புதுச்சொல் புனைவோம் !
ஈர்மம் = PAINT
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு கட்டடத்துக்கோ (BUILDING) அல்லது அறைகலன் போன்ற (FURNITURES) தளவாடங்களுக்கோ “பெயிண்ட்” அடித்தால், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மனதுக்கு இனிமையாக இருக்கிறது !
"பெயிண்ட்”டில் உள்ள நெய்ப்புத் தன்மை, பூசு தளத்தில் சீராகப் பரவி, இறுகி, தண்ணீரை, ஊடுருவி உள்ளே செல்ல விடாமல் தடுக்கிறது. கறையோ, துருவோ படியாமல் காப்புக் கவசமாகத் திகழ்கிறது !