பக்கங்கள்

திங்கள், மே 03, 2021

நன்னூல் விதிகள் (14) உயிரீற்றுப் புணரியல் - குற்றுகரச் சிறப்பு விதி - திசைப்பெயர் புணர்ச்சி (நூற்பா.186)

 

                           உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                                 “’குற்றுகரஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.186. (திசைப் பெயர்ப் புணர்ச்சி)

 

திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலையீற்று உயிர்மெய்வ்வொற்று நீங்கலும்

கரம்” “வாத் திரிதலுமாம் பிற. (நூற்பா.186)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் இன்னொரு திசைப்பெயர் வந்து சேரின், நிலைமொழி ஈற்றில் நிற்கும்  உயிர்மெய்யும், அதற்கு முன்னதாக நிற்கும்கர மெய்யும் கெடும் (பக்.152) (நூற்பா.186)

 

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு (பக்.152)

வடக்கு + மேற்கு = வடமேற்கு (பக்.152)

(திசையொடு திசைவர உயிர்மெய்யும், ”கர ஒற்றும் கெட்டன)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் இன்னொரு சொல் வந்து சேரின், நிலைமொழி ஈற்றில் நிற்கும்  உயிர்மெய்யும், அதற்கு முன்னதாக நிற்கும்கர மெய்யும் கெடும் (பக்.152) (நூற்பா.186)

 

வடக்கு + திசை = வடதிசை (பக்.152)

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம். (பக்.152)

குணக்கு + திசை = குணதிசை (.152)

குடக்கு + திசை = குடதிசை (பக்.152)

(திசையொடு  பிறவர உயிர்மெய்யும், ”கர ஒற்றும் கெட்டன)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் இன்னொரு  திசைப்பெயர்  வந்து சேரின், நிலைமொழி ஈற்றில் நிற்கும்  உயிர்மெய்யும், அதற்கு முன்னதாக நிற்கும்கர மெய்யும் கெடும் (பக்.152) (நூற்பா.186)

 

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு (பக்.152)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு (பக்.152)

(திசையொடு திசைவர நிலைமொழி நின்ற உயிர்மெய் கெட்டு,, ”கர மெய்கர மெய் ஆகியது)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் பிற சொல் வந்து சேரின், நிலைமொழி ஈற்றில் நிற்கும்  உயிர்மெய் கெட்டு, அதற்கு முன்னதாக நிற்கும்கர மெய்  கர மெய்யாகும் (பக்.152) (நூற்பா.186)

 

தெற்கு + கடல் = தென்கடல் (பக்.152)

தெற்கு + மலை = தென்மலை (பக்.152)

( திசையொடு பிறவர  நிலைமொழி உயிர்மெய் கெட்டுகர மெய்கர மெய் ஆகியது.)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் பிற சொல் வந்து சேரின், நிலைமொழி ஈற்றில் நிற்கும்  உயிர்மெய் கெட்டு , அதற்கு முன்னதாக நிற்கும்கர மெய்  கர மெய்யாகும் (பக்.153) (நூற்பா.186)

 

மேற்கு + திசை = மேல்திசை (பக்.153)

மேற்கு + காற்று = மேல்காற்று (பக்.153)

( திசையொடு பிறவர  நிலைமொழி உயிர்மெய் கெட்டுகர மெய்கர மெய் ஆகியது.

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் பிற சொல் வந்து சேரின், பலவாறு விகற்பித்து வருதலுமுண்டு. (பக்.153) (நூற்பா.186)

 

மேற்கு + சேரி =  மேல்சேரி, மேற்சேரி, மேலைச்சேரி (பக்.153)

கிழக்கு +  திசை = கீழ்திசை, கீழ்த்திசை, கீழைத்திசை(பக்.153)

கிழக்கு + மேற்கு = கீழ்மேல்(பக்.153)

தெற்கு + வடக்கு = தென்வடல். (பக்.153)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் பிற சொல் வந்து சேரின், விகாரமின்றி வருதலுமுண்டு. (பக்.153) (நூற்பா.186)

 

வடக்கு + ஊர் = வடக்கூர். (பக்.153)

வடக்கு + மலை = வடக்குமலை (பக்.153)

தெற்கு + ஊர் = தெற்கூர். (பக்.153)

தெற்கு + மலை = தெற்குமலை. (பக்.153)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் இன்னொரு  திசைப்பெயர்  வந்து சேரின் பொது விதிப்படி இயல்பாதலும் உண்டு  (பக்.153) (நூற்பா.186)

 

தெற்கு + வடக்கு = தெற்குவடக்கு (பக்.153)

கிழக்கு + மேற்கு = கிழக்குமேற்கு. (பக்.153)

 

ஈற்றில்  குற்றுகரம் நிற்கும் திசைப் பெயருடன் வல்லெழுத்தில் தொடங்கும்  இன்னொரு  திசைப்பெயர்  வந்து சேரின் பொது விதிப்படி வலிமிகுதலும்  உண்டு  (பக்.153) (நூற்பா.186)

 

வடக்கு + தெற்கு = வடக்குத் தெற்கு (பக்.153)

மேற்கு + கிழக்கு = மேற்குக்கிழக்கு (பக்.153)

 

இலக்கணக் குறிப்பு.

 

வடகிழக்கு = வடக்கும் கிழக்கும் ஆயதோர் கோணம். இஃது உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.

வடதிசை = வடக்காகிய திசை.  இது பண்புத்தொகை

வடமலை= வடக்கின்கண் மலை . இஃது 7 –ஆம் வேற்றுமைத் தொகை.

தெற்குவடக்கு =தெற்கும் வடக்கும். இஃது உம்மைத் தொகை.


-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

-------------------------------------------------------------------------------------------------------------

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .