கொத்து (01) மலர் (026)
==============================================================
உணர்ச்சி நிறைந்த ஓவியம் ! ஊழியர்களின் காவியம் !
(ஆண்டு 1966)
பஞ்சத்தில் வாடிடும்
ஊழியர்க்குப் படி
பத்துப் பதினோரு
ஏழுகளாம்
! - மலர்
மஞ்சத்தில் ஆடிடும்
மந்திரிக்கு முழு
மாதத்தில் ஓரிரு
ஆயிரமாம்
! - அவர்
நெஞ்சத்தில் ஊறிடும்
எண்ணத்திலே தினம்
நல்லதையே எண்ணி நாடுவராம்
! - இன்னும்
கொஞ்சத்தில் மக்களைக்
கூண்டுடன் கயிலையைக்
கண்டிட நல்வழி
கூறுவராம் !
தங்கத்தில் கூடிய தஞ்சைதனில் குடல்
தாளமிடும் ஒலி கேட்குதையா ! - தமிழ்ச்
சங்கத்தில் பாடிய மாமதுரை
பிணம்
சாய்ந்திடும் கொடுமை காணுதையா
! - கடல்
வங்கத்தில் தோன்றிடும்
ஊழிப்புயல் மனை
மாடுகளைக் காவு கொள்ளுதையா
!
- உயிர்ச்
சிங்கத்தில் பயணம்
செயவல்ல
தீரர்கள்
செத்து மடிகின்ற நாடிதையா !
பானைதனில் படி
நெல்லுமில்லை
! பசி
பஞ்சமிலா உயிர்
யாதுமில்லை ! - தினம்
சேனைதனில் கெல்லி மாவெடுத்துக் களி
செய்திட உப்பிற்கும் காசுமில்லை ! - இவர்
யானைதனில்
புடை
சூழவரப்
புகழ்
பாடிவரத் தடை ஏதுமில்லை ! - கொலைத்
தானைதனில் தனி வாகையுடன் பெரும்
பீடுநடை இடக் கூசவில்லை !
மாட்சிதனில் மிக்க மன்னர்கள்
தோன்றிய
மாரிவளம் கொண்ட நாடுஇது
! -
இன்று
காட்சிதனில் சில தூரிகையின் முனை
காட்டிட நோக்கிடும் பேறுஅது
! -
மனச்
சாட்சிதனில் சதிர் ஆடிடும் காங்கிரஸ்
மீட்டிடும் வீணையின் ஊளையெது ? -
அவர்
ஆட்சிதனில் உளம் நொந்திடும் பாமரர்
கூவிடும் வீட்சியின் ஓசையது !
ஆறுதனில் பொடிக் கூழையுடன் கடல்
ஆடிடும் வெண்மணல் வேகமுடன் - விலை
ஏறுதெனில் எலி உண்டுயிர் வாழ்ந்திடக்
கூறிடும் கீழ்நிலை ஆட்சியிலே
! -
ஒரு
கூறுதனில் விலை மாறுதலைச் சிரம்
கொய்து மரித்திடா ஆட்சிதனை - தேர்தல்
சேறுதனில் வெகு ஆழமதில் துயில்
செய்திட வைப்பதும் நம்பணியே !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------