புதுச்சொல் புனைவோம் !
MICROPHONE - ஓரி
----------------------------------------------------------------------------------------
“மைக்ரோபோன்” என்ற
ஆங்கிலச் சொல் சுருங்கி “மைக்” ஆகி
விட்டது. இந்த மைக்கிற்கு ஆங்கிலத்தில் செல்லமாக இன்னொரு பெயர் உண்டு. அது தான் “மின் செவி”. அது என்ன
ஐயா ”மின் செவி”.?
“மைக்” என்ன செய்கிறது ? பேச்சு அல்லது பாட்டு, காற்றில் ஒலி அலைகளாக மிதந்து வரும் போது அவற்றை உள்வாங்கி, மின் காந்த அலைகளாக மாற்றி “ஆம்பிளிபையர்” என்ற சாதனத்திற்கு அனுப்புகிறது !
இந்த “ஆம்பிளிபையர்” மின் காந்த அலைகளின் வலிமையை, (கருவி இயக்குபவர் விரும்பும் அளவுக்கு) பெருக்கி, “ஸ்பீக்கர்” என்னும் கருவிக்கு அனுப்புகிறது. இந்த “ஸ்பீக்கர்” மின்காந்த அலைகளை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றிக் காற்றில் இழையோட விடுகிறது. ”மைக்”கிடம் வந்த சிறிய ஒலி “ஸ்பீக்கர்” வழியாக (விரும்பும் அளவுக்குப்) பேரொலியாக வெளிப்படுகிறது !
வகுப்பறையில், ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் நான் சொல்வதைத் உரக்கச் சொல் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு “த – மி – ழ் – தமிழ்” என்று சொல்கிறார். அவரது பேச்சின் ஒலி அலைகள் ”மைக்” போன்று செயல்படுகின்ற, மாணவனின் செவிப் பறைகளில் பட்டு உணர்வலைகளாக மாற்றப்பட்டு, ”ஆம்பிளிபையர்” போலச் செயல்படும் மூளைக்குச் செல்கிறது !
மூளையின் கட்டளையின் பேரில் அந்த உணர்வலைகள் ”ஸ்பீக்கர்” போல் செயல்படும் குரல் வளைக்கு வந்து மீண்டும் ஒலி அலைகளாக மாறி, மாணவனின் வாய் மூலம் “த – மி – ழ் – தமிழ்” என்று உரப்பு ஒலியாக வெளிப்படுகிறது !
“மைக்”கும் “செவி”யும்
செயல்படும் விதத்தில் ஒன்றாக இருக்கிறது பார்த்தீர்களா ? இதனால்
தான் “மைக்”கினை “மின்செவி” என்று
கூறுவது வழக்கம்.செவியின் வேலை என்ன ? காற்றில்
வரும் ஒலி அலைகளை உள்வாங்கி மூளைக்கு உணர்வலை வடிவில் செய்தி அனுப்புதல் !
இதையே சுருக்கமாகச் சொன்னால் “கேட்டல்” என்று கூறலாம். ”கேட்டல்” என்பதை தமிழ் இலக்கியங்கள் “ஓர்தல்” என்று குறிப்பிடுகின்றன !
“பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்....”என்கிறது பட்டினப் பாலை! (பாடல் வரி :113)
”குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்...” என்று பேசுகிறது மலைபடு கடாம் ! (பாடல் வரி : 23)
“புலரி
விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” மலைபடு
கடாம் இன்னொரு இடத்தில் சொல்கிறது (பாடல் வரி: 448)
”இன் பல்
இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்....”என்பது
முல்லைபாட்டு. (பாடல் வரி : 88)
“ஓர்த்து
உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா....” என்பது
திருக்குறள் (357)
இந்தப் பாடல்களில் “ஓர்தல்” என்ற சொல் காதால் கேட்டு, மனதால் உணர்ந்து, அதற்கேற்பச் செயல்படல் என்னும் பொருளில் எடுத்தாளப் பட்டுள்ளது.
“ஓர்தல்” (ஒலியை உள் வாங்குதல்) செய்கின்ற “மைக்”கும், அதேபோல் ஒலியை உள் வாங்குகின்ற செவியும் இயங்கும் வகையில் ஒப்புமை உடையவை. .ஓர்தல் செய்கின்ற ”மைக்”கினை “ஓரி” என்று உரைத்தால் பொருத்தமாக இராதா என்ன ? வல்வில் ஓரியின் நினைவாகச் சூட்டிய பெயராகவும் அமையும் அல்லவா ?
“மைக்”கினை முன்பு ஒலிபெருக்கி என்று மொழி பெயர்த்தோம். அடுத்து “ஒலி வாங்கி” என்று சொல்லி வருகிறோம். “ஒலிவாங்கி” சற்று நீளமான சொல். எனவே ”ஒலிவாங்கி”யை ஒதுக்கி வைத்து விட்டு “ஓரி”யைக் கையில் எடுத்துப் பேசினால் நமது பேச்சு அழகாக இருக்காதா என்ன ?
“ஓரி” என்னும் புதிய சொல்லின் வழியாகப் பிறக்கும் பிற சொற்களையும், “ஓரி”யுடன் இணைந்த கருவிகளின் தமிழ்ப் பெயர்களையும் காண்போமா ?
====================================================
MICROPHONE (MIC)............= ஓரி
CRYSTAL
MIC.......................= படிகவோரி
CARBON
MIC........................= துகளோரி
DYNAMIC
MIC.......................= வில்லோரி
CONDENSOR
MIC................= திரையோரி
MIC
STAND............................= ஓரித் தளி
HAND
MIC.............................= கையோரி
AMPLIFIER............................=
ஒலி
பெருக்கி
SPEAKER..............................=
கிளவி
SPEAKER
– HORN TYPE ....= கிளவிக் கொம்பு
SPEAKER
- BOX TYPE........ = கிளவிப் பேழை
STERIO
SPEAKER ...............= பன்மக் கிளவி
SPEAKER
SET.......................= கிளவிக் கணம்
====================================================
CRYSTAL ..........................= படிகம்+ஓரி = படிக ஓரி
CARBON ....... =
(கரிமத்) துகள் + ஓரி = துகளோரி
DYNAMIC
(Spring)............ = வில் + ஓரி = வில்லோரி
CONDENSER
= திரை (மணி) + ஓரி = திரையோரி
HAND ................................... =
கை + ஓரி +
கையோரி
SPEAKER......................... =
கிள (
கிளத்தல்) பேசுதல்.
.............................கிளத்தல்
செய்யும் கருவி “கிளவி”.
====================================================
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com0
ஆட்சியர்,
“தமிழ்ப்
பணி மன்றம்” முகநூல்.
===================================================
ஓரி என்று பெயரிடுவதற்கான காரணம் அருமையாக இருக்கிறது ! பொருத்தமான மொழியாக்கம் ! மிக்க மகிழ்ச்சி !
பதிலளிநீக்குநன்றி !
பதிலளிநீக்குஅழகிய தமிழாக்கம் ! வல்வில் ஓரியை நினைவுபடுத்தும் அருஞ்சொல் !
பதிலளிநீக்குமகிழ்ச்சி!
பதிலளிநீக்குமகிழ்ச்சி!
பதிலளிநீக்கு