பக்கங்கள்

▼

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (02) உயிரீற்றுப் புணரியல் - உயிர் முன் உயிர் புணர்தல் (நூற்பா.162)

 

                          உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி.

 

                             (உயிர் முன் உயிர் புணர்தல்)

நூற்பா.162. (உயிர் முன் உயிர் புணர்தல்)

 

 

’இ’, ’ஈ’, ‘ஐ’ வழி ‘ய’வ்வும்ம ஏனை

உயிர் வழி ‘வ’வ்வும் ‘ஏ’முன் இவ்விருமையும்

உயிர் வரின் உடம்படு மெய்யென்று ஆகும். (நூற்பா.162)

 

உடம்படு மெய்யாக “யகரம்” தோன்றல்     (நூற்பா.162)

 

நிலைமொழி ஈற்றில் ‘’இகர’, ‘ஈகார’, ‘ஐகாரங்கள் நின்று வருமொழி முதலில் ‘உயிரெழுத்து  வந்தால் ’ இரண்டு சொற்களையும் இணைக்க இடையில் ”யகரம்” உடம்படு மெய்யாக வரும். (பக்.129) (நூற்பா.162)

 

மணி + அழகிது = மணியழகிது.(பக்.130) (நூற்பா.162)

தீ + அழகிது = தீயழகிது (பக்.130)

மலை + அழகிது = மலையழகிது. (பக்.130)

(அல்வழியில் இ, ஈ, ஐ முன் ‘யகரம்’ உடம்படு மெய்யாக வந்தது)(பக்.130)

 

மணி = அழகு = மணியழகு (பக்.130) (நூற்பா.162)

தீ + அழகு = தீயழகு (பக்.130)

மலை + அழகு = மலையழகு (பக்.130)

 

(வேற்றுமையில் இ, ஈ, ஐ முன் ‘யகரம்’ உடம்படு பெய்யாக  வந்தது) (பக்.130)

 

உடம்படு மெய்யாக “வகரம்” தோன்றல் (நூற்பா.162)

 

நிலைமொழி ஈற்றில்  இ, ஈ, ஐ தவிர்த்து ஏனைய உயிர்களின் முன்          ( அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய )உயிரெழுத்துகள் நின்று  வருமொழி முதலில்  உயிரெழுத்து வந்தால், இரு சொற்களையும் இணைக்க இடையில் ‘வகரம்’ உடம்படு மெய்யாகத் தோன்றும் (பக்.129)

 

விள + அழகு = விளவழகு (பக்.130) (நூற்பா.162)

வந்த + இருளன் = வந்தவிருளன் (பக்.130)

காணா + உறவு = காணாவுறவு.

கடு + அடி = கடுவடி

பூ + ஆடு = பூவாடு

நொ + அழகு = நொவ்வழகு.

கௌ + அடி = கௌவடி

 

உடம்படு மெய்யாக ”யகரம் “ அல்லது “வகரம்” தோன்றல் (நூற்பா.162)

 

நிலைமொழி ஈற்றில் ‘ஏகாரம்” வந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால், இடையில் ‘யகரம்’ அல்லது ‘வகரம்’ உடம்படு மெய்யாகத் தோன்றும் (பக்.129)

 

அவனே + அழகன் = அவனேயழகன்(நூற்பா.162)

(இடைச்சொல்லாகிய “ஏ’ முன் ’யகரம்’ வந்தது.)(பக்.130)

 

ஏ + எலாம் = ஏவெலாம் (நூற்பா.162)

(ஓரெழுத்து ஒருமொழியாகிய ‘ஏ’முன் ‘யகரம்’ வந்தது (பக்.130)

 

சே + அடி = சேயடி, சேவடி. (நூற்பா.162)

(’சே முன் ‘யகரமும்’, ‘வகரமும்’ வந்தன.


-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .