கொத்து (1) மலர் (003)
==============================================================
கவியரங்கத்தில் பங்கேற்கத் தயங்கிய தஞ்சை
மன்னர் சரபோசிக் கல்லூரி நண்பர்
இரா.தமிழரசனுக்கு விடுத்த கவிதைக் கடிதம்
( ஆண்டு 1963 )
=============================================================
புரட்சிக் கவியே ! பொன்மணியே !
பொலிவுறு விளக்கே ! தமிழரசே !
திரட்சிக் கனியே ! தமிழ்த்தேனே !
தென்னவர் கோவே ! தேன்மதியே !
மருட்சி கொளாதே ! மயங்காதே !
மகிழ்ச்சி யுடன்நீ கவிபாடு !
தருணம் காலம் பாராதே !
தமிழ்த் தூதாற்று ! தாய்போற்று !
=============================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
---------------------------------------------------------------------------------------------------------------------