பக்கங்கள்

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (03) உயிரீற்றுப் புணரியல் - உயிர் முன் வல்லினம் புணர்தல் (நூற்பா.165)

 

               உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                       உயிரீற்று முன் வல்லினம்

 

நூற்பா.165. (உயிரீற்றின் முன் வல்லினம் புணர்தல்)

 

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

, , , ,  மிகும் விதவாதன மன்னே. (நூற்பா.165)

 

இயல்பினாலும் விதியினாலும், ஈற்றில்நின்ற உயிர்களின் முன்   , , , , ஆகியவை பெரும்பாலும் மிகும். (பக்.133) (நூற்பா.165)

 

(உயர்திணைப் பெயர்முன் வேற்றுமையில் வல்லெழுத்துகள் மிகும்)

நம்பி + கொற்றன் =நம்பிக் கொற்றன்  (நம்பியின் கொற்றன்) (பக்.133)

ஆடூஉ = கை = ஆடூக் கை  (ஆணினது கை) (பக்.133) (நூற்பா.165)

 

(உயர்திணைப் பெயர்முன் அல்வழியில் வல்லெழுத்துகள் மிகும்)

ஆடூக் குறியன் (பக்.133) (நூற்பா.165)

செட்டித் தெரு. (பக்.133)

 

(பொதுப்பெயர் முன் அல்வழியில் வல்லெழுத்து மிகும்)

சாத்திப் பெண் (பக்.133) (நூற்பா.165)

 

(அஃறிணைப் பெயர் முன் அல்வழியில் வல்லெழுத்துகள் மிகும்)

தீப் பெரிது (பக்.133) (நூற்பா.165)

கொக்குக் கடிது (பக்.133)

கொண்மூக் கரிது (பக்.133)

சேச் சிறிது (பக்.133)

ஒற்றைக் கை (பக்.133)

வட்டக் கல்(பக்.133)

தாழக் கோல் (பக்.133)

 

(அஃறிணைப் பெயர் முன் வேற்றுமையில்  வல்லெழுத்துகள் மிகும்)

பலாக் காய், (பக்.133) (நூற்பா.165)

கிளிச் சிறை, (பக்.133)

தீக் கடுமை,  (பக்.133)

கடுக் காய், (பக்.133)

கொக்குக் கால் (பக்.133)

வண்டுக்கால் (பக்.133)

கொண்மூக் குழாம் (பக்.133)

தினைத் தாள் (பக்.133)

 

(தெரிநிலை வினையெச்சத்தின் முன் வலி மிகும்)(பக்.133)

ஆடிக் கொண்டான் (பக்.133) (நூற்பா.165)

ஆடாக் கொண்டான் (பக்.133)

பூத்துக் காய்த்தது (பக்.133)

 

(குறிப்பு  வினையெச்சத்தின் முன் வலி மிகும்)(பக்.133)

பொள்ளெனப் பறந்தது. (விரைந்து பறந்தது) (நூற்பா.165)

சாலப் பகைத்தது.

இருளின்றிக் கண்டார்

பொருளன்றிக் காணார்.

 

(தெரிநிலை வினைமுற்றின் முன் வல்லெழுத்து மிகும் (பக்.133)

கூவிற்றுக் கோழி. (பக்.133) (நூற்பா.165)

விடிந்தது பொழுது.

எழுந்தது கூக்குரல்

 

(குறிப்பு  வினைமுற்றின் முன் வல்லெழுத்து மிகும் (பக்.133)

குண்டுக்கட்டுக் களிறு (பக்.133) (நூற்பா.165)

 

(இடைச்சொல்லின் முன் வல்லெழுத்து மிகும்) (பக்.134)

ஆங்குக் கொண்டான் (பக்.134) (நூற்பா.165)

இனிச் செய்வேன் (பக்.134)

மற்றைத் தெரு (பக்.134)

 

(உரிச்சொல்லின் முன் வல்லெழுத்து மிகும்) (பக்.134)

தவப்பெரியன் (பக்.134) (நூற்பா.165)

கடிக்கமலம் (பக்.134)

பணைத்தோள் (பக்.134)

சாலச்சிறந்தது) (பக்.134)

 

(திசைச்சொல்லின் முன் வல்லெழுத்து மிகும்) (பக்.134)

சொன்றிக் குழிசி (சோற்றுப் பானை) (பக்.134) (நூற்பா.165)

 

(வடசொல்லின் முன் வல்லெழுத்து மிகும்) (பக்.134)

கங்கைக் கரை (பக்.134) (நூற்பா.165)

சிங்கப் பார்வை

 

இயல்பினாலும் விதியினாலும், ஈற்றில் நின்ற உயிர்களின் முன்  , , , , ஆகியவை சிறுபான்மை இடங்களில் மிகா. (பக்.133

 

ஏரிகரை (பக்.134) (நூற்பா.165)

மலைகிழவோனே (பக்.134)

கூப்புகரம் (பக்.134)

நாட்டுபுகழ் (பக்.134)

(வேற்றுமையிலும் அல்வழியிலும் மிகாவாயின) (பக்.134)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை



வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

-------------------------------------------------------------------------------------------------------------



1 கருத்து:

  1. ஏரி+ கரை உச்சரிக்கும் போது வலிமிகவில்லையா...மேலும் ஏரியினது கரை... 6 ஆம் வேற்றுமைத்தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருப்பின் வலிமிகும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .