வினையடியாகப் பிறக்கும் ஈரெழுத்துத் தொழிற் பெயர்கள் !
தமிழில் சொல் வளத்திற்குக் குறைவே
இல்லை; நிரம்பவே உள்ளன ! ஆழ்ந்து படிக்காததாலும், நுணுகி ஆராயத் தவறுவதாலுமே, கருத்துகளைத்
தெளிவாகத் தெரிவிக்கப் போதுமான சொற்கள் தமிழில் இல்லை எனச் சிலர் குறை சொல்கின்றனர்.
குறை அவர்களிடம் தான் உள்ளது; தமிழில் இல்லை !
சொல் வளத்திற்கு எடுத்துக் காட்டாகச் சில சொற்களும், அப்பெயர் வரக் காரணம் என்ன
என்பதும் பின்வரும் பத்தியில் விளக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------
(ஒவ்வொரு வரி இறுதியிலும்
“அதன் பெயர்” என்பதை (இல்லாத
இடத்தில் மட்டும்) சேர்த்துக்
கொள்க!)
-----------------------------------------------------------------------------------------------------------
அடுதல் செய்து தயாரிப்பதால்.....................=
அடை (WAFER)
(ஆடுமாடுகளை)
கிடத்தி வைப்பதால்......= கிடை
(HERD)
இடுகி (ஒடுங்கி) இருப்பதால்.........................=
இடை (WAIST)
(உடலைத்)
தொட்டுக்கொண்டு இருப்பது..= தொடை
(THIGH)
உடுக்கப் படுவதால் அதன்
பெயர்..............=
உடை (DRESS)
(உட்பக்கம்)
குடைவாக இருப்பதால்..........= குடை
(UMBRELLA)
எடுத்தல் அளவையால் காண்பது...............=
எடை (WEIGHT)
கூடு போல் பின்னப் படுவதால்....................=
கூடை (BASKET)
கொடுக்கப் படுவதால் (அதன் பெயர்)......= கொடை (GIFT)
கோடுதல் (வெப்ப எரிவு) செய்வதால்.......= கோடை (SUMMER)
சடைத்துப் (கிளைத்து) பின்னுவதால்........= சடை (BLAIT)
சூடிக் கொள்வதால் அதன்
பெயர்...............=
சூடை (HEAD-WEAR)
தடுக்கப் பயன்படுவதால்...............................=
தடை (BRAKE)
(தறி) நெட்டிழைக்கு ஊடே ஓடுவது............= ஊடை
(WOOF)
(தறியை)
ஆட்டியாட்டி நெய்வதால்............= ஆடை
(CLOTH)
நடத்தலால் விளைவது....................................
= நடை (WALK)
(நிறுத்துக்)
கட்டி விற்குமிடம்.........................= கடை
(SHOP)
(நீர்) ஓடுதலால் உருவாவது............................= ஓடை
(STREAM)
படுக்கப் (அழிக்க) பயன்படுவதால்...........= படை (ARMY)
பீடித்தல் (துன்பம் தரல்) செய்வதால்.........= பீடை (MISERY)
பெட்கப் படும் (விரும்பப்படும்) பறவை...= பேடை
(FEMALE BIRD)
மடுத்தல் (தோண்டி) செய்வதால்...............=
மடை (CHANNEL)
மூடி (கட்டி) வைப்பதால்..................................=
மூடை (BAG)
மேடாக (உயரமாக) இருப்பதால்................=
மேடை (STAGE)
வடக்கிலிருந்து வீசுவதால்..............................=
வாடை (NORTH WIND)
வட்டித்துச் (வட்டமாக்கி) செய்வதால்.......= வடை
(VADAI)
விடுக்கப்படுவதால் (அதன் பெயர்)...........= விடை (ANSWER)
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2050, மீனம்,09 ]
{23-03-2019}
---------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்
குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------