கரந்தை வேங்கடசம் பிள்ளை இயற்றிய தமிழ்த்
தாய் வாழ்த்து
!
தஞ்சை நகரின் ஒரு பகுதியாக உள்ள கருந்திட்டைக்குடி எனப்படும் கரந்தை நகரில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை. பல பாடல்களைப் படைத்துள்ள இவர், இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்து உங்கள் பார்வைக்கு :-
----------------------------------------------------------------------------------------
பாடல்
----------------------------------------------------------------------------------------
வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே !
..........மன்னியமூ வேந்தர்கடம் மடிவளர்ந்த மகளே
!
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்,
..........தென்குமரி ஆயிடைநற் செங்கோல்கொள் செல்வி !
கானார்ந்த தேனே!கற் கண்டே!நற் கனியே !
..........கண்ணே!கண்
மணியே!அக் கட்புலஞ்சேர் தேவி !
ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே !
..........அம்மே!நின்
சீர்முழுதும்
அறைதலியார்க்
கெளிதே !
---------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------------
வான்
ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !
..........மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !
தேன்
ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்
..........தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !
கான்
ஆர்ந்த தேனே
! கற்கண்டே ! நற்கனியே !
..........கண்ணே ! கண்மணியே ! அக் கட்புலம்
சேர் தேவி !
ஆனாத
நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !
..........அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே
!
-----------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்
பொருள்:
-------------------------------------
வானார்ந்த
பொதி = வானுயர்ந்த பொதிய மலை ; மன்னிய = பெருமை மிக்க ; தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச்
சுனைகள் நிறைந்த ; திருமாலின் குன்றம் = வேங்கட மலை ; ஆயிடை = அவ்விடம்
(இடைப்பட்ட பகுதியில்)
; செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற
; கானார்ந்த தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற
தமிழே ! கட்புலம் = பார்வை ; ஆனாத = குறையாத ; சீர்
= பெருமை ; அறைதல் = சொல்லுதல்
; யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை.
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,சுறவம்,13.]
{27-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------