name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (20) பாலையா - பெயரின் பொருள் தெரியுமா ?

   ’வாலம்’ என்றால் என்ன ?  தெரியவில்லையா ?


பாலையன் என்ற பெயரை பால + ஐயன் என்று பிரிக்கலாம். பால என்ற சொல்  வால  என்ற  சொல்லின் திரிபு.  தமிழில்  வால்  -  வாலம்  என்றால் இளமை, என்று பொருள்.

இளமைக் கருத்தைக் குறிக்கும் வால்  என்னும் சொல்லின் அடிப்படையில் வாலை [இளம்பெண்], வாலிசை [இளம்பெண்], வாலாம்பாள் [இளம்பெண்], வாலவயது [இளவயது], வாலலீலை [இளமை விளையாட்டு], வாலாதித்தன் [இளஞ்சூரியன்], வாலகன் [ இளைஞன் ], வாலச்சந்திரன் [இளம்பிறை], வாலன் [இளைஞன்] மற்றும் இதுபோன்ற பல சொற்கள் தோன்றியுள்ளன.

தமிழ்ச் சொற்களில் இடம்பெறும் ”வ”கரம்   ( )  வடமொழியில் பகரமாகத் திரியும். எடுத்துக்காட்டு:- வாலாம்பாள் = பாலாம்பாள்; வாலன் = பாலன்; வாலகிருஷ்ணன் = பாலகிருஷ்ணன்; வாலசுந்தரம் = பாலசுந்தரம்; வாலசந்தர் = பாலசந்தர்; வாலரமணி = பாலரமணி; வாலபருவம் = பாலபருவம்; வாலிவன் = வாலிபன்; கவடம் = கபடம்; கவடி = கபடி (சடுகுடு ஆட்டம்).

வால் + ஐயன் = வாலையன் என்ற பெயர் வடமொழித் தாக்கத்தால் திரிந்து பாலையன் என்று வழங்கப்படுகிறது. வால் என்பதற்கு இளமை; தூய்மை; தோகை; மிகுதி; வெண்மை; நன்மை; பெருமை; நீண்மை (நீளம்) என்று பொருள். ஐயன் என்பதற்கு  அரசன்; அரிகரபுத்திரன்; அருகன்; அழகன்; ஆசிரியன், உயர்ந்தோன்; இறைவன்; சிவன்; தமையன்; தலைவன்; மூத்தவன் எனப் பல பொருள்கள் உள்ளன.

பாலையன் = வாலையன் = வால் + ஐயன் = இளமை + அரசன் = இளவரசன் என்று பொருள். பாலையன் அல்லது பாலையா என்றால் இளவரசு என்று பொருளாகும். வாலம் = பாலம் = இளமை என்ற பொருள் அடிப்படையில் தோன்றும் சில பெயர்களைப் பார்ப்போமா !


---------------------------------------------------------------------------------------------------

·   பாலையன்..................................= இளவரசன்
·   பாலையா....................................= இளவரசு
·   பாலசந்திரன்..............................= இளம்பிறை
·   பாலசந்தர்....................................= இளமதி
·   பாலன்..........................................= இளவழகன்
·   பாலசுப்பிரமணியன்...............= இளமுருகு
·   பாலாம்பாள்................................= இளவழகி
·   பாலமுருகன்.................................= இளமுருகு
·   பாலகிருஷ்ணன்.........................= இளங்கண்ணன்
·   பாலகோபால்...............................= இளமாலன்
·   பாலதண்டாயுதம்.......................= இளமுருகு
·   பாலசரசுவதி................................= பூவழகி
·   பாலரமணி.(ரமணி=அழகு)....= இளவழகன்
·   பாலசுந்தரி...................................= இளவழகி
·   பாலாமணி (மணி.=.சூரியன்)..= இளங்கதிர்
·   பாலசுந்தரம்.................................= இளவழகன்


----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{20-08-2018}

----------------------------------------------------------------------------------------------------
         ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------



.