உங்கள் பெயர் “விதுபாலா”வா ? இந்தப் பெயரின் பொருள் தெரியுமா ?
சூரியனும் சந்திரனும் உலகுக்கு ஒளிதரும் விண்கோள்கள். இதனால்தான் மற்ற கோள்களை விட இவை இரண்டும் மக்களிடையே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. சூரியனின் பெயரை அடிப்படையாக வைத்து மக்களுக்குப் பெயர்கள் சூட்டப் பெறுவதைப் போல, சந்திரனின் பெயரும் மக்களுக்குப் பெயர் சூட்டப் பெறுவதில் முன்னிடம் பிடித்துக் கொள்கிறது.
’விது’ என்றால் நிலவு என்று பொருள். ‘பாலா’ என்றால் இளமை என்று பொருள். இளைய நிலா என்பது இளம்பிறையைக் குறிக்கும் சொல். விதுபாலா என்றால் இளம்பிறை, பிறைமதி, பிறைநிலா என்றெல்லாம் பொருள்படும்.
சந்திரனை அடிப்படையாக வைத்துச் சூட்டப்பெறும் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களின் பட்டியலையும் பார்ப்போமா !
--------------------------------------------------------------------------------------------------------
இந்து (நிலவு)....................= வான்மதி
இந்துமதி...........................= நிறைமதி
கலாநிதி............................= பிறைச்செல்வன்
சசிகலா (சசி=நிலவு)..= பிறைமதி
சசிதரன்.............................= பிறைசூடி
சசிவர்ணம்......................= மதியொளி
சசிபூஷன்.........................= பிறைசூடி
சந்திரகலா.......................= இளம்பிறை
சந்திரகாந்தா.................= ஒளிமதி
சந்திரப்பிரகாஷ்..........= மதியொளி
சந்திரப்பிரபா................= மதியழகி
சந்திரமதி..........................= வெண்மதி
சந்திரமுகி.........................=
மதிவதனி
சந்திரன்..........................= மதிவாணன்
சந்திரா................................= நிறைமதி
சந்திரிகை.........................= தண்மதி
சுதமதி.................................= வான்மதி
சுதா................................= வெண்ணிலா
சுதாகரன்..........................= மதியொளி
சொர்ணமதி..................= பொன்மதி
சோமசுந்தரம்................= மதியழகன்
சோமன் (சந்திரன்).....= மதியரசு
சோமு (சந்திரன்)..........= நிலவழகன்
பாலச்சந்திரன்...............= இளம்பிறை
பூர்ணச்சந்திரன்............= நிறைமதி
வசுமதி (வசு=பொன்)..= பொன்மதி
விதுபாலா (விது=நிலவு)...= இளமதி
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{30-11-2018}
---------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற கட்டுரை !
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற கட்டுரை !