பிழையின்றி எழுதுவோம் !
பிழை-----------------------திருத்தம்
அடமழை...................அடைமழை
அடமானம்.................அடைமானம்
அதுகள்.........................அவை
அமக்களம்..................அமர்க்களம்
அருவாமணை..........அரிவாள்மனை
அருகாமை................அருகு
அலமேலு...................அலர்மேலு
அழும்பு........................அழிம்பு
அவைகள்....................அவை
அவைகளை...............அவற்றை
வினாயகன்................விநாயகன்
இகழ்ட்சி......................இகழ்ச்சி
இடது.............................இடம்
இடதுகை.....................இடக்கை
இமையமலை............இமயமலை
உடமை.........................உடைமை
உத்திரவு.......................உத்தரவு
ஊரணி...........................ஊருணி
எண்ணை.....................எண்ணெய்
என்னமோ...................என்னவோ
ஒண்டியாய்.................ஒன்றியாய்
ஒத்தடம்.......................ஒற்றடம்
ஒருக்கால்.....................ஒருகால்
ஒருவள்.........................ஒருத்தி
கடகால்..........................கடைக்கால்
கடப்பாறை...................கடப்பாரை
கட்டிடம்........................கட்டடம்
(கட்டு + அடம் = கட்டடம்)
கண்ட்ராவி..................கண்ணராவி
கருவப்பிலை..............கறிவேப்பிலை
கருப்பட்டி.....................கருப்புக்கட்டி
கறடுமுறடு..................கரடுமுரடு
கறுமை..........................கருமை
காக்கா............................காக்கை
கிடா.................................கடா
கிராணம்........................கிரகணம்
குஞ்சி..............................குஞ்சு
குடுத்து...........................கொடுத்து
கேழ்வி...........................கேள்வி
கைமாறு.......................கைம்மாறு
கெடிகாரம்....................கடிகாரம்
கோடாலி.......................கோடரி
கோதும்பை..................கோதுமை
கோமியம்......................கோமயம்
கோர்த்து........................கோத்து
கோர்வை.......................கோவை
சந்தணம்........................சந்தனம்
சமயல்...........................சமையல்
சாய்ங்காலம்...............சாயுங்காலம்
சிகப்பு..............................சிவப்பு
சிக்கணம்.......................சிக்கனம்
சிலது...............................சில
சிலவு...............................செலவு
சிறுவாடு........................சிறுபாடு
சுந்திரம்...........................சுந்தரம்
சுவற்றில்........................சுவரில்
சுவற்றை........................சுவரை
தடுமாட்டம்..................தடுமாற்றம்
தலகாணி.......................தலையணை
தவக்களை.....................தவளை
தேவலை.......................தாழ்வில்லை
தாவாரம்........................தாழ்வாரம்
திருவாணி....................திருகாணி
தீவாளி...........................தீபாவளி
துகையல்......................துவையல்
துகை...............................தொகை
துடப்பம்..........................துடைப்பம்
துடை...............................தொடை
துளிர்...............................தளிர்
தொப்புள்.......................கொப்பூழ்
நஞ்சை...........................நன்செய்
நல்லெண்ணை..........நல்லெண்ணெய்
நேத்து............................நேற்று
பட்டிணி........................பட்டினி
பதட்டம்.......................பதற்றம்
பயிறு............................பயறு
பலது.............................பல
பல்லாங்குழி.............பன்னாங்குழி
(பதினான்கு குழி என்று பொருள்)
பாவக்காய்..................பாகற்காய்
புஞ்சை.........................புன்செய்
புடவை.........................புடைவை
புட்டு..............................பிட்டு
புழக்கடை...................புழைக்கடை
புழுக்கை.....................பிழுக்கை
மகிட்சி.........................மகிழ்ச்சி
மணத்தக்காளி..........மணித்தக்காளி
மறுவீடு........................மருவீடு
முடுக்கு........................மிடுக்கு
முயற்சித்தான்..........முயன்றான்
மோர்ந்து......................மோந்து
முகர்ந்து......................மோந்து
ரம்பை...........................அரம்பை
ரம்பம்............................அரம்பம்
ராகம்..............................இராகம்
ராமன்.............................இராமன்
அலமாறி.......................அலமாரி
முயற்ச்சி......................முயற்சி
ரூபாய்............................உருபா
ரெட்டை.........................இரட்டை
ரேகை.............................இரேகை
ரொம்ப............................நிரம்ப
ரோமம்...........................உரோமம்
லட்சம்............................இலட்சம்
வடவம்...........................வடகம்
வயறு..............................வயிறு
வலது..............................வலம்
வலதுகை......................வலக்கை
வாய்வு...........................வாயு
விரால் மீன்.................வரால் மீன்
விரை.............................விதை
விளார்...........................வளார்
வெங்கலம்..................வெண்கலம்
வெண்ணை.................வெண்ணெய்
வெய்யல்.....................வெயில்
வென்னீர்......................வெந்நீர்
வேக்குரு......................வேர்க்குரு
வேணும்.......................வேண்டும்
வேண்டாம்..................வேண்டா
வேஷ்டி..........................வேட்டி
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[19-12-2018]
--------------------------------------------------------------------------------
”தமிழ்ப்
பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------