பக்கங்கள்

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (16) அய்யாக்கண்ணு - பெயரின் பொருள் தெரியுமா ?

நெற்றிக் கண்ணுடைய சிவன் பெயர்தான் “அய்யாக்கண்ணு” !


அய்யாக்கண்ணு என்பது என் நண்பரின் பெயர். இது தமிழ்ப் பெயர் தான். இப்பெயருக்குப் பொருள் என்ன ? அய்யன் என்னும் பெயர் சிவனைக் குறிக்கும். சிவனுக்கு நெற்றியில் ஒரு கண் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் !

சிவபெருமானின் முகத்திலுள்ள இரு கண்களை விட அவரது நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணுக்குச் சிறப்பு உண்டு. இந்த மூன்றாவது கண்ணுக்கு அறிவுவிழி (ஞானக் கண்) என்று பெயர். இந்த நெற்றிக் கண்ணினால் தான் காமவேள் எரிக்கப்பட்டான். நக்கீரர்  தண்டிக்கப்பட்டார் !

அய்யனுடைய (சிவனுடைய) நெற்றிக்கண்ணுக்கு இருக்கும் இந்த சிறப்பினால் தான், அய்யன் + கண் = அய்யன்கண் -அய்யாக்கண் - அய்யாக்கண்ணு என்ற பெயர் தோன்றியது. அய்யாக்கண்ணு என்றால் சிவனின் நெற்றிக்கண் என்று பொருள் !

கானக வேடன் தன் கண்களைப் பெயர்த்து, அரத்தம் வழியும் சிவபெருமான் சிலையில் இருந்த கண்களின் மீது அப்பியதால் கண்ணப்பன் என்ற பெயர் தோன்றவில்லை. (நெற்றிக்) கண்ணுடைய அப்பன் (ஐயன்) என்பதால்தான் கண்ணப்பன் என்ற பெயர் வந்தது !

அய்யன், கண்ணு என்னும் இரு சொற்களையும் தனித் தனியாகவோ அல்லது அல்லது அவற்றின் இணைவையோ அடிப்படையாகக் கொண்டு உருவான மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான அழகிய தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !
----------------------------------------------------------------------------------------------------------
    
       ·         அய்யாக்கண்ணு.............................= அழல்வண்ணன்
       ·         அய்யாச்சாமி...................................= அம்மையப்பன்
       ·         அய்யாத்துரை.................................= அருள்நம்பி
       ·         அய்யம்பெருமாள்..........................= அம்பலவாணன்
       ·         கண்ணுச்சாமி.................................= கூத்தபிரான்
       ·         கண்ணப்பன்...................................= கூத்தரசன்
       ·         கண்ணையன்.................................= பெருந்தேவன்
       ·         சாமிக்கண்ணு................................= இன்பக்கூத்தன்
       ·         சாமிஅய்யா.....................................= பிறைமுடி
       ·         ஞானக்கண்ணு...............................= அறிவுக்கரசு
       ·         முத்துக்கண்ணு..............................= மணிவிழி
       ·         மாரிக்கண்ணு................................= முகில்விழி
       ·         வைரக்கண்ணு...............................= சுடர்விழி

   
---------------------------------------------------------------------------------------------------------
                                                 ஆக்கம் + இடுகை,
                                              வை.வேதரெத்தினம்,
                                                       ஆட்சியர்,
                                             தமிழ்ப் பணிமன்றம்.
                                                       {10-08-2018}
---------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .