நமது ஊர்ப் பெயர்கள் எப்படியெல்லாம்
மாற்றப்பட்டுவிட்டன !
தமிழ் நாட்டில் உள்ள சிற்றூர், பேரூர்கள் சிலவற்றின் பண்டைக் காலப் பெயர்கள் உருமாற்றம் அடைந்து சமற்கிருதப் பெயராகவோ அல்லது திரிபடைந்த பெயர்களாகவோ வழங்குகின்றன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்காக !
----------------------------------------------------------------------------------------------
அவிநாசி.....................................................= புக்கொளியூர
அழகர்மலை.............................................= சோலைமல
அறப்பணஞ்சேரி (காஞ்சி)..................= அறவணன்சேரி
ஆண்டிப்பட்டி...........................................= ஆன்றோர்பட்டி
ஆண்டிப்பந்தல் (மயிலாடுதுறை)...= ஆன்றோர்பந்தல்
ஆண்டிமடம்..............................................= ஆன்றோர்மடம்
ஆத்தூர்.......................................................= ஆற்றூர்
ஆம்பூர்.........................................................= ஆன்மையூர்
ஆலங்குடி (திருவாரூர்)........................= திருவிரும்பூளை
ஆவுடையார்கோயில்...........................= திருப்பெருந்துறை
ஆற்காடு......................................................= ஆர்க்காடு
இலால்குடி (திருச்சி)...............................= திருத்தவத்துறை
ஈரோடு........................................................= ஈரோடை
உத்தமர்கோயில் (திருச்சி)................= கரம்பனூர்
உப்பிலியாபுரம்.......................................= ஒப்பிலியார்புரம்
ஊத்தங்கரை.............................................= ஊற்றாங்கரை
ஊத்துக்குளி..............................................= ஊற்றுக்குழி
ஏற்காடு (சேலம்)......................................= ஏரிக்காடு
கபிஸ்தலம் (குடந்தை)..........................= கவித்தலம்
கரூர்..............................................................= கருவூர்
கறம்பக்குடி................................................= கரம்பைக்குடி
கற்பகநாதர்குளம் (தி,து.பூண்டி)......= திருகடிக்குளம்
காட்பாடி......................................................= காட்டுப்பாடி
காளையார்கோயில்..............................= திருக்கானப்பேரூர்
கிருஷ்ணகிரி.............................................= கருமலை
கீவளூர் (நாகை).......................................= கீழ்வேளூர்
குடவாசல்.....................................................= குடவாயில்
குடியாத்தம்................................................= குடியேற்றம்
கும்பகோணம்...........................................= திருக்குடந்தை
குன்னக்குடி.................................................= குன்றக்குடி
குன்னூர்........................................................= குன்றூர்
கொடைக்கானல்......................................= கோடைக்கானல்
சங்ககிரி.......................................................= திருவெண்கோடு
சங்கந்தி (தி.து.பூண்டி)...........................= சங்கேந்தி
சாக்கோட்டை (குடந்தை).....................= திருக்கலய நல்லூர்
சிதம்பரம்.....................................................= தில்லை
சித்தன்னவாசல் (புதுகை)....................= சிற்றண்ணல்வாயில்
சிரவணம்பட்டி (கோவை).....................= செவ்வண்ணன்பட்டி
செம்பனார்கோயில்................................= செம்பொன்னார்கோயில்
சோளிங்கர்..................................................= சோழலிங்கபுரம்
தரங்கம்பாடி...............................................= திருவலைப்பாடி
தர்மபுரி..........................................................= தகடூர்
தாந்தோணிமலை....................................= தான்தோன்றிமலை
திருக்கடையூர் (நாகை)..........................= திருக்கடவூர்
திருப்பத்தூர்................................................= திருப்புத்தூர்
திருமயம் (புதுகை)..................................= திருமெய்யம்
திருவண்ணாமலை.................................= திருவருணமலை
தண்டையார்பேட்டை............................= தொண்டையார்பேட்டை
தொப்பூர்......................................................= தோப்பூர்
நயினார்கோயில்.....................................= தென்மருதூர்
நாங்குனேரி................................................= வானமாமலை
நாச்சியார்கோயில்.................................= திருநாரையூர்
பல்லாவரம்.................................................= பல்லவபுரம்
பவானி..........................................................= திருநணா (நண்ணாவூர்)
பழனி.............................................................= பொதினி
பாளையங்கோட்டை..............................= திருமங்கைநகர்
பிரான்மலை...............................................= பரம்புமலை
பெண்ணாடம்............................................= தூங்கானைமாடம்
பெரம்பலூர்................................................= பிரம்பலூர்
மகாபலிபுரம்.............................................= மாமல்லபுரம்
மணப்பாறை.............................................= மணற்பாறை
மல்லிப்பட்டினம்......................................= மல்லிகைப்பட்டினம்
மன்னார்குடி..............................................= மன்னவர்குடி
ராயக்கோட்டை (ஓசூர்).........................= அரையர்கோட்டை
வாய்மேடு (வேதாரணியம்)................= வாய்மைமேடு
விருத்தாசலம்...........................................= பழமுதுகுன்றம்
வேதாரணியம்..........................................= திருமரைக்காடு
வேளாங்கண்ணி.....................................= வேளாண்கன்னி
வைத்தீஸ்வரன்கோயில்......................= புள்ளிருக்குவேளூர்
ஜோலார்ப்பேட்டை..................................= சோலையார்ப் பேட்டை
ஸ்ரீசைலம்....................................................= திருப்பருப்பதம்
ஸ்ரீபெரும்புதூர்.........................................= திருப்பெரும்புதூர்
ஸ்ரீமுஷ்ணம்...............................................= திருமுட்டம்
ஸ்ரீரங்கம்.....................................................= திருவரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்......................................= திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவைகுண்டம்........................................= திருவைகுண்டம்
-------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
.[தி.ஆ:2049, சிலை,4.]
(19-12-2018)
------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்”
முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை!
-------------------------------------------------------------------------------------------------