பக்கங்கள்

▼

சனி, மே 01, 2021

நன்னூல் விதிகள் (08) உயிரீற்றுப் புணரியல் - அகர ஈற்றுச் சிறப்பு விதி - ’சில’, ’பல’ தம்முன் தான் வரல் (நூற்பா.170)

 

                                    உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

 

                         அகர ஈற்றுச் சிறப்பு விதி.


நூற்பா.170.(பல, சில, புணர்ச்சி (பக்.137)

 

பல, சில, எனும் இவை தம் முன் தாம் வரின்

இயல்பும்,  மிகலும்,  அகரம் ஏக

லகரம், றகரம் ஆகலும் பிறவரின்

அகரம் விகற்பம் ஆகலும் உள பிற. (நூற்பா.170)

 

பல, சில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வருமாயின் இயல்பாதலும் உண்டு (பக்.138) (நூற்பா.170)

 

பல + பல = பலபல............ (பக்.138)

சில + சில = சில சில....... (பக்.138)

 

பல, சில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வரின் வல்லெழுத்து மிகுதலும் உண்டு (பக்.138) (நூற்பா.170)

 

பல + பல = பலப்பல..............(பக்.138)

சில + சில = சிலச்சில...........(பக்.138)

 

பல, சில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வரின் அகரம் கெட்டு ‘லகரம்’ ’றகரம்’ ஆதலும் உண்டு. (பக்138) (நூற்பா.170)

 

பல + பல = பற்பல................(பக்.138)

சில + சில = சிற்சில.............(பக்.138)

 

’பல’ என்னும் சொல்லின் முன்னர் பிற சொற்கள் வரின் விகற்பமாவதும் உண்டு. (பக்.138) (நூற்பா.170)

 

பல + கலை = பலகலை......................(பக்.138)

பல + கலை = பல்கலை......................(பக்.138)

 

பல + தாழிசை = பல தாழிசை.....(பக்.138)

பல + தாழிசை = பஃறாழிசை........(பக்.138)

 

பல + ஞானம் = பல ஞானம்............(பக்.138)

பல + ஞானம் = பன் ஞானம்...........(பக்.138)

 

பல + அணி = பலவணி......................(பக்.138)

பல + அணி = பல்லணி......................(பக்.138)


------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-----------------------------------------------------------------------------------------------------------

நன்னூல் விதிகள் (07) உயிரீற்றுப் புணரியல் - அகர ஈற்றுச் சிறப்பு விதி (நூற்பா.167)

 

                                       உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி                     

                    

                         (அகர ஈற்றுச் சிறப்பு விதி)

 

நூற்பா. 167.(அகர ஈற்றுச் சிறப்பு விதி) (பக்.135)

 

செய்யிய’ என்னும் வினையெச்சம், பல்வகைப்

பெயரின் எச்சம், முற்று, ஆறனுருபே

அஃறிணைப் பன்மை, அம்ம, முன் இயல்பே (நூற்பா.167)

 

செய்யிய’ என்னும் அகர ஈற்று வாய்பாட்டு வினையெச்சம் முன் வரும் வல்லெழுத்து மிகா.  (இயல்பாகும்) (பக்.135) (நூற்பா.167)

 

உண்ணிய + கொண்டான் = உண்ணிய கொண்டான். (பக்.136) (நூற்பா.167)

உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் (பக்.136)

(உண்ணிய = இசைந்து, பொருந்தி, நுகர்ந்து)

(’செய்யிய’ என்னும் வினையெச்சம் முன் வலி இயல்பாயது) (பக்.136)

 

[பல்வகை என்பது வினையடி நான்கினும் பிறந்த பெயரெச்சங்களை. (பெயரடி வினையெச்சம், வினையடி வினையெச்சம், இடையடி வினையெச்சம், உரியடி வினையெச்சம் ) (நூற்பா.167)

 

பல்வகை’ அகர ஈற்றுப் பெயரெச்சம் முன் வலி மிகா. (இயல்பாகும்)

(பக்.136) (நூற்பா.167)

 

உண்ட + குதிரை = உண்ட குதிரை (பக்.136) (நூற்பா.167)

கறுத்த + பையன் = கறுத்த பையன் (பக்.136)

உற்ற + வேளை = உற்ற வேளை (பக்.136) (இடையடிப் பெயரெச்சம்)

கடிய + கதிரை = கடிய குதிரை (பக்.136) (உரியடிப் பெயரெச்சம்)

(பல்வகைப் பெயரெச்சம் முன் வலி இயல்பாயது) (பக்.136)

 

பல்வகை’ அகர ஈற்று முற்று  முன் வலி மிகா. (இயல்பாகும்) (பக்.136) (நூற்பா.167)

 

உண்டன + குதிரை = உண்டன குதிரை (பக்.136) (நூற்பா.167)

அமர்முகத்தன + குதிரை = அமர்முகத்தன குதிரை (பக்.136)

வாழ்க + கொற்றா = வாழ்க கொற்றா. (பக்.136)

வாழிய + சாத்தா = வாழிய சாத்தா. (பக்.136)

(வியங்கோள் வினைமுற்று உள்பட பலவகை  முற்று முன் வலி இயல்பாயது) (பக்.136)

 

