பக்கங்கள்

வெள்ளி, அக்டோபர் 11, 2019

இலக்கணம் (12) அல்ல; அன்று; இல்லை; அல்ல - எது எந்த இடத்தில் வரும் !

பொதுவகைப் பிழை சில !

நம் பேச்சிலும் எழுத்திலும் நிலவிவரும் தவறான வழக்கு பற்றி இப்போது பார்ப்போம் !

------------------------------------------------------------------------------------------------------------
     
      தவறு ! - - - - - - -  சரி !

-----------------------------------------------------------------------------------------------------------
    
    சிலவு.....................= செலவு (செல்லுதல்)
    சில்லரை..............= சில்லறை (சில்லு சில்லாக 
                                        அறுத்தல்)
    துகை.....................= தொகை (தொகுத்தல்)
    சுவற்றில்..............= சுவரில் (சுவர் + இல்)
    கண்டறாவி.........= கண்ணராவி (கண்களை
                                        அராவுதல்)
    வரையரை...........= வரையறை (வரை யறுத்தல்)
    வகையரா............= வகையறா (வகை யறுத்தல்)
    கோர்வை..............= கோவை (கோ + )
    கோர்த்து...............= கோத்து (கோ + து)
    பூர்த்தல்.................= பூத்தல் (பூ = பகுதி)
    முயற்சித்தான்...= முயன்றான் (முயல் =பகுதி)
    சம்மந்தம்.............= சம்பந்தம் (நல்ல உறவு)
    குடுத்தான்...........= கொடுத்தான்
    கச்சாத்து..............= கைச்சாற்று
    புஸ்தகம்..............= புத்தகம்

----------------------------------------------------------------------------------------------------------

முதல் வரிசையில் உள்ளவை தவறு
இரண்டாவது வரிசையில் உள்ளவையே சரியான வழக்கு ஆகும் !

---------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில தவறுகள்
---------------------------------------

எள்ளிலிருந்து  எடுபடும்  நெய் எண்ணெய்”  (எள் + நெய் =  எண்ணெய்எனப்
பெற்றது.முதலில் நம் நாட்டில்  நெய்ப்புப்  பொருள், விதைகளிலிருந்து எடுக்கப் பெற்றது, எள் விதையிலிருந்தே என்னும் உண்மையை இச் சொல் விளம்பிக்  கொண்டிருக்கிறது. இதனைஎண்ணெய்என்று சொல்வதே  சரி.  எண்ணைதவறாவதுடன், சொல்லின் வரலாற்று உண்மை ஒன்றை மறைத்து விடுகிறது !

அருகு = நெருங்கு. அருகாமை = நெருங்காமை. எனவே, ”அருகாமையில் என்பது தொலைவில் உள்ளதையே குறிக்கும். ஆனால், அருகில் இருப்பதைக் குறிக்க இச் சொல்லைப் பயன் படுத்துகிறோம். இது தவறு ! ”அருகில்என்று தான் சொல்ல வேண்டுமேயன்றிஅருகாமையில்என்று சொல்வது பிழை !

-------------------------------------------------------------------------------------------------------------

இல்லை,  அல்ல , என்ன வேறுபாடு ?

-----------------------------------------------------------------------------------------------------------
அவை இல்லை:- அந்தப் பொருள்கள் குறித்த இடத்தில் இல்லை என்று பொருள் !

அவை அல்ல:-  அந்தப் பொருள், நாம் எண்ணும் பொருள் அல்ல, வேறு பொருள் என்றாகும் !

ஆனால், இவ் வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துவது  வழக்கமாகிவிட்டது. வேலன் எதிரே இருக்கின்றான்அவனைப் பார்த்து, அவர் முருகன்  அல்லன் என்று கூறுவதே பொருந்தும். அவன் முருகன் இல்லை என்பது தவறு !

-------------------------------------------------------------------------------------------------------------

அன்று, அல்ல, அல்லன், அல்லள், அல்லர் : எதை எங்கே பயன்படுத்துவது ?

-------------------------------------------------------------------------------------------------------------

அது அன்று !
அவை அல்ல !
அவன் அல்லன் !
அவள் அல்லள் !
அவர் அல்லர் !

------------------------------------------------------------------------------------------------------------

இவ் வேறுபாட்டைச் சிறிதும் உன்னாமலேயேஅல்லஎன்னும் சொல்லை எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். அது அல்ல, அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, என்பன தவறு. அவை அல்ல  என்பது மட்டுமே சரி !

-----------------------------------------------------------------------------------------------------------
பிழை.................................சரி
-----------------------------------------------
அதினால்...........= அதனால்
பேஜார்................= பேய்சார் (பேய்ச் 
                                   சார்ந்த நிலை, பேயினால்
                                   பீடிக்கப்பட்ட நிலை)
காக்ஷி..................= காட்சி (காண் =பகுதி)
மாக்ஷி..................= மாண் = பகுதி)
மண்டபம்...........= மண்டகம் (மண்டுகிற /
                                   மக்கள் பலராக 
                                   நெருங்குகிற    இடம்)
                
----------------------------------------------------------------------------------------------------------

கல்வெட்டில்மண்டகம்என்ற சொல்லே வழங்கப் பெற்றிருக்கிறது. “மண்டகப் படிஎன்னும் சொல்லையும் காண்க !

----------------------------------------------------------------------------------------------------------

பொருத்தமான சொற்கள் இடாமல் எழுதுவதும் தவறு :

சரி  : குழப்பம் ஏற்பட்டது
தவறு: குழப்பம் நிலவிற்று.

சரி  : தீமை செய்தான்.
தவறு: தீமை புரிந்தான்.

சரி   ; துன்பம் நேர்ந்தது.
தவறு: துன்பம் வாய்த்தது.

சரி   : நல்லது செய்ய ஊக்கினான்.
தவறு: நல்லது செய்யத் தூண்டினான்

சரி   : தண்டனை விதித்தார்.
தவறு: தண்டனை அளித்தார்.

----------------------------------------------------------------------------------------------------------

(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
தமிழில் எழுதுவோம்
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[திருவள்ளுவர் ஆண்டு: 2050, மடங்கல் (ஆவணி) 01.]
{18-08-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .