பொருள் தெரியாத பெயரோ ஜீவக்குமார் ?
குமார் அல்லது குமரன்
என்பதற்கு மகன், முருகன்,
அழகன், விடலை, இளைஞன்,
ஆண்மகன், இளையோன், வயிரவன்
எனப் பல பொருள்கள் உள்ளன.. தமிழகத்தில் மக்களிடையே குமார் என்னும்
சொல்லின் அடிப்படையில் பல பெயர்கள் புனையப்பட்டு, குழந்தைகளுக்குச்
சூட்டப்படுகின்றன. அவற்றுள் சில தமிழ்ப் பெயர்களாகவும்,
பல வடமொழிப் பெயர்களாகவும் உள்ளன. இவ்வாறு வழக்கிலுள்ள
பெயர்களையும், அவற்றுக்கு இணையான தூய தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா
!
-------------------------------------------------------------------------------------------------
அட்சயகுமார் (அட்சயன்=இறைவன்).....=
இறையழகன்
அனந்தகுமார் (அனந்தம்=பொன்).........=
பொற்செல்வன்
ஆனந்தகுமார் (ஆனந்தம்=இன்பம்)......=
இனியவன்
இந்திரகுமார் (இந்திரன்=வானவர்
கோன்)....= வானவர்செல்வன்
இராம்குமார் (இராமம்=அழகு)..............=
எழிலரசு
இராஜ்குமார் (ராஜ்=அரசன்)..................= இளவரசன்
கமலகுமார் (கமலம்=தாமரை)...............=
தாமரைச்செல்வன்
குமார் (குமார்=அழகன்)...............=
எழிலன்
சந்திரகுமார் (சந்திரன்=நிலவு).............= நிலவழகன்
சிவகுமார் (சிவன்=சிவந்தவன்)..............= செவ்வெழிலன்.
சூரியகுமார் (சூரியன்=பரிதி)...............= பரிதிச்செல்வன்
சொர்ணகுமார் (சொர்ணம்=பொன்).......=
பொற்செல்வன்
நரேஷ்குமார் (நரேஷ்=அரசன்)...............=
இளவரசன்
பங்கஜகுமார் (பங்கஜம்=தாமரை..........=
தாமரைச்செல்வன்
பத்மகுமார் (பத்மம்=தாமரை)................=
தாமரைச்செல்வன்
பரணிகுமார் (பரணி=கூத்து)...........................=
கூத்தரசன்
பாலகுமார் (பாலன்=இளைஞன்)......= இளவழகன்
மணிக்குமார் (குமார்=எழிலன்).............=
மணியெழிலன்
முத்துக்குமார் (குமார்=செல்வன்)..........=
முத்துச்செல்வன்
வீரகுமார் (வீரம்=அடல்)...............=
அடலரசு
ஜீவகுமார் (ஜீவன்= வைடூரியம்)..............=
மணியெழிலன்
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{16-12-2018}
--------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !