பக்கங்கள்

▼

வெள்ளி, அக்டோபர் 11, 2019

இலக்கணம் (11) 1-ஆவது, 1 -ஆம், 1 -ல் என்பவை சரியே !


பொதுவகைப் பிழை சில !



(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)

----------------------------------------------------------------------------------------------------------

” 1-ம், 2-ம், 3-ம், நல்ல நாள்கள் “ என்னும் இடத்தில் ” 1-ம், 2-ம், 3-ம் “ என்று பயன்படுத்தலாம். இவை தவறல்ல !

” 1-ஆம் நாள், 2-ஆம்  நாள் “  என்று  சொல்லும் போது அப்படியே ” 1-ஆம் நாள், 2-ஆம் நாள் “ என்றுதான் எழுத வேண்டும். சிலர் எழுதுகையில் “நான் அடுத்த மாதம் 7ம் தேதி வருகிறேன்” என்று எழுதுகிறார்கள். இது தவறு; “7ம் தேதி” என்பதை ”7-ஆம் தேதி” என்றுதான் எழுத வேண்டும் !

அங்ஙனமே, ” 1-ஆவது, 2-ஆவது  “ என்று எழுதுவதே சரி. ” 1-வது, 2-வது “ என்று நாம் உச்சரிப்பதுமில்லையே ! எனவே அது  தவறு. ”50வது நாள்” என்று எழுதக் கூடாது. “50-ஆவது நாள்” என்று தான் எழுத வேண்டும் !

”1-ல்” என்பதை ”1-இல்” என்று எழுதுவது வேண்டா. ”1”- இதனை “ஒன்று” என்று உச்சரிக்கிறோம். பக்கத்தில் ”ல்” சேர்த்தால் சாலும். ”1-இல்” என்று எழுதினால் “ஒன்று இல்” என்று உச்சரிக்க வேண்டி வருமே ? அது தவறன்றோ ?


----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்  பணிமன்றம்.
[தி.ஆ:2050: மடங்கல் (ஆவணி) 10]
{27-08-2019}

------------------------------------------------------------------------------------------------------------
   
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------



1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .