பால் வேறுபாடு, “ல” “ள” வேறுபாடு
மரபு வழுச் சொற்கள்
ஆண்பால்....................... பெண்பால்
----------------------------------------------------------
அச்சன்............................= அச்சி
அப்பன்............................=. அம்மை
அமைச்சன்...................= அமைச்சி
அம்மான்........................= அத்தை
ஆடவன்..........................= பெண்டு
உழவன்...........................= உழத்தி
ஊமையன்.....................= ஊமைச்சி
எம்பி (என் தம்பி).........= எங்கை (என் தங்கை)
ஒருவன்............................= ஒருத்தி
கடுவன்............................= மந்தி
கடா....................................= கிடாரி
கலை (மான்)..................= பிணை
களிறு (யானை)...........= பிடி
காளை..............................= பசு
கூனன்..............................= கூனி
சிவன்................................= சிவை
சிறுக்கன்.........................= சிறுக்கி
சிறுவன்............................= சிறுமி
சிற்றப்பன்.......................= சிற்றன்னை
சேங்கன்று.......................= கிடாரி
சேவல்................................= பெட்டை
தமையன்.........................= தமக்கை
தனயன்.............................= தனயை
தனவான்..........................= தனவந்தி
குட்டையன்.....................= குட்டைச்சி
கூகை (ஆந்தை)............= போத்து
கொழுந்தன்....................= கொழுந்தி
சீமான்................................= சீமாட்டி
திருமால்...........................= திருமகள்
திருவாளன்......................= திருவாட்டி
தேவன்..............................= தேவி
நண்பன்...........................= நண்பி
நான்முகன்.....................= கலைமகள்
பண்டிதன்.......................= பண்டிதை
பிரான்...............................= பிராட்டி
புதல்வன்..........................= புதல்வி
புலவன்.............................= புலத்தி
பெருமான்.......................= பெருமாட்டி
பேரன்................................= பேத்தி
பொன்னன்.....................= பொன்னி
மணவாளன்...................= மணவாட்டி
மணாளன்.......................= மணாட்டி
மாணாக்கன்.................= மாணாக்கி
முடவன்...........................= முடத்தி
மூதாளன்........................= மூதாட்டி
மூத்தான்........................= மூத்தாள்
வீரன்................................= வீரி
வேளாளன்.....................= வேளாட்டி
லகர, ளகரச் சொற்களின் வேறுபாடு
அலி.................................= பேடு
அளி................................= கொடு
ஒலி................................= சப்தம்
ஒளி................................= வெளிச்சம்
கலி.................................= கடல்
களி.................................= ஒரு உணவு
கூலி...............................= சம்பளம்
கூளி...............................= பேய்
சலி.................................= சல்லடையால் பிரி
சளி.................................= கோழை
தாலி..............................= மாங்கல்யம்
தாளி..............................= மணமூட்டு
துலி................................= பெண் ஆமை
துளி................................= திவலை
நலி.................................= இளைப்புறு
நளி.................................= குளிர்ச்சி
புலி.................................= வரிமா
புளி.................................= புளியமரக் கனி
பொலி............................= தானியக் குவியல்
பொளி............................= உளியாலிட்ட துளை
வலி.................................= துன்பம்
வளி.................................= காற்று
வாலி..............................= வாலுள்ளவன்
வாளி..............................= நீர்க் கலன்
மரபு வழுச் சொற்கள்
தவறு........................................சரி
குதிரைக்கன்று................=.குதிரைக்குட்டி
யானைப்பணியன்.........= யானைப்பாகன்
பசுக்குட்டி..........................= பசுங்கன்று
தென்னங்கன்று..............= தென்னம்பிள்ளை
வேப்பஞ்செடி...................= வேப்பங்கன்று
பனம்பிஞ்சு.......................= பனங்குரும்பை
தென்னம்பிஞ்சு..............= தென்னங்குரும்பை
புளியங்குரும்பை..........= புளியம்பிஞ்சு
மாந்தழை..........................= மாவிலை
பனையிலை.....................= பனையோலை
குருவிக்குட்டி...................= குருவிக்குஞ்சு
கீரிக்குஞ்சு........................=
கீரிப்பிள்ளை
நாய்க்கன்று.....................=
நாய்க்குட்டி
மான்குட்டி........................=
மான்கன்று
யானைச் சாணம்..........= யானை இலத்தி
எருமை இலத்தி..............= எருமைச் சாணம்
ஆட்டுச் சாணம்.............=
ஆட்டுப் பிழுக்கை
கழுதைச் சாணம்.........= கழுதை விட்டை
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்,
{29-12-2018}
----------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .