புதுச்சொல் புனைவோம் !
கடைசற் பொறி = LATHE
-------------------------------------------------------------------------------------
பணிமனைகளில் கடைசற் பொறியை
நீங்கள் பார்த்திருப்பீர்கள். மாழை உருளைகளை (Metal Round Rods) வைத்து பல வகையான பொருள்களை
இங்கு தயாரிக்கிறார்கள்.
ஊன்றாணி (Bolt) சுரை (Nut) ஆகியவை செய்திடவும், மரை வெட்டிடவும் (Thread Cutting) கடைசற் பொறிகளே
பயன்படுகின்றன.
பண்டைத் தமிழர்கள் கடைசற்
பொறியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் “
கோடு போழ் கடைநரும், திருமணி குயினரும்.......” என்னும் மதுரைக் காஞ்சி
பாடல் வரிகள் மூலம் இது உறுதிப்படுகிறது (பாடல் வரி. 511).
இக்காலத்தில் மின் மூலம்
இயக்கப்படும் கடைசற் பொறி, பண்டைக் காலத்தில் மனித ஆற்றல் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம்.
கடைசல் என்றால் என்ன ?கடைசற்பொறியின் ஒர் உறுப்பான
சிமிழியில் (Chuck)
மாழைத் துண்டு (Metal piece)கிடைவசத்தில்(Horizontal position) பிடிக்கப்பட்டு இருக்கும்.
சிமிழியும் மாழைத் துண்டும்
இடஞ் சுற்றாக [Anti-clockwise]
மின் விசையால்
சுழற்றப்படுகையில் உளிக்கம்பையில் (Toolpost) பொருத்தப்பட்டிருக்கும் கடைவு உளியானது (Turning Tool) மாழைத் துண்டினைத் துருவும்.
அதில் குழைவுகள்
ஏற்படுத்திக் குறிப்பிட்ட வடிவத்திற்குக் கொண்டு வரும். இதுவே கடைசல் எனப்படும்.
கடைசற் பொறியானது, இயக்கத்திலும், வடிவிலும், பயன்பாட்டிலும் காலந்தோறும்
மாறுதலுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
என்ன செய்ய வேண்டும்
என்பதைக் கடைசற் பொறியுடன் இணைந்த கணினியில் கட்டளை நிரல்களை உள்ளீடு
செய்துவிட்டால்,
எல்லாப் பணிகளையும் தானே
செய்து முடிக்கும் திறனுள்ள பொறிகள் இக்காலத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
இத்தகைய பயன்பாடு மிக்க
பொறியை ஆங்கிலத்தில் “ லேத் “ என்றும் தமிழில் கடைசற் பொறி என்றும் சொல்கிறோம். கடைசற் பொறியில்
பல்வேறு உறுப்புகள் உள்ளன. அவற்றின் தமிழ்ப் பெயர்களைத் தெரிந்து கொள்வோமா !
====================================================
LATHE |
= கடைசற் பொறி |
CNC LATHE |
= கணினி இயக்க கடைசற் பொறி |
LATHE BED |
= தளிமம் |
HEAD STOCK |
= நிலை மத்தகம் |
TAIL STOCK |
= இயங்கு மத்தகம் |
SADDLE |
= சேணம் |
CARRIAGE |
= பண்டியம் |
APRON |
= உளிப் பெட்டகம் |
LEAD SCREW |
= நடவைத் திருகு |
FEED ROD |
= ஊட்டத் தண்டு |
TOOL POST |
= உளிக் கம்பை |
CROSS SLIDE |
= ஊட்டக் கலிகை |
COMPOUND REST |
= சேர் மணை |
SWIVEL BASE |
= சுழல் இருக்கை |
TILTING WEDGE |
= சரிப்புத் தட்டு |
SPEED GEAR |
= கடுக்கப் பல்லி |
FEED GEAR |
= ஊட்டப் பல்லி |
SPINDLE |
= ஊடச்சு |
BACK PLATE |
= பின் தட்டு |
FACE PLATE |
= முன் தட்டு |
DOG CHUCK |
= ஞாளிச் சிமிழி |
TRUE CHUCK |
= மையச் சிமிழி |
LATHE DOG |
= கடைசல் ஞாளி |
LATHE CENTER |
= கடைசல் நள்ளி |
DEAD CENTER |
= நிலை நள்ளி |
LIVE CENTER |
= இயங்கு நள்ளி |
PINION |
= சிறகுப் பல்லி |
RAKE |
= பற்சட்டம் |
REVERSIBLE SWITCH |
= இடவல ஆளி |
==================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப்
பணி மன்றம்” முகநூல்.
{17-12-2015}
===================================================