புதுச்சொல் புனைவோம் !
BACHELOR = வாலை
MASTER......= மேதை
-----------------------------------------------------------------------------------------------
பல்கலைக் கழகங்கள்
எனக்குத் தெரிந்த வரை மூன்று விதமான பட்டங்களை வழங்குகின்றன. இளம், முது என்ற முன்னொட்டுடன்
சிலவகைப் பட்டங்களும், முனைவர் என்ற பட்டமும் இவற்றுள் அடங்கும் !
BACHELOR OF ARTS என்பதை இளங்கலை என்றும், இப்பட்டம் பெற்றவரை கலை ”இளைஞர்” என்றும்சொல்கிறோம். BACHELOR OF SCIENCE என்பதை இளம் அறிவியல் என்றும், இப்பட்டம் பெற்றவரை அறிவியல் ”இளைஞர்” என்றும் சொல்கிறோம். BACHELOR OF COMMERCE என்பதை இளம் வணிகவியல் என்றும் இப்பட்டம் பெற்றவர்களை வணிகவியல் ”இளைஞர் என்றும் பல்கலைக் கழகங்கள் குறிப்பிடுகின்றன !
இளம் என்பது ”இளமை” என்ற பொருளிலேயே இங்கு குறிப்பிடப்படுகிறது. ”இளம்” என்பதைக் குறிக்க“வால்” என்ற வேர்ச்சொல் தமிழில் உள்ளது. இந்த வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்திருக்கும் பிற சொற்களைப்பாருங்கள் !
வால் |
-- இளமை |
வாலகன் |
-- இளைஞன் |
வாலச்சந்திரன் |
-- இளம் பிறை |
வாலம் |
-- வாலிபம் |
வாலவயது |
-- இளவயது |
வாலை |
-- இளையது, 12 வயதுப் பெண் |
வாலை என்பது “இளையது” அல்லது “இளநிலை” என்னும் பொருளைக் குறிக்கும் சொல் என்பதால் BACHELOR என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக “வாலை” என்பதை நாம்பயன்படுத்தலாம். எண்பது வயதான B.A. பட்டம் பெற்ற ஒருவரை கலை ”இளைஞர்” என்று சொல்வது சங்கடமான ஒன்று. ஆனால் அவரை கலை “வாலை” என்று சொல்வதில் அவ்வளவு சங்கடம் தோன்றாது !
MASTER OF ARTS என்பதை முது கலை என்றும் இப்பட்டம் பெற்றவரைக் கலை முதுவர் அல்லது முதியர்என்றும் சொல்கிறார்கள். MASTER OF SCIENCE என்பதை முது அறிவியல் என்றும் இப்பட்டம் பெற்றவரை அறிவியல் முதுவர் அல்லது முதியர் என்றும் சொல்கிறார்கள். இவை ஒலி நயமில்லாத, இனிமைக்குறைவான சொற்களாகத் தோன்றுகின்றன.
தமிழில் “மே” என்ற சொல் “மேன்மை” நிலையைக் குறிக்கும். இந்த வேர்ச் சொல்லின் அடிப்படையில்உருவாகி இருக்கும் வேறு சில சொற்களையும் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
மே..............................
= மேன்மை
மேல்.......................... = உயர்வு
மேட்டிமை............. = மேன்மை
மேதகு....................... = மேன்மையான
மேதாவி.................... = அறிவாளி
மேது.......................... = அறிவு
மேதையர்................ = புலவர்
மேதை....................... =அறிஞன், அறிவு, பேரறிவு, மேன்மை
------------------------------------------------------------------------------------------------
“பேச்சலர்” என்பவர் அறிவில் இளைய நிலையில் உள்ளவர் என்றால் “மாஸ்டர்” என்பவர் அறிவில்“மேன்மை” நிலை உடையவர் என்று கொள்ளலாம் அல்லவா ? எனவே “மாஸ்டர்” என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக “மேதை” என்பதை நாம் ஏற்கலாம். “மேதை” என்றால் அவர்அறிவின் உச்சத்தைத் தொட்டவர் என்று கருத வேண்டியதில்லை. உச்ச நிலை அடைந்தவரை “மாமேதை”என்று அழைக்கலாம் !
“டாக்டர்” என்ற ஆங்கிலச் சொல் தமிழில் “முனைவர்” என்று சொல்லாக்கம் பெற்றுள்ளது. இதனை நாம்அப்படியே ஏற்கலாம். “வாலை”, ”மேதை” என்ற புதிய சொற்களின் அடிப்படையில் பல்கலைக் கழகப்பட்டங்களைத் தமிழாக்கம் செய்வோமா !
-----------------------------------------------------------------------------------------------
|
====================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda.70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
{08-03-2016)
=====================================================