பக்கங்கள்

செவ்வாய், டிசம்பர் 15, 2015

புதிய தமிழ்ச் சொல் (21) ஈர்மம் ( PAINT )

புதுச்சொல் புனைவோம் !


ஈர்மம் = PAINT
----------------------------------------------------------------------------------------------------------

ஒரு கட்டடத்துக்கோ (BUILDING) அல்லது அறைகலன் போன்ற (FURNITURES) தளவாடங்களுக்கோ “பெயிண்ட்” அடித்தால், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மனதுக்கு இனிமையாக இருக்கிறது !

"பெயிண்ட்”டில் உள்ள நெய்ப்புத் தன்மை, பூசு தளத்தில் சீராகப் பரவி,  இறுகி, தண்ணீரை, ஊடுருவி உள்ளே செல்ல விடாமல் தடுக்கிறது. கறையோ, துருவோ படியாமல் காப்புக் கவசமாகத் திகழ்கிறது !

“பெயிண்ட்”டுக்குத் தமிழில் என்ன பெயரிட முடியும் ? “வண்ணப் பூச்சு” என்பது நீண்ட சொல். “வண்ணக் கலவை” என்பதும் நீண்ட சொல்லே ! “வண்ணப் பூச்சு”, “வண்ணக் கலவை” என்ற சொற்களின் அடிப்படையில் தொடர்புடைய பிற சொற்களை உருவாக்குவதும் கடினமான பணியாக உள்ளது !

புதிய சொல் ஒன்று உருவாக்கினால் நலமாக இருக்கும் அல்லவா ?

தமிழில் “ஈர்” என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் “நெய்ப்பு”, ”குளிர்ச்சி”, “இனிமை” “கவர்ந்து இழுத்தல்” என்ற பொருள்களும் உள்ளன ! 

”நெய்ப்பு” என்றால், ”பள பளப்பு” என்றும் பொருள் சொல்கிறது தமிழ் அகராதி. “பெயிண்ட்”டுக்கு இந்த எல்லாக் குணங்களுமே உள்ளன. இத்தகைய குணங்களுடைய ”பெயிண்ட்”டை”ஈர்மம்” (ஈர்+ம்+அம்=ஈர்மம்) என்று ஏன் சொல்லக் கூடாது ? 

”ஈர்மம்” என்ற சொல் வடிவில் சிறியது. பொருளில் ஆழ்மை உடையது. ஒலிப்பதில் இனிமை உடையது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் ? 

“ஈர்மம்” என்ற சொல்லினை வைத்து உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போமா ?


=============================================================



PAINT = ஈர்மம்
PAINTER = ஈர்மர்
PAINTING = ஈர்மை
PAINTING BRUSH = ஈர்மைத் தூரிகை
RED PAINT = சிவப்பு ஈர்மம்
PAINT DEALERS = ஈர்ம வணிகர்
PAINT MANUFACTURER = ஈர்ம வனைவர்
PAINT FACTORY = ஈர்ம ஆலை
PAINT COATING  = ஈர்மப் பூச்சு



=============================================================

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூல்.

=============================================================




5 கருத்துகள்:

  1. மிக மிக அருமை.

    உங்கள் பணி சிறப்பானது என்பதற்கு இதுபோன்ற சொல்லாக்கங்கள் எடுத்துக்காட்டு.

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரை எனது ஊக்கத்திற்கு வளமூட்டும் ! மிக்க நன்றி ! தங்கள் கருத்துரையயுடன், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்து அனுப்பி வையுங்கள் !

      நீக்கு
    2. தங்கள் கருத்துரை எனது ஊக்கத்திற்கு வளமூட்டும் ! மிக்க நன்றி ! தங்கள் கருத்துரையயுடன், தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்து அனுப்பி வையுங்கள் !

      நீக்கு
  2. நல்ல சிந்தனை ! நல்ல ஆய்வு ! அருமையான சொல்லாக்கம் !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .