பொதுவகைப் பிழை சில !
(ஆட்சிச் சொற் காவலர்
கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
----------------------------------------------------------------------------------------------------------
” 1-ம்,
2-ம், 3-ம், நல்ல
நாள்கள் “ என்னும் இடத்தில் ” 1-ம்,
2-ம், 3-ம் “ என்று பயன்படுத்தலாம்.
இவை தவறல்ல !
” 1-ஆம் நாள்,
2-ஆம் நாள் “ என்று சொல்லும் போது அப்படியே ” 1-ஆம் நாள், 2-ஆம் நாள் “ என்றுதான்
எழுத வேண்டும். சிலர் எழுதுகையில் “நான்
அடுத்த மாதம் 7ம் தேதி வருகிறேன்” என்று
எழுதுகிறார்கள். இது தவறு; “7ம் தேதி”
என்பதை ”7-ஆம் தேதி” என்றுதான்
எழுத வேண்டும் !
அங்ஙனமே, ” 1-ஆவது, 2-ஆவது “ என்று எழுதுவதே சரி. ” 1-வது, 2-வது “ என்று நாம் உச்சரிப்பதுமில்லையே
! எனவே அது தவறு. ”50வது நாள்” என்று எழுதக்
கூடாது. “50-ஆவது நாள்” என்று தான் எழுத
வேண்டும் !
”1-ல்” என்பதை ”1-இல்” என்று எழுதுவது
வேண்டா. ”1”- இதனை “ஒன்று” என்று உச்சரிக்கிறோம். பக்கத்தில் ”ல்” சேர்த்தால் சாலும். ”1-இல்”
என்று எழுதினால் “ஒன்று இல்” என்று உச்சரிக்க வேண்டி வருமே ? அது தவறன்றோ
?
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.ஆ:2050: மடங்கல் (ஆவணி)
10]
{27-08-2019}
------------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------