பக்கங்கள்

திங்கள், மே 03, 2021

நன்னூல் விதிகள் (17) உயிரீற்றுப் புணரியல் - ஊகார, ஏகார, ஓகார, ஐகார ஈற்றுச் சிறப்பு விதி (நூற்பா.200, 201, 202, 203)

 

 

                                    உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                            “’கார  ஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.200.  பூப்பெயர் புணர்ச்சி(பக்.163)

 

 பூப்பெயர்  முன் இன மென்மையும்  தோன்றும்  (நூற்பா.200)

 

[பூஎன்னும் பெயர்ச் சொல்லின் முன் வல்லினம் பொது விதியால் மிகுதலே அன்றி, அவற்றிற்கு இனமாகிய மெல்லினமும் மிகும்]

 

பூ + கொடி = பூங்கொடி (நூற்பா.200)

பூ + சோலை = பூஞ்சோலை

பூ + தோட்டம் = பூந்தோட்டம்

பூ + பிஞ்சு = பூம்பிஞ்சு

 

[வருமொழி முதலெழுத்தின்  இன எழுத்து மிகுந்தது]

 

பூங்கொடி = பூவையுடைய கொடி = இரண்டாம் வேற்ருமைத் தொகை.

பூங்கொடி = (பூ=அழகு) அழகாகிய கொடி = பண்புத்தொகை.

 

பூ + கொடி = பூக்கொடி(நூற்பா.200)

பூ + சோலை = பூச்சோலை

பூ + தோட்டம் = பூத்தோட்டம்

பூ + பிஞ்சு = பூப்பிஞ்சு

 

[பொது விதிப்படி வல்லினம் மிகுந்தது]

 

 

                           உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                         கார  கார ஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.201.  இடைச்சொல்”,”புணர்ச்சி(பக்.164)

 

இடைச் சொல்”, “முன் வரின் இயல்பே (நூற்பா.201)

 

[இடைச்சொல்”, “முன் வல்லினம் வரின் பொதுவிதியால் மிகாது, இயல்பாகும்]

 [

அவனே + கொண்டான் = அவனே கொண்டான்

அவனோ + கண்டான் = அவனோ கண்டான்

 

 

                             உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                              “’கார  ஈற்றுச் சிறப்பு விதி

 

நூற்பா.202.  காரப் புணர்ச்சி(பக்.164)

 

வேற்றுமை  ஆயின்கான் இறுமொழி

ஈற்றழி வோடும்  அம்ஏற்பவும்  உள.   (நூற்பா.202)

 

[ “கார ஈற்றுச் சொற்கள் நாற்கணத்துடன் புணருகையில் வேற்றுமைக் கண் வருமாயின் ஈற்றுகாரம் கெடும்; அத்துடன்அம்முச்சாரியை பெற்று முடிவனவும் சில உள.]

 

வழுதுணை = காய் = வழுதுணங்காய் (நூற்பா.202)

தாழை + பூ = தாழம்பூ

(காரம் கெட்டுஅம்முச் சாரியை பெற்று வந்தன)

 

புன்னை + கானல் = புன்னையங்கானல்(நூற்பா.202)

முல்லை + புறவம் = முல்லையம்புறவம்

(ஈற்றுகாரம் கெடாமல்அம்முச்சாரியை பெற்று வந்தன)

 

கொல்லை + சாரல் = கொல்லைச்சாரல்(நூற்பா.202)

முல்லை + புறவம் = முல்லைப்புறவம்

(’ஏற்பவும் உளஎன்றதனால் மேற்கண்டவாறு வலிமிக்கு வருவனவும் உள)

 

 

நூற்பா.203.  காரப் புணர்ச்சி(பக்.165)

 

 

பனை முன் கொழி வரின் மிகலும் வலிவரின்

போய்அம்மும், திரள் வரின் உறழ்வும்

அட்டு  உறின் கெட்டு அந் நீள்வுமாம் வேற்றுமை (நூற்பா.203)

 

[ பனை என்னும் பெயர் முன் கொடி என்னும் பெயர் வருமாயின் வந்தது மிகும். வல்லினம் வருமாயின் நிலைமொழி ஈற்றுகாரம் கெட்டு, ”அம்முச் சாரியை வரும். திரள் என்னும் பெயர் வரின்  வந்தது மிகுதலும்  போய்அம்முப் பெறுதலும் உண்டு. அட்டு என்னும் சொல் வரின்காரம் கெட்டு வருமொழிகரம்காரமாக நீளும். இவை எல்லாம் வேற்றுமைப் புணர்ச்சியில் !

 

பனை + கொடி = பனைக்கொடி

(கொடி வர வலி மிகுந்தது)

 

பனை + காய் = பனங்காய்

பனை + செறும்பு = பனஞ்செறும்பு

(கெட்டுஅம்முச் சாரியை பெற்றது)

 

பனை + திரள் = பனைத்திரள்; பனந்திரள்

(உறழ்ந்தது)

 

பனை + அட்டு = பனாட்டு

(”கெட்டுநீண்டது)

 

பனைக்கொடி = பனையை எழுதிய கொடி (பலராமனுக்குரியது)

பனாட்டு = பனையினது தீங்கட்டி (கருப்பட்டி)

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி  மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .