மாநிலத்தில் இல்லாத புதுமையைக் கேளடி என் கண்மணி !
பாலாற்றங்கரையில் ஒரு ஊர்; சேண்பாகை என்று பெயர் ! அந்த ஊர் எப்படிப் பட்டது தெரியுமா ? கோங்கு, சண்பகம், கொன்றை, பொற்கூவிளம், மா, தென்னை, வாழை, பலா ஆகிய மரங்கள் சூழ்ந்த சோலைகள் நிறைந்த வளமான ஊர் !
------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரை நிலைக்களமாக வைத்து, ஒரு புலவர் பாடல்
ஒன்றைப் படைத்திருக்கிறார்.
பாடல் வாயிலாகப் புலவர் பேசுகிறார் !
------------------------------------------------------------------------------------------------------------
”மாங்குயில் போன்ற
இனிய குரல் வளம் மிக்க பெண்ணே
! கேள் ! இந்த
மாநிலத்திலேயே இல்லாத ஒரு
புதுமை நிகழ்வு இவ்வூரில் நடந்தேறி இருக்கிறது ! ஆம் ! சேண்பாகையின்
நெருங்கிய தெரு
வழியாக யாவரும் பார்க்கும் வேளையிலே ஒரு எலி மீது யானை ஒன்று அமர்ந்து செல்கிறது. அதன்
அருகில் புல் சிதறிக் கிடக்கிறது
! என்ன வியப்பு இது ? இப்படியும்
நடக்குமா ? ”
இதோ அந்தப் பாடல் :-
------------------------------------------------------------------------------------------------------------
மாங்கு யின்மொழி கொண்ட வனிதையே
.....மாநி லத்தில் இலாத புதுமைகேள் !
கோங்கு சண்பகங் கொன்றைபொற் கூவிளம்
.....கோதின் மாதெங்கு வாழை வருக்கையார்
பாங்கு பால்கதி சூழுஞ்சேண் பாகைவாழ்
.....பன்னும் வீதியில் யாவரும் பார்க்கவே
வீங்கும் ஓரெலி மேலொரு யானைகொல்
....வெம்பு லிப்பல கொண்டு நடந்ததே !
------------------------------------------------------------------------------------------------------------
பாடலைச் சந்தி பிரித்து எழுதித் தருகிறேன் !
------------------------------------------------------------------------------------------------------------
மாங்குயில் மொழி கொண்ட வனிதையே
!
.....மாநிலத்தில் இலாத புதுமை கேள்
!
கோங்கு சண்பகம், கொன்றை, பொற்கூவிளம்,
.....கோது இல் மா, தெங்கு, வாழை, வருக்கை ஆர்,
பாங்கு பால்கதி சூழும் சேண்பாகை வாழ்
.....பன்னும் வீதியில் யாவரும் பார்க்கவே
வீங்கும் ஓர்
எலிமேல் ஒரு யானை கொல் !
. ....வெம் புலிப்
பல கொண்டு நடந்ததே !
------------------------------------------------------------------------------------------------------------
எலியின் மேல் யானை அமரமுடியுமா ? அப்படி அமர்ந்தால், எலி நசுங்கிக் கூழாகித் துறக்கம் (சொர்க்கம்) போயிருக்காதா ? எப்படி
அது இயலும் ? சொல்லுங்களேன் !
இந்த அழகிய பாடலை எழுதிய புலவர் பெயர் வரலாற்றில் பதிவாக வில்லை ! வரலாற்றின்
பக்கங்களுக்குள் வராத எத்துனையோ புலவர்களுள் இவரும் ஒருவர் !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
தி.பி: 2051, துலை (ஐப்பசி),24]
{09-11-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்
பணி மன்றம் முகநூற் குழுவில் வெளிடப் பெற்ற கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .