பக்கங்கள்

திங்கள், மே 03, 2021

நன்னூல் விதிகள் (17) உயிரீற்றுப் புணரியல் - ஊகார, ஏகார, ஓகார, ஐகார ஈற்றுச் சிறப்பு விதி (நூற்பா.200, 201, 202, 203)

 

 

                                    உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                            “’கார  ஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.200.  பூப்பெயர் புணர்ச்சி(பக்.163)

 

 பூப்பெயர்  முன் இன மென்மையும்  தோன்றும்  (நூற்பா.200)

 

[பூஎன்னும் பெயர்ச் சொல்லின் முன் வல்லினம் பொது விதியால் மிகுதலே அன்றி, அவற்றிற்கு இனமாகிய மெல்லினமும் மிகும்]

 

பூ + கொடி = பூங்கொடி (நூற்பா.200)

பூ + சோலை = பூஞ்சோலை

பூ + தோட்டம் = பூந்தோட்டம்

பூ + பிஞ்சு = பூம்பிஞ்சு

 

[வருமொழி முதலெழுத்தின்  இன எழுத்து மிகுந்தது]

 

பூங்கொடி = பூவையுடைய கொடி = இரண்டாம் வேற்ருமைத் தொகை.

பூங்கொடி = (பூ=அழகு) அழகாகிய கொடி = பண்புத்தொகை.

 

பூ + கொடி = பூக்கொடி(நூற்பா.200)

பூ + சோலை = பூச்சோலை

பூ + தோட்டம் = பூத்தோட்டம்

பூ + பிஞ்சு = பூப்பிஞ்சு

 

[பொது விதிப்படி வல்லினம் மிகுந்தது]

 

 

                           உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                         கார  கார ஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.201.  இடைச்சொல்”,”புணர்ச்சி(பக்.164)

 

இடைச் சொல்”, “முன் வரின் இயல்பே (நூற்பா.201)

 

[இடைச்சொல்”, “முன் வல்லினம் வரின் பொதுவிதியால் மிகாது, இயல்பாகும்]

 [

அவனே + கொண்டான் = அவனே கொண்டான்

அவனோ + கண்டான் = அவனோ கண்டான்

 

 

                             உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                              “’கார  ஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.202.  காரப் புணர்ச்சி(பக்.164)

 

வேற்றுமை  ஆயின்கான் இறுமொழி

ஈற்றழி வோடும்  அம்ஏற்பவும்  உள.   (நூற்பா.202)

 

[ “கார ஈற்றுச் சொற்கள் நாற்கணத்துடன் புணருகையில் வேற்றுமைக் கண் வருமாயின் ஈற்றுகாரம் கெடும்; அத்துடன்அம்முச்சாரியை பெற்று முடிவனவும் சில உள.]

 

வழுதுணை = காய் = வழுதுணங்காய் (நூற்பா.202)

தாழை + பூ = தாழம்பூ

(காரம் கெட்டுஅம்முச் சாரியை பெற்று வந்தன)

 

புன்னை + கானல் = புன்னையங்கானல்(நூற்பா.202)

முல்லை + புறவம் = முல்லையம்புறவம்

(ஈற்றுகாரம் கெடாமல்அம்முச்சாரியை பெற்று வந்தன)

 

கொல்லை + சாரல் = கொல்லைச்சாரல்(நூற்பா.202)

முல்லை + புறவம் = முல்லைப்புறவம்

(’ஏற்பவும் உளஎன்றதனால் மேற்கண்டவாறு வலிமிக்கு வருவனவும் உள)

 

 

நூற்பா.203.  காரப் புணர்ச்சி(பக்.165)

 

 

பனை முன் கொழி வரின் மிகலும் வலிவரின்

போய்அம்மும், திரள் வரின் உறழ்வும்

அட்டு  உறின் கெட்டு அந் நீள்வுமாம் வேற்றுமை (நூற்பா.203)

 

[ பனை என்னும் பெயர் முன் கொடி என்னும் பெயர் வருமாயின் வந்தது மிகும். வல்லினம் வருமாயின் நிலைமொழி ஈற்றுகாரம் கெட்டு, ”அம்முச் சாரியை வரும். திரள் என்னும் பெயர் வரின்  வந்தது மிகுதலும்  போய்அம்முப் பெறுதலும் உண்டு. அட்டு என்னும் சொல் வரின்காரம் கெட்டு வருமொழிகரம்காரமாக நீளும். இவை எல்லாம் வேற்றுமைப் புணர்ச்சியில் !

 

பனை + கொடி = பனைக்கொடி

(கொடி வர வலி மிகுந்தது)

 

பனை + காய் = பனங்காய்

பனை + செறும்பு = பனஞ்செறும்பு

(கெட்டுஅம்முச் சாரியை பெற்றது)

 

பனை + திரள் = பனைத்திரள்; பனந்திரள்

(உறழ்ந்தது)

 

பனை + அட்டு = பனாட்டு

(”கெட்டுநீண்டது)

 

பனைக்கொடி = பனையை எழுதிய கொடி (பலராமனுக்குரியது)

பனாட்டு = பனையினது தீங்கட்டி (கருப்பட்டி)

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி  மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------

நன்னூல் விதிகள் (16) உயிரீற்றுப் புணரியல் - எண்ணுப் பெயர் - புணர்ச்சியில் திரிபடைதல் (நூற்பா.189 -199 )

 

                                      உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                               குற்றுகரஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.189. ”ஒன்று”, ”இரண்டு திரிபடைதல் (பக்.155)

 

ஒன்றன் புள்ளிகரமாக

இரண்டன் ஒற்று உயிர் ஏகவ்வரும். (நூற்பா.189)

 

[ ஈற்று உயிர்மெய் கெட நின்ற ஒன்று என்னும் எண்ணினதுகர மெய்கர மெய்யாகத் திரியும்;  இரண்டு என்னும் எண்ணினதுகர மெய்யும்கத்தின் மேல் நின்ற  கர உயிரும் கெட, அவ்விரண்டுகர மெய் மேலும்கரம் வரும்]

 

ஒன்று + பத்து = ஒருபது;   இரு + பத்து = இருபது      (நூற்பா.189)

ஒன்று + நாழி = ஒரு நாழி;  இரண்டு + நாழி = இரு நாழி

ஒன்று + வகை = ஒரு வகை;  இரண்டு + வகை = இருவகை

 

[வருமொழி முதலில் மெய்வரகர மெய்கரம் பெற்றது.] (நூற்பா.189)

 

ஒன்று + ஒன்று = ஓரொன்றுஇரண்டு + ஒன்று = ஈரொன்று

ஒன்று = எடை = ஓரெடை ;  இரண்டு + எடை = ஈரெடை

 

[வருமொழி முதலில் உயிர் வரகர மெய்கரம் பெறாதாயிற்று] (நூற்பா.189)

 

 

 

நூற்பா. 190. ”மூன்று திரிபடைதல் (பக்.156)

 

மூன்றன் உறுப்பு  அழிவும் வந்ததும் ஆகும் (நூற்பா.190)

 

[(இறுதி உயிர்மெய் கெட நின்ற மூன்று என்னும் எண்ணினதுகர மெய் கெடும்; அல்லது வரும் மெய்யாகத் திரிதலும் உண்டு ; “கர மெய் கெடுவது உயிர் வருமிடத்து ]

 

மூன்று + ஒன்று = மூவொன்று;  மூன்று = உழக்கு = மூவுழக்கு (நூற்பா.190)

[வருமொழி முதலில் உயிர் வருமிடத்து முதல் குறுகாது ஈற்றெழுத்தும்கர மெய்யும் கெட்டது]

 

மூன்று + பத்து = முப்பது;  மூன்று + நாழி = முந்நாழி.

[வருமொழி முதலில் மெய் வருமிடத்து ஈறு கெட்டுகர மெய்வருமொழிமுதல் மெய்யாய்த் திரிந்தது]

 

 

 

நூற்பா.191.நான்குதிரிபடைதல் (பக்.157)

 

நான்கன் மெய்யே”,”ஆகும்மே (நூற்பா.191)

 

[ (இறுதி உயிர்மெய் கெட நின்ற நான்கு என்னும் எண்ணினதுகர மெய்கர மெய்யாகவும்கர மெய்யாகவும் திரியும்]

 

நான்கு + அடி = நாலடி;  நான்கு + வட்டி = நால்வட்டி (நூற்பா.191)

[உயிரும் இடையினமும் வரா  கர மெய்கரமாகத் திரிந்தது]

 

நான்கு + பத்து = நாற்பது

[ வருமொழி முதலில் வல்லினம் வரகரம்கரமாகத் திரிந்தது.

 

நான்கு + மணி = நான்மணி. (நூற்பா.191)

[வருமொழி முதலில் மெல்லினம் வரகர ஈறு போல் இயல்பாய் முடிந்தது]

 

 

 

நூற்பா.192.ஐந்துதிரிபடைதல் (பக்.157)

 

ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும்  (நூற்பா.192)

 

[(இறுதி உயிர்மெய் கெட நின்ற) ஐந்து என்னும் எண்ணினதுகர மெய் வருமொழி முதலாக உள்ள மெய்யாகத் திரியும்; அல்லது அதற்கு இனமாகத் திரியும்; அல்லது  கெடும்]

 

ஐந்து + மூன்று = ஐம்மூன்று (நூற்பா.192)

[வருமொழி முதலில் மெல்லினம் வரகரம்வருமொழி முதல்மெய்யாகத் திரிந்தது.

 

ஐந்து = பொறி = ஐம்பொறி(நூற்பா.192)

[வருமொழி முதலில் வல்லினம் வர, ‘கரம் வருமொழி முதல் மெய்க்கு இனமாகத் திரிந்தது]

 

ஐந்து + ஒன்று = ஐயொன்று (நூற்பா.192)

ஐந்து + வட்டி = ஐவட்டி

[வருமொழி முதலில் உயிரும் இடையினமும் வரகரம்கெட்டது]

 

ஐந்து + நூறு = ஐந்நூறு(நூற்பா.192)

[வருமொழி முதலில்கரம் வந்தவிடத்துகர மெய் தன்னியல்பில் நின்றது]

 

 

 

நூற்பா.193.  எட்டுதிரிபடைதல் (பக்.158)

 

எட்டன் உடம்பு  வ்வாகும் என்ப. (நூற்பா.192)

 

[(இறுதி உயிர்மெய் கெட நின்ற) வருமொழி முதலில் நாற்கணமும் வர நிலைமொழியில் நிற்கும் எட்டு என்னும் எண்ணினதுகர மெய்கர மெய்யாகத் திரியும்.}

 

எட்டு + பத்து = எண்பது

எட்டு + நாழி = எண்ணாழி

எட்டு + வகை = எண்வகை

எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்

[நிலைமொழி ஈற்று உயிர்மெய் கெட்டுகர மெய்கர மெய் ஆயிற்று]

 

நூற்பா.194.  ஒன்பது  திரிபடைதல் (பக்.158)

 

ஒன்பானொடு பத்து நூறும்  ஒன்றின்

முன்னதின்  ஏனைய முரணி ஒவ்வொடு

தகரம் நிறீஇப்  பஃது அகற்றி  வ்வை

நிரலே”, “வாத்  திரிப்பது நெறியே  (நூற்பா.194)

 

 

நூற்பா.196.  பஃது திரிபடைதல்(பக்.160)

 

ஒரு பஃது ஆதிமுன் ஒன்று முதல் ஒன்பான்

எண்ணும் அவை ஊர் பிறவும் எய்தின்

ஆய்தம் அழியஆண்டு ஆகும்   (நூற்பா.196)

 

 

நூற்பா.197.  பத்து திரிபடைதல்(பக்.161)

 

 

ஒன்று  முதல் ஈரைந்து  ஆயிரங்கோடி

எண், நிறை, அளவும்  பிற வரின்  பத்தின்

ஈற்று உயிர்மெய் கெடுத்துஇன்னும்இற்றும்

ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே

 

பத்து + ஒன்று = பதினொன்று, பதிற்றொன்று (நூற்பா.197)

பத்து + ஆயிரம் = பதினாயிரம், பதிற்றாயிரம்

பத்து + கோடிபதின்கோடி, பதிற்றுக்கோடி

பத்து + கலம் = பதின்கலம், பதிற்றுக் கலம்

பத்து + மடங்கு = பதின்மடங்கு, பதிற்று மடங்கு

 

பதினொன்று = உம்மைத் தொகை

பதிற்றொன்று = பண்புத்தொகை.

 

 

நூற்பா.198.  பத்து திரிபடைதல்(பக்.161)

 

இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்

கரந்திட ஒற்றுவ்வாகும் என்ப   (நூற்பா.198)

 

[இரண்டு என்பது முன் வருமாயின் பத்து என்னும் நிலை மொழியினது ஈற்றில் உள்ளதுஎன்னும் உயிர்மெய் கெடகர மெய்கர மெய்யாகத் திரியும் என்பர்]

 

பத்து + இரண்டு = பன்னிரண்டு (நூற்பா.198)

[இவ்விதியை உம்மைத் தொகைக்கு மட்டும் கொள்க]

 

பத்து + ஒன்று = பன்னொன்று

பத்து + மூன்று = பன்மூன்று

பத்து + நான்கு = பன்னான்கு

[எனவும் நூற்பா 198 –ன்படி வரும்]

 

 

நூற்பா.199.  எண் இரட்டிப்பில்திரிபடைதல்(பக்.162)

ஒன்பது ஒழித்த எண், ஒன்பதும் இரட்டின்

முன்னதின் முன்அலஓட  உயிர்வரின்

வ்வும்  மெய்வரின் வந்ததும்  மிகல் நெறி. (நூற்பா.199)

 

[ஒன்பது என்னும் எண்னைத் தவிர்த்து , ஒன்று முதல் பத்து ஈறாகிய எஞ்சிய ஒன்பது எண்ணினையும்  இரட்டித்துச் சொல்லின், நிலைமொழியினது முதல் எழுத்து அல்லாத எஞ்சிய எழுத்துகள் எல்லாம் கெட, (வருமொழி முதலில் ) உயிர்முதலான எண்  வரின்கர மெய்யும் மெய் முதலான எண் வரின் , வந்த மெய்யும் மிகுதல் முறையாம்]

ஒன்று + ஒன்று = + ஒன்று = ஒவ்வொன்று (நூற்பா.199)

இரண்டு + இரண்டு = + இரண்டு = இவ்விரண்டு

மூன்று + மூன்று = மும்மூன்று

நான்கு + நான்கு = நந்நான்கு

ஐந்து + ஐந்து = அவ்வைந்து

ஆறு + ஆறு = அவ்வாறு

ஏழு + ஏழு = எவ்வேழு

எட்டு + எட்டு = எவ்வெட்டு

பத்து + பத்து = பப்பத்து

 

[நெறி என்றமையால்  மும்மூன்று”, ”நந்நான்குஎனக் குறுகும்.]

 

வேறு + வேறு = வெவ்வேறு(நூற்பா.199)

பாதி + பாதி = பப்பாதி

கழஞ்சு + கழஞ்சு = கழக்கழஞ்சு

 

என இரட்டித்தலும், குற்ரியலுகரப் புணர்ச்சியுள் அடங்காதனவும்  நூற்பா 199 –ன்படி அமைவதாகக் கொள்க.  நூற்பாவில் வரும்நெறிஎன்னும் சொல்லுக்கு இதுவே பொருள்.

--------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்

 -------------------------------------------------------------------------------------------------------