உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
“’குற்றுகர” ஈற்றுச் சிறப்பு
விதி
நூற்பா.184. (மென்றொடர், புணர்ச்சியில் வன்றொடர் ஆதல்)
மென்றொடர் மொழியுள் சில, வேற்றுமையில்
தம் இனம் வன்றொடர்
ஆகா மன்னே. (நூற்பா.184)
மென் தொடர் குற்றுகர மொழிகளுள் சில மட்டும் வருமொழி முதலில் நாற்கணமும் வருகையில், வேற்றுமைப் புணர்ச்சியில் வன்றொடர்க் குற்றியலுகர மொழிகளாக ஆகும். பெரும்பான்மை அவ்வாறு ஆகா. (பக்,149 & 150) (நூற்பா.184)
மருந்து + பை
= மருத்துப்பை (பக்.150) (நூற்பா.184)
கரும்பு + நாண்
= கருப்பு நாண். (பக்.150)
கரும்பு + வில்
= கருப்பு வில் (பக்.150)
கன்று + ஆ
= கற்றா. (பக்.150)
(வேற்றுமையில்
மென்றொடர் வன்றொடராயின)
மென் தொடர் குற்றுகர மொழிகளுள் பல, வருமொழி முதலில் நாற்கணமும் வருகையில், வேற்றுமைப் புணர்ச்சியில் மென்றொடர்க் குற்றியலுகர மொழிகளாகவே புணரும். (பக்.150) (நூற்பா.184)
வண்டு + கால் = வண்டுக்கால் (பக்.150) (நூற்பா.184)
பந்து + நலம் = பந்து
நலம். (பக்.150)
நண்டு + வளை = நண்டு
வளை. (பக்.150)
எறும்பு + ஒழுங்கு = எறும்பொழுங்கு . (பக்.150)
(வேற்றுமையில் மென்றொடர், மென்றொடராகவே புணரும். வன்றொடர்
ஆகா.)
மென் தொடர் குற்றுகர மொழிகளுள் சிறுபான்மை , வருமொழி முதலில் நாற்கணமும் வருகையில், அல்வழிப் புணர்ச்சியில் வன்றொடர்க் குற்றியலுகர மொழிகளாகப் புணரும். (பக்.150) (நூற்பா.184)
நஞ்சு + பகை
= நச்சுப்பகை . (பக்.150) (நூற்பா.184)
இரும்பு + மனம்
= இருப்பு மனம். (பக்.150)
(அல்வழியில்
மென்றொடர் வன்றொடர் ஆயின)
மென் தொடர் குற்றுகர மொழிகளுள் சிறுபான்மை , வருமொழி முதலில் நாற்கணமும் வருகையில், அல்வழி, வேற்றுமை இருவழியிலும் விகற்பித்து வருவதும் உண்டு. (பக்.150) (நூற்பா.184)
குரங்கு + குட்டி
= குரங்குக் குட்டி; குரக்குக்
குட்டி.(பக்.150)
பாம்பு + தோல்
= பாம்புத் தோல்; பாப்புத்
தோல் (பக்.150)
(வேற்றுமையில்
விகற்பித்து வந்தன)
அன்பு + தளை
= அன்புத் தளை; அற்புத்
தளை (பக்.150)
(அல்வழியில்
விகற்பித்து வந்தது)
உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
“’குற்றுகர” ஈற்றுச் சிறப்பு
விதி
நூற்பா.185. (மென்றொடர், புணர்ச்சியில் வன்றொடர் ஆதல்)
”ஐ”ஈற்று உடைக் குற்றுகரமும் உள. (நூற்பா.185)
மென்றொடர்க் குற்றுகர மொழிகளுள் நாற்கணமும் புணருங்கால், அல்வழியில் ”ஐ”கரச் சாரியையை இறுதியிலே பெற்று வருவனவும் உள.(பக்.151) (நூற்பா.185)
பண்டு + காலம்
= பண்டைக்காலம் (பக்.151) (நூற்பா.185)
இன்று + நாள்
= இற்றைநாள் (பக்.151)
(அல்வழியில்
குற்றுகரம் ஐகாரச் சாரியை பெற்று வந்தது)
மென்றொடர்க் குற்றுகர மொழிகளுள் நாற்கணமும் புணருங்கால், வேற்றுமை வழியில் ”ஐ”கரச் சாரியையை இறுதியிலே பெற்று வருவனவும் உள.(பக்.151) (நூற்பா.185)
அன்று = கூலி
= அற்றைக்கூலி (பக்.151)
இன்று + நலம்
+ இற்றைநலம் (பக்.151)
(வேற்றுமையில்
குற்றுகரம் ஐகாரச் சாரியை பெற்று வந்தது)
வன்றொடர்க் குற்றுகர மொழிகளுள் வன்கணம் புணருங்கால், வேற்றுமை வழியில் ”ஐ”கரச் சாரியை பெற்று வருவனவும் உள.(பக்.151) (நூற்பா.185)
நேற்று + பொழுது
= நேற்றைப் பொழுது (பக்.151)
நேற்று + கூலி
= நேற்றைக் கூலி (பக்.151)
மென் தொடர்க் குற்றுகர மொழிகளுள் வருமொழி நோக்காது ஒருமொழியாக நின்று ”ஐ”கரச் சாரியை பெற்று வருவனவும் உள.(பக்.151) (நூற்பா.185)
ஒன்று = ஐ
= ஒற்றை (பக்.151)
இரண்டு + ஐ
= இரட்டை.(பக்.151)
மென் தொடர்க் குற்றுகர மொழிகளுள் வருமொழி நோக்காது தொடர் மொழியாக நின்று ”ஐ”கரச் சாரியை பெற்று வருவனவும் உள.(பக்.151) (நூற்பா.185)
ஒரு + ஆண்டு = ஓராண்டு – ஓராட்டை (பக்.151)
இரு + ஆண்டு
= ஈராண்டு – ஈராட்டை (பக்.151)
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
[veda70.vv@gmail.com[
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .