name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

புதிய தமிழ்ச் சொல் (51) துளிப் பொறி ( SPRAYER ); தூளிப் பொறி ( DUSTER )


புதுச் சொல் புனைவோம் !

SPRAYER -துளிப்பொறி

DUSTER - தூளிப்பொறி

-------------------------------------------------------------------------------------------------------

 

பயிர்களுக்குப் பூச்சி மருந்து அடிப்பதைப் பார்த்திருக்கிறோம்பூச்சி மருந்தைத் தண்ணீரில் கலந்து “ஸ்பிரேயர்” (SPRAYER) என்னும் கருவி மூலம் பயிர்கள் மீது தெளிக்கிறார்கள் !

 

இந்த “ஸ்பிரேயர்” என்பதுஒரு கொள்கலன் (CONTAINER), கொள்கலனுக்குள் காற்றினால் அழுத்தம் ஏற்படுத்த ஒரு விசையமைப்புகொள்கலனிலிருந்து மருந்து நீரை வெளியேற்ற உதவும் நீண்ட மெல்லிய பித்தளைக்குழாய்அதன் முனையில் நுண்ணிய துளைகள் உள்ள ஒரு குருகு மூக்கு (NOZZLE), ஆகியவையுடன் கூடிய அமைப்பு !

 

கொள்கலனுக்குள் மருந்து கலந்த நீரை நிரப்பிகையியக்க அல்லது காலியக்க விசையினால் காற்றை கொள்கலனுக்குள் ஏற்றி அழுத்ததை ஏற்படுத்துகிறார்கள்அடைப்பு விசையைக் கையினால் திறந்தவுடன்மருந்து நீர்பித்தளைக் குழாய் வழியாகமிகுந்த அழுத்ததுடன் குருகு மூக்கின் நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறி பல மெல்லிய துளிகளாகச் சிதறிக் காற்றில் கலந்து பயிர்களின் மீது படிகிறது !

 

மருந்து கலந்த நீரை மெல்லிய துளிகளாகப் பகுத்துபயிர்களின் மீது தூவுவதால்இப்பொறியினை “துளிப் பொறி” என்று அழைக்கலாம் !

 

இக்கருவியைத் தெளிப்பான்என்று சொல்கிறார்கள்; இது தவறு.  ‘ஆன்’ விகுதி  உயர்திணை ஆண்பாலுக்கு  உரித்தானது  என்பதால்அஃறிணைப் பொருளாகிய இக்கருவிக்கு ஆன்விகுதி சேர்த்து தெளிப்பான் எனப்பெயரைச் சூட்டுதலும் அழைத்தலும்  சற்றும் பொருத்தமாக இல்லை !

 

எனவே “ஸ்பிரேயர்” (SPRAYER) என்று ஆங்கிலத்திலும் “தெளிப்பான்” என்று தமிழிலும் அழைக்கப்படும் இக் கருவியை இனி “துளிப்பொறி” என்று அழைப்போம் !

 

நீர்ம வடிவில் (LIQUID STATE) இருக்கும் மருந்தினைத் தெளிக்க “துளிப்பொறி” பயன்படுவது போல், தூளி (பொடி)   வடிவில் (POWDER STATE) இருக்கும் பூச்சி மருந்தினைத் தெளிக்க இப்போது “டஸ்டர்” (DUSTER) என்னும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்இக்கருவியில் எரிபொருளாக (FUEL) கன்னெய் (PETROL) சிறிது நிரப்பப்பட்டுசிறிய உந்து (MOTOR) ஒன்று இயக்கப் படுகிறது ! 

 

அந்த உந்தின் (MOTOR) இயக்க விசையால்கொள்கலனுக்குள் நிரப்பப்பட்டுள்ள பூச்சி மருந்துப் பொடி (POWDER) ஒரு நெளிகுழாயுடன்  (HOSE PIPE) இணைந்த  மூக்கு (NOZZLE) வழியாக வெளியேறி காற்றில் படர்ந்து பயிர்களின் மேல் படிகிறதுஇதுதான் “டஸ்டர்” இயங்கும் முறை !

 

தூளி” என்ற சொல் “பொடியைக் குறிப்பதாகும். “புழுதி” என்றும் பொருளுண்டுதூளி பறக்கிறது என்னும் சொல்லாடலைக் கேட்டிருப்பீர்கள்ஆங்கிலத்தில் “பவுடர்” (POWDER) என்று சொல்லப்படுவதைத் தமிழில் “தூளி” என்று மொழியாக்கம் செய்யலாம் !

 

மருந்துப் பொடியைஅதாவது தூளியைத் தெளிக்க உதவும் பொறியைத் “தூளிப் பொறி” என்று அழைக்கலாமே ! இப்போது இதைத் “தூவுவான்” என்று தவறாக அழைக்கிறார்கள் !

 

முன் பத்தியொன்றில் சொல்லியுள்ளவாறு, “தூவுவான்” என்னும் சொல் ”ஆன்” விகுதியுடன் அமைவதால்இச்சொல் உயர்திணை ஆண்பாலுக்கு  உரிய ஒன்றாகும்அஃறிணைப் பொருளாகிய இக்கருவியை “தூவுவான்” என்று அழைப்பது இலக்கண வழுவாகும் !

 

தமிழின் சொல் மரபுக்கு இணக்கமாக இல்லாத ஒன்றுஎனவே, “டஸ்டர்” (DUSTER)  என்னும் கருவியை இனி, “தூளிப் பொறி “ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் !

 

தமிழ்  ஆட்சி மொழியாகி 63 ஆண்டுகள் கடந்த பின்பும், ”ஸ்பிரேயர்”, “டஸ்டர்” என்று சொல்வதும் எழுதுவதும் அல்லது “தெளிப்பான்”, “தூவுவான்” என்று இலக்கண வழுவுடைய சொற்களைப் பயன்படுத்துவதும் முறையன்று !

 

துளிப்பொறி” கொண்டு “மாலத்தியான்” கலவையைப் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். ”தூளிப்பொறியைப் பயன்படுத்தி பூச்சி மருந்துப் பொடியைத் தூவ வேண்டும் என்ற குரலை இனி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  கேட்போமாக !

 

ஸ்பிரேயர்”, & “டஸ்டர்” என்னும் சொற்கள் தொடர்புடைய கலைச் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போமா !

 

=======================================================

 

 

SPRAYER....................................= துளிப்பொறி

HAND SPRAYER.........................= கையியக்கத் துளிப் பொறி

MACHINE SPRAYER..................= விசையியக்கத் துளிப் பொறி

DUSTER......................................= தூளிப் பொறி

SPRAYER & DUSTER................= துளிதூளிப் பொறி

SPRAY PAINT..............................= ஈர்மத் துளிப்பு

SPRAY GUN................................= துளிப்புக் குருகு

 

 

=============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.:2050,மடங்கல்(ஆவணி),28]

{14-09-2019}

 

========================================================


துளிப்பொறி
தூளிப்பொறி