புதுச்சொல் புனைவோம் !
CUTTER = அகழி
--------------------------------------------------------------------------------------------------------
அகழ்தல் என்ற சொல்லுக்கு தோண்டுதல், கல்லுதல், உழுதல், துருவுதல், அரிதல், அறுத்தல் எனப் பலவாறு பொருள் சொல்கிறது தமிழகராதி “.கிழங்கு கல்லி மாவெடுப்போம்” என்ற நாட்டுப் புறப் பாடலைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
”அகழ்வரைத் தாங்கும் நிலம் போல“ என்னும் குறள் “தோண்டுதல்” என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளது.
அகழப்பெற்று உருவாக்கப் பெற்றது அகழி. நகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு மன்னர்களால் கோட்டையைச் சுற்றித் தோண்டப் பெற்றுத் தண்ணீர் நிரப்பப்பெற்ற நீர் நிலைக்கு அகழி என்று பெயர்.