பக்கங்கள்

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

பெயர் விளக்கம் (17)சுந்தர் - பெயரின் பொருள் தெரியுமா ?

தமிழில் ‘அழகு’, வடமொழியில் ‘சுந்தர்’ !



சுந்தர் என்னும் வடமொழிச் சொல் தமிழில் சுந்தரம் என மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. சுந்தரம் என்ற சொல்லுக்கு அழகு, நிறம், நன்மை, இனிமை, வனப்பு என பல பொருள்கள் உள்ளன. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கையில் சுந்தரம் என்னும் சொல்லுடன் முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்க்கப்பட்டு பல பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புழக்கத்தில் இருந்து வரும் இப்பெயர்களையும் அவற்றுக்கான தூய தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா ?

--------------------------------------------------------------------------------------------------------

அழகுசுந்தரம்.....................................................= எழில்மாறன்
இராமசுந்தரம் (இராமம்=அழகு)....................= எழிலழகன்
கலியாணசுந்தரம் (கலியாணம்=மணம்)....= மணவழகன்
கல்யாணசுந்தரம்(கல்யாணம்=பொன்)......= பொன்னழகு
சியாம்சுந்தர்......................................................= பசுமைவண்ணன்
சிவசுந்தரம் (சிவம்=இறை).............................= இறையழகன்
சுந்தரபாண்டியன்.(சுந்தரம்=நன்மை)........= நன்மாறன்
சுந்தரம் (சுந்தர்=எழில்)....................................= எழிலன்
சுந்தரவல்லி (வல்லி=கொடி)..........................= எழிற்கொடி
சுந்தர் (சுந்தர்=அழகு)......................................= எழிலன்
சுந்தர்பிச்சை.....................................................= அழகுசிவன்
சுந்தர்ராஜ் (சுந்தரம்=எழில்)..........................= எழிலரசு
சோமசுந்தரம் (சோமம்=மதி / நிலா)..........= மதியழகன்
சௌந்தரம் (சௌந்தரம்=எழில்)..................= எழிலரசி
சௌந்தரவல்லி (வல்லி=கொடி)............. ....= எழிற்கொடி
சௌந்தர்ராஜ் (சௌந்தரம்=அழகு)........... = அழகரசன்.
ஞானசுந்தரம் (ஞானம்=அறிவு)....................= அறிவழகன்
பாலசுந்தரம் (பாலன்=இளவயதினன்).......= இளவழகன்

---------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
(12-08-2018)
      ----------------------------------------------------------------------------------------------------
        ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !
       ----------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .