புதுச்சொல் புனைவோம் !
FILE - அரம்
------------------------------------------------------------------------------------------------------
அரம் என்பது பழைய சொல் தான். திருவள்ளுவர் காலத்திலேயே இச்சொல் புழக்கத்தில் இருந்துள்ளது !
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது
உட்பகை உற்ற குடி ( குறள் 888 )
அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
“அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்” என்பது பொருநர் ஆற்றுப் படை ! (பாடல் வரி 144)
“நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)