உங்கள் தங்கை பெயர் நளினா ! இந்தப் பெயருக்குப் பொருள் தெரியுமா ?
தமிழில், தாமரை மலரை முளரி, இறும்பு, அம்புயம் என்றெல்லாம் சொல்கிறோம். சமற்கிருதத்தில்
புண்டரீகம், முண்டகம், அரவிந்தம், வனஜம், சலஜம், கமலம், பதுமம், பங்கயம், அம்புஜம்,
சரோஜம், நளினம் என்றெல்லாம் அழைப்பார்கள். இத்தகைய சமற்கிருதப் பெயர்களின் அடிப்படையில்
தோன்றி மனிதர்களிடையே வழங்கி வரும் பெயர்களையும் அவற்றுக்குப் பொருத்தமான புதிய தமிழ்ப்
பெயர்களையும் காண்போமா !
அம்புஜம் (தாமரை).......................= செந்தாமரை
அரவிந்தன்( பத்மநாபன்)...........= தாமரை வாணன்
அரவிந்தாக்ஷன் (அக்ஷம்=கண்).= தாமரைக் கண்ணன்.
கமலம்(தாமரை)...........................= நறுந்தாமரை
கமலாசனன்...................................=
தாமரைச்செல்வன்
கமலவல்லி......................................=
தாமரைக்கொடி
கமலி (பத்மாவதி).........................= மலர்ச்செல்வி
கமலஹாசன்(கமல ஆசனன்)...= தாமரைச் செம்மல்
சரோஜா(தாமரை).......................= தாமரைச் செல்வி
சலஜா(ஜலஜா)...............................= தாமரை
வாணி
நளினா..............................................=
தாமரை மங்கை
நீரஜா.................................................=
மலர்ச்செல்வி
பங்கஜம்...........................................=
நற்றாமரை
பண்டரிநாதன்(புண்டரீகநாதன்)..= தாமரைச் செல்வன்
பத்மகுமார்......................................=
தாமரைவாணன்
பத்மசுந்தரி.....................................=
தாமரைச் செல்வி
பத்மா (பதுமநாயகி)...................= தாமரை
முண்டக்கண்ணி (முண்டகக்கண்ணி)..= மலர்விழி
வனஜா..............................................=
தாமரை
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் +இடுகை
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்.
(06-12-2018)
--------------------------------------------------------------------------------------