிக்கும் ”கேப்மாரி என்கிற சி.எம்.”
துருவ் நடிக்கும் ”ஆதித்ய வர்மா”
தினேஷ் நடிக்கும் ”நானும் சிங்கிள் தான்”
காவ்யா நடிக்கும் ”மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.”
அமுதவாணன் நடிக்கும் ”மயூரன்”
விஜய் தேவரகொண்டா நடிக்கும்
”மிஸ்டர் காம்ரேட்”
அதின் நடிக்கும் ”ஷார்ப்”
தமனா நடிக்கும் ”பெட்ரோமாக்ஸ்”
சாருகாசன் நடிக்கும் ”அப்பத்தாவ ஆட்டையப் போட்டுட்டாங்க”
பிரபாஸ் நடிக்கும் ”சாஹோ”
அகான் நடிக்கும் ”பௌவ் பௌவ்”
சமுத்திரக் கனி நடிக்கும்
”கொளஞ்சி”
யோகி பாபு நடிக்கும் ”கூர்கா”
மிஷ்கின் இயக்கும் ”சைக்கோ”
அதியமான் இயக்கும் ”ஏஞ்சல்”
விமல் நடிக்கும் “சண்டகாரி – தி பாஸ்”
இனியா நடிக்கும் ”காபி”
சிம்பு நடிக்கும் ”மஹா”
சந்தானம் நடிக்கும் ”டகால்டி”
ஜெய் நடிக்கும் ”லவ் மேட்டர்”
ஜெய் நடிக்கும் ”பிரேக்கிங் நியூஸ்”
கதிர் நடிக்கும் ”சர்பத்”
அன்பரசன் இயக்கத்தில் ”வால்ட்டர்”
----------------------------------------------------------------------------------------------------------
படங்களுக்குப் தமிழில்
பெயர் வைப்பதில், தங்கள் தமிழுணர்வை வானளாவ வெளிப்படுத்தும்
தமிழகத் திரைப்படத் துறையினருக்கு நாம் கொஞ்சம் உதவி செய்யலாமா ?
-----------------------------------------------------------------------------------------------------------
என் சார்பில் கீழ்க்கண்ட
தலைப்புகளைப் பரிந்துரைக்கிறேன் ! இவை வெறும் தலைப்புகளே
! ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம் !
------------------------------------------------------------------------------------------------------------
(01) ”நன்றியில்லாத மக்கள் ஈங்கு நாங்கள்
அல்லவோ!”
(02) “ஆங்கிலத்தை உயர்த்து ! உன் அன்னை மொழியைத் தாழ்த்து !”
(03) “சோறு போடும் தமிழை, நீயும் துணிந்து போடு கூறு!”
(04) “சுரணை கெட்டத் தமிழனுக்குத் தமிழ்த்
தலைப்பு தேவையா ?”
(05) “மானமில்லை ! ஈனமில்லை ! வெட்கமில்லை
! மதியுமில்லை !”
(06) “காசுக்காக எதையும் செய்யும் காக்கைக்
கூட்டம் அல்லவோ !”
(07) “தமிழச்சிக்கு மகனாக இருப்பதைவிட ஆங்கிலத்
தாய்க்கு அடிமையாக
இருப்பது மேல் !”
(08) ”ஏமாளித் தமிழன் இருக்கும் வரையில்
எமக்கு எதற்கு மனக் கவலை ?”
(09) “தலையைக் காட்டுத் தமிழா !
உன் தலையில் அரைக்கணும் மிளகா(ய்) !”
(10) “தாலியை விற்றுப் படம் பாரு
! உன்னைத் தடுப்பதற்கிங்கே ஆள் யாரு ?”
(11) “தமிழுக்குப் சேயாக இருப்பதை விட ஆங்கிலத்திற்கு
நாயாக
இருப்பது மேல்”
(12) “கொலைவெறி ! கொலைவெறி ! கொலைவெறி ! தமிழைக்
கொத்திக்
குதறிடக் கொலைவெறி ! கொலைவெறி கொலைவெறியே !”
(13) “அட்டை உருவுக்குப் பால்முழுக்கு
! அடிமைகள் புகழுக்கு ஏதிழுக்கு !”
(14) “வாங்க மச்சி வாங்க ! தலைக்குச் சேவை செய்ய வாங்க!”
(15) “நாங்க நாட்டைக் கெடுப்போம்!
நீங்க வீட்டைக் கெடுங்க !”
---------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் அழகிய தமிழில்
ஏதாவது சில தலைப்புகளை தந்து, திரைப்படத் துறையினருக்கு
உதவலாமே !!
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050:மடங்கல்(ஆவணி)03]
{20-08-2019}
------------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
“