கொத்து
(01) மலர் (005)
---------------------------------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்பு பயிற்சித் துறை
இயக்குநர் அலுவலகத்தில் தணிக்கைப் பிரிவில்
உதவியாளராகப்
பணியாற்றிய திரு. கணபதி அவர்கள்
புதுக்கோட்டை வந்திருந்த போது அவருக்கு
எழுதி அளித்த கவிதை !
(ஆண்டு 1968)
----------------------------------------------------------------------------------------------------------
முகவை தந்த முத்து - எங்கள்
முத்தமிழின் சொத்து !
முற்றியுடல் வற்றியுயிர்
பற்றியநல் வித்து
!
அகவை யஞ்சு ஆறு – உள்ளம்
அருங்கனியின் சாறு !
அன்புமனம் கொண்டுசினம்
நன்றகழும் ஏறு !
கடமை யொழுகுங் காளை – பைங்
கமுகுதமிழ்ப் பாளை !
கள்ளமிலா வெள்ளைமனம்
துள்ளியெழும் வாளை !
மடமை சாடும் மன்னன் ! – பெயர்
மயில்முருகன் அண்ணன்
!
மனமகிழ்ந்து தினமுயர்ந்து
இனிதுவாழ்க கன்னன்
!
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------