ஆறாம் வேற்றுமை உருபின்  முன் வரும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.136) (நூற்பா.167)

 

தன் + கைகள் = தன் கைகள் (பக்.136) (நூற்பா.167)

அவள் + கண்கள் = அவள் கண்கள் (பக்.136)

 

அஃறிணைப் பன்மைப் பெயரின் முன் வேற்றுமை, அல்வழி இருவழியும் வல்லெழுத்து இயல்பாகும் (பக்.136) (நூற்பா.167)

 

பல + குதிரைகள் = பல குதிரைகள் (பக்.136) (நூற்பா.167)

பல + செந்நாய்கள் = பல செந்நாய்கள்(பக்.136)

சில +  கொடுத்தான்= சில கொடுத்தான்(பக்.136)

சில + செய்தான் = சில செய்தான் (பக்.136)

 

உரையசை இடைச்சொல் முன் வலி இயல்பாகும் (பக்.136) (நூற்பா.167)

 

அம்ம + கொற்றா = அம்ம கொற்றா (பக்.136)

அம்ம + சாத்தா = அம்ம சாத்தா (பக்.136)

(அம்ம = உரையசை இடைச்சொல்)

(அம்ம என்னும் உரையசை இடைச்சொல் முன் வலி இயல்பாயது) (பக்.136)

 ------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda7o.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

-------------------------------------------------------------------------------------------------------------


நன்னூல் விதிகள் (06) உயிரீற்றுப் புணரியல் - வினாச் சுட்டின் முன் உயிரும் மூவினமும் புணரல் (நூற்பா.163)

 

                  உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

 

(வினாச்சுட்டின் முன் உயிரும், வல்லின, மெல்லின, 

இடையினமும் புணர்தல்)

நூற்பா.163. (வினாச்சுட்டின் முன் வல்லின, மெல்லின, இடையின, உயிரினங்கள் புணர்தல் (பக்.163)

 

’எகர’ வினா முச் ’சுட்டின்’ முன்னர்

உயிரும் ‘ய’கரமும்  எய்தின் ‘வ’வ்வும்

பிறவரின் அவையும் தூக்கிற் சுட்டு

நீளின் ‘ய’கரமும் தோன்றுதல் நெறியே. (நூற்பா.163)

 

”எ”கர வினா  இடைச் சொல்லின் முன், உயிரெழுத்தோ “ய”கரமோ வந்தால் “வ”கரம் தோன்றும். (நூற்பா.163)

 

எ + அணி = எவ்வணி (பக்.131) (நூற்பா.163)

எ + யானை = எவ்யானை (பக்.131)

 

”எகர” வினா முன்பு  ‘ய’கரம்  தவிர்த்த  பிற மெய்கள் வந்தால் இடையில்  அவ்வந்த மெய்கள் தோன்றும் (நூற்பா.163.)

 

எ + குதிரை = எக்குதிரை ) (நூற்பா.163)

எ + சேனை = எச்சேனை

எ + தண்டு = எத்தண்டு

எ + படை = எப்படை

எ + ஞாலம் = எஞ்ஞாலம்

எ + நாடு = எந்நாடு

எ + மனை = எம்மனை

எ + வளை = எவ்வளை

எ + ஙனம் = எங்ஙனம்

 

‘அகர’, ‘இகர’ ‘உகர’ சுட்டுகளின் முன்பு உயிரோ ‘ய’கரமோ வந்தால், இடையில் ‘வ’கரம் தோன்றும். (பக்.131) ) (நூற்பா.163)

 

அ + அணி = அவ்வணி (பக்.131) ) (நூற்பா.163)

அ + யானை = அவ் யானை (பக்.131)

இ+ அணி = இவ்வணி (பக்.131)

இ + யானை = இவ் யானை (பக்.131)

உ + அணி = உவ்வணி (பக்.131)

உ + யானை = உவ் யானை (பக்.131)

 

‘அகர’, ‘இகர’ ‘உகர’ சுட்டுகளின் முன்பு ‘ய’கரம் தவிர்த்த பிற மெய்கள்  வந்தால், இடையில் ,அவ்வந்த மெய்கள் தோன்றும். (பக்.131) ) (நூற்பா.163)

 

அ + குதிரை = அக்குதிரை (பக்.131) ) (நூற்பா.163)

இ + குதிரை = இக்குதிரை (பக்.131)

உ = குதிரை = உக்குதிரை (பக்.131)

அ + சேனை அச்சேனை (பக்.131)

அ + தானை = அத்தானை (பக்.131)

அ + படகு = அப்படகு (பக்.131)

அ + ஞாலம் = அஞ்ஞாலம் (பக்.131)

அ + ஙனம் = அங்ஙனம் (பக்.131)

அ + நாடு = அந்நாடு (பக்.131)

அ + மாடு = அம்மாடு (பக்.131)

அ = வீடு = அவ்வீடு (பக்.131)

 

செய்யுளில் வரும் சுட்டு நீண்டு வருமொழி முதலில் உயிர் வந்தால் இடையில் ‘ய’கர மெய்  தோன்றும் (பக்.130) ) (நூற்பா.163)

 

ஆ + இடை = ஆயிடை (பக்.131) ) (நூற்பா.163)


------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------