name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, அக்டோபர் 11, 2019

இலக்கணம் (14) சந்திப் பிழைகள் !


பொதுவகைப் பிழைகள் சில !



                                                   முதல்வகை
---------------------------------------------------------------------------------------------------------

ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் சேரும்போது இடையில் புது எழுத்துத் தோன்றுவது சந்தி (-டு) கொத்தி + தின்றது = கொத்தித் தின்றது).  இன்னொரு வகைச் சந்தியில், இடையில் எழுத்துகள் உருமாறும். (-டு) முன் + பிறப்பு + முற் பிறப்பு)  இவ்விரண்டில், முதல் வகைச் சந்திகளில் பிழை நேராமல் காத்துக்கொள்வது இன்றியமையாதது !

இரண்டாவது வகைச் சந்திகளில் இடையில் மாற்றம் செய்யாமல் எழுதுவதால் குறையில்லை. (முன் + பிறப்பு = முற்பிறப்பு, இதை முன்பிறப்பு என்றும் எழுதலாம்) இதுவே தமிழறிஞர்கள் பலரின் கருத்து. இஃது அவர்கள் கையாளும் முறையும் ஆகும் !

---------------------------------------------------------------------------------------------------------

                                             இரண்டாம் வகை:

---------------------------------------------------------------------------------------------------------
              
                இயல்பாக................................................................சந்தியுடன்

---------------------------------------------------------------------------------------------------------
              
             கோயில் கணக்கு.................................................கோயிற்கணக்கு
              நகரில் இருந்து......................................................நகரிலிருந்து
              மணி அளவில்......................................................மணியளவில்
              சில ஆண்டு............................................................சிலவாண்டு
              பெறுதற்கு என்றே...............................................பெறுதற்கென்றே
              முன் பிறப்பு............................................................முற்பிறப்பு
              மலர் ஒன்று............................................................மலரொன்று
              வாழை அடி.............................................................வாழையடி
              நல் நடத்தை...........................................................நன்னடத்தை
              ஆதலால் தான்.....................................................ஆதலாற்றான்
              ஓதாது உணர்தல்.................................................ஓதாதுணர்தல்
              பருவத்தில் தானே...............................................பருவத்திற்றானே
              வேங்கடம் குமரி..................................................வேங்கடங்குமரி
              பாலும் சோறும்.....................................................பாலுஞ்சோறும்
              நாள் தோறும்..........................................................நாடோறும்
              அருள் பா..................................................................அருட்பா
              தண் தமிழ்................................................................தண்டமிழ்
              முதல் நிலை..........................................................முதனிலை
              அமைவு இன்றி.....................................................அமைவின்றி
              கள் குடி.....................................................................கட்குடி
              நமது ஊரில்............................................................நமதூரில்


--------------------------------------------------------------------------------------------------------


இவ்விரு கட்டங்களில் கண்ட சொற்களில் எந்தக் கட்டத்தில் உள்ளதை எழுதினாலும் போதும் இக்காலத்துக்கு.  முதல் கட்டத்தில் உள்ள இரு சொற்களைச் சேர்த்து ஒலிக்கும் போது, இயல்பாக, இரண்டாவது கட்டத்தில் எழுதி  இருப்பதைப் போலவே ஒலிக்கின்றோம். அப்படியே எழுதுவது நல்லதே.  இலக்கணம் இயற்கையை யொட்டி  அங்ஙனந்தான்  விதிக்கிறது. ஆனால், முதல் கட்டத்தில் இருப்பது போலப் பேசுவதும், எழுதுவதும் போதுமானது. தவறாகாது. எனவே இவ்வகைச் சந்தியைப் பற்றிய கவலை வேண்டாம் !

---------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய 
தமிழில் எழுதுவோம்
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற  பகுதி)

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,கடகம்,31]
{16-08-2019}

--------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

-------------------------------------------------------------------------------------------------------