புதுச்சொல் புனைவோம் !
MECHANIC = கம்மியர்
-------------------------------------------------------------------------------------------------
இயங்கும் உடைமைகள்
பழுதுபட்டால் அவற்றைச் சீர்திருத்தித் தருபவர்களிடம் கொண்டு செல்கிறோம்.
சீர்திருத்தித் தருபவர்களை “மெக்கானிக்” (MECHANIC) என்று பெயரிட்டு அழைக்கிறோம்.
யார் இந்த “மெக்கானிக்” ? பழுது நீக்கித் தரும்
அளவுக்குத் ”தொழில் நுட்ப அறிவு” பெற்றவர்.
முற்காலத்தில் “தொழில் நுட்ப
அறிவுத்திறன் பெற்றவர் ” எல்லோருமே ‘”கம்மியர்” என்று தான் அழைக்கப்பட்டனர்.
இக்காலத்தில் “தொழில் நுட்ப அறிவுத்
திறன்” பெற்றவர்கள் மட்டும்
அல்லாமல், அதைப் பயன்படுத்திப்
பழுது நீக்கித் தரும் தொழில் செய்பவர்களும் “மெக்கானிக்” என்று தான் சான்றோர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால் மேலோட்டமாகப்
பார்க்கும் போது “பழுது நீக்கித் தருபவர்” மட்டுமே, பெரும்பான்மை மக்களால் “மெக்கானிக்’ என அறியப்படுகிறார்.
“கை வல் கம்மியன் கவின்
பெறப் புனைந்த....” என்பது நெடுநல் வாடை பாடல் வரிகளின் ஒரு பகுதி (வரி;57).
“சிறியரும் பெரியரும்
கம்மியர்குழீஇ.....” என்பது மதுரைக் காஞ்சி என்னும் பழந்தமிழ் இலக்கியம் உரைக்கும்
காட்சி.
“கம்மியம்” தெரிந்த வகுப்பினர் என்ற
பொருளில் பிற்காலத்தில் ஒரு பிரிவு மக்கள் “கம்மாளர்” என்று அழைக்கப்பட்டனர்.
இஃது எப்படி ஆயினும், முற்காலத்தில் “தொழில் நுட்ப அறிவுத்
திறன்” பெற்றிருந்த மக்களைக்
குறிக்கும் பொதுச் சொல்லாக இருந்த “கம்மியர்” என்பதை, மீண்டும்உயிர்ப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வரலாமே !
சில அரசுத் துறைகளில் ”கம்மியர்” என்ற சொல் புழக்கத்திற்கு
வந்திருப்பதையும் கருத்திற் கொண்டு “கம்மியர்” என்ற சொல்லை “மெக்கானிக்” என்பதற்கு இணையான சொல்லாக ஏற்போம் !
“கம்மியர்” என்ற சொல்லின்
அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போம் !
========================================================
MECHANIC....................................= கம்மியர்
MOTOR MECHANIC....................= இயக்கூர்திக் கம்மியர்
INSTRUMENT MECHANIC........= கருவிக் கம்மியர்
RADIO MECHANIC.....................= வானொலிக் கம்மியர்
T.V. MECHANIC...........................= தொலைக் காட்சிக் கம்மியர்
DIESEL MECHANIC....................= தீசல் கம்மியர்
MECHANISM................................= கம்மியம்
MECHANICAL ENGINEERING= பொறியியல் கம்மியம்
========================================================
”DIESEL என்பது அறிவியலாளரின்
பெயர். டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்தவர். எனவே அவர் பெயர் ”தீசல்” என தமிழ்ப் பண்புகளுக்கு
ஏற்பச் சற்று மாற்றப்பட்டுள்ளது.
========================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.
=========================================================