name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

ஐந்திறம் (07) மாதங்களின் வடமொழிப் பெயர்கள் !

”சைத்ர” = சித்திரை, “வைகாஸ”= வைகாசி !, ”ஜேஷ்ட”= ஆனி !



பிரபவ,  விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோற்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, வியஜ, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய !

இந்த 60 ஆண்டுகளைத் தான் தமிழ்வருஷங்கள்என்று வெட்கமில்லாமல் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதில் எங்கே தமிழ் இருக்கிறது ? தமிழ்ச் சொல்லே இல்லாதவருஷங்கள்”, தமிழ் வருஷங்களா ? இனி, “தமிழன்என்று சொல்லிக் கொள்ளும் யாரும் இவற்றைத்தமிழ் வருஷங்கள்என்று சொல்லக் கூடாது !
------------------------------------------------------------------------------------------------------------------
                        
                       தமிழ் (?)  மாதங்கள் -12
.......(.1).....................................(2)...............................(3)........
சைத்ர...........................சித்திரை...............சித்திரை
வைகாஸ.....................விசாகம்.................வைகாசி
ஜேஷ்ட..........................கேட்டை.................ஆனி.
ஆஷாட.........................பூராடம்..................ஆடி
சிராவண.....................அவிட்டம்...............ஆவணி
பாத்ரபத......................பூரட்டாதி................புரட்டாசி
ஆஸ்வின.....................அஸ்வதி..................ஐப்பசி
கார்த்திக......................கிருத்திகை...........கார்த்திகை
மார்கசிர.......................திருவாதிரை.........மார்கழி.
புஷ்ய.............................பூசம்.........................தை
மாக................................மகம்.........................மாசி
பால்குன.......................உத்ரம்.....................பங்குனி

-------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:-

வரிசை (1) –ல் தந்திருப்பது மாதத்தின் வடமொழிப் பெயர்
வரிசை (2) –ல் தந்திருப்பது விண்மீன் பெயர்
வரிசை (3) –ல் தந்திருப்பதுதமிழ்மாதப் பெயர்.

சித்திரை விண்மீன் நிலவும் நாளில் வெள்ளுவா (பௌர்ணமி) வந்தால் அந்த மாதத்தின் பெயர்சைத்ர”.- அதாவது சித்திரை !

விசாக விண்மீன் நிலவும் நாளில் வெள்ளுவா வந்தால், அந்த மாதத்தின் பெயர்வைகாஸ” – அதாவது வைகாசி !

கேட்டை விண்மீன் நிலவும் நாளில் வெள்ளுவா வந்தால், அந்த மாதத்தின் பெயர்ஜேஷ்ட” – அதாவது ஆடி !

இப்படியே மற்ற மாதங்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்க !

சைத்ரஎன்பது சித்திரை ஆகிவிட்டால் அது தமிழ்ப் பெயர் ஆகிவிடுமா ? “வைகாஸஎன்பது வைகாசி ஆகிவிட்டால் அது தமிழ் மாதம் ஆகிவிடுமா?

இப்பொழுது சொல்லுங்கள், சித்திரை முதல் நாள் தான் தமிழ் ஆண்டுப் பிறப்பா ?

வடமொழியாளர்களின் மேலாண்மை இன்னும் ஆண்டுப் பெயரிலும் போகவில்லை. மாதப் பெயரிலும் போக வில்லை !

வடமொழிப் பெயரானசைத்ரமாதம், தமிழ்ப் படுத்தல் என்ற வகையில் சித்திரை ஆகியிருக்கிறது. ( ரயில் என்பது இரயில் ஆன கதை தான் ). சித்திரை என்பதே தமிழ்ப் பெயர் இல்லை என்னும் போது சித்திரை முதல் நாள் எப்படி தமிழ் ஆண்டுப் பிறப்பு நாளாகும் ?

1935 –ஆம் ஆண்டு தனித் தமிழ் ஆசான் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, கி..பெ.விசுவநாதன், .மு.வேங்கடசாமி நாட்டார், தெ.பொ.மீ, கரந்தை உமாமகேசுரம் பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார் போன்ற நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள்  ஒன்று கூடி வரலாற்றுச் சான்று, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில்தை’” மாதம் முதல் நாள் தான் ஆண்டுப் பிறப்புஅதாவது ஆண்டின் தொடக்க நாள் என்று அறுதியிட்டு அறிவித்தார்கள் !

இதன் அடிப்படையிலேயே தமிழ் ஆண்டின் தொடக்கம்தைமுதல் நாள் தான் என்று திரு. மு. அரசு 2008 –ஆம் ஆண்டில் அறிவித்து ஆணை வெளியிட்டது !

பிறகு வந்த அரசு தமிழ்ப் பகைவர்களுக்குத் துணை போகும் வகையில்சித்திரைமாதமே ஆண்டின் தொடக்கம் என்று 2012 –ஆம் ஆண்டில் மாற்றி அறிவித்து ஆணை வெளியிட்டு இப்போது நடைமுறையில் உள்ளது !

கி.பி 2019 –ஆம் ஆண்டு தொடங்குகிறது. 2019 என்பதுடன் 31 சேர்த்தால் 2050 ஆகிறது. இது தான் திருவள்ளுவர் ஆண்டு. இப்போது நடைபெறுவது தி.பி.2050. அதாவது திருவள்ளுவர் பிறந்து 2050 ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள் !

இது போதும் நமக்கு ! எதற்குபிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோற்பத்தி.....எல்லாம் ?  வடமொழி ஆண்டுகளுக்கு மாற்றாக தி.பி பயன்படுத்தலாம்; சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி...என்பதற்கு மாற்று என்ன என்று கேட்பீர்கள் ! இதற்கு விடை சொல்லி இருக்கிறார் பாவாணர். இனி, திருவள்ளுவர் ஆண்டையும், தூய தமிழ் மாதப் பெயர்களையும் பயன்படுத்துவோம் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{10-01-2019}

------------------------------------------------------------------------------------------------------------
     
 ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------