கண்ணன் கருப்பு நிறத்தவன் என்பதால்
கிருஷ்ணன் ஆனான் !
சமற்கிருதத்தில் கிருஷ்ணம் என்றால் கருப்பு என்று பொருள். கிருஷ்ணம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது தான் கிருஷ்ணன் என்ற பெயர். கிருஷ்ண பரமாத்மாவின் நிறம் கருப்புதானே !. மனிதர்களில் பலர் கருப்பு நிறம் அன்றோ ! கருப்பு என்றால் காக்கை போன்ற கருப்பு என்று பொருள் கொள்ளக் கூடாது. கருப்பும் நீலமும் ஓரினத்தைச் சார்ந்தவை. சில நேரங்களில் நீலமும் கருப்பாகத் தோன்றும்; கருப்பும் நீலமாகத் தோன்றும். இதன் அடிப்படையில் தான் கிருஷ்ணனை நீல வண்ணக் கண்ணன் என்று இலக்கியங்கள் சொல்லும். கிருஷ்ணம் என்ற சொல்லிலிருந்து பிறந்த பெயர்களைக் காண்போமா !
--------------------------------------------------------------------------------------------
இராதா கிருஷ்ணன் (இராதா=வல்லி).......= வல்லிக்கண்ணன்
இராமகிருஷ்ணன் (இராமம்=எழில்).........=எழிற்கண்ணன்
கிருஷ்ணகாந்த் (காந்த்=ஒளி)).................=கடல்வண்ணன்
கிருஷ்ணசாமி ( கருப்புசாமி)...................=மணிவண்ணன்
கிருஷ்ணமணி....................................=மணிமாலன்
கிருஷ்ணமூர்த்தி (கருப்பையன்)..............=முகில்வண்ணன்
கிருஷ்ணராஜு (ராஜு=வேந்தன்))..............=கார்வேந்தன்
கிருஷ்ணன் ( கருப்பு நிறத்தவன்).................=மாலன்
கோகுலகிருஷ்ணன் (கோகுலம் =ஆயர்).....=கோகுலவாணன்
கோபாலகிருஷ்ணன் (கோ=பசுக்குலம்)....=ஆகுலவாணன்
சிவராமகிருஷ்ணன்(சிவ ராமம்=செந்திரு)...=செந்திருமாலன்
சென்னகிருஷ்ணன் (சென்ன = சிறிய)........=இளங்கண்ணன்
தர்மகிருஷ்ணன் (தர்மம்=அறம்).................=அறவாழி
நவநீதகிருஷ்ணன்(நவநீதம்=வெண்ணெய்)...=வெண்ணகை வேந்தன்
பங்கஜகிருஷ்ணன் (பங்கஜம்=தாமரை)......=தாமரைவாணன்
பாலகிருஷ்ணன் (பால = இளமை)...............=இளங்கண்ணன்
முத்துகிருஷ்ணன் (முத்து=மணி)...............=மணிக்கண்ணன்
ஹரிகிருஷ்ணன் (ஹரி=சிங்கம்).................=அரிமாஅண்ணல்
அனந்தகிருஷ்ணன் (அனந்தம் = நெடுமை)..=நெடுமாலன்

-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{29-12-2018}
----------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற கட்டுரை !

.