உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
(வினாச்சுட்டின் முன் உயிரும், வல்லின, மெல்லின,
இடையினமும் புணர்தல்)
நூற்பா.163. (வினாச்சுட்டின் முன் வல்லின, மெல்லின, இடையின, உயிரினங்கள் புணர்தல் (பக்.163)
’எகர’ வினா முச் ’சுட்டின்’ முன்னர்
உயிரும் ‘ய’கரமும் எய்தின் ‘வ’வ்வும்
பிறவரின் அவையும் தூக்கிற் சுட்டு
நீளின் ‘ய’கரமும் தோன்றுதல் நெறியே. (நூற்பா.163)
”எ”கர வினா இடைச் சொல்லின் முன், உயிரெழுத்தோ “ய”கரமோ வந்தால் “வ”கரம் தோன்றும். (நூற்பா.163)
எ + அணி
= எவ்வணி (பக்.131) (நூற்பா.163)
எ + யானை
= எவ்யானை (பக்.131)
”எகர” வினா முன்பு
‘ய’கரம் தவிர்த்த பிற மெய்கள் வந்தால் இடையில் அவ்வந்த மெய்கள் தோன்றும் (நூற்பா.163.)
எ + குதிரை
= எக்குதிரை ) (நூற்பா.163)
எ + சேனை
= எச்சேனை
எ + தண்டு
= எத்தண்டு
எ + படை
= எப்படை
எ + ஞாலம்
= எஞ்ஞாலம்
எ + நாடு
= எந்நாடு
எ + மனை
= எம்மனை
எ + வளை
= எவ்வளை
எ + ஙனம்
= எங்ஙனம்
‘அகர’, ‘இகர’ ‘உகர’ சுட்டுகளின் முன்பு உயிரோ ‘ய’கரமோ வந்தால், இடையில் ‘வ’கரம் தோன்றும். (பக்.131) ) (நூற்பா.163)
அ + அணி
= அவ்வணி (பக்.131) ) (நூற்பா.163)
அ + யானை
= அவ் யானை (பக்.131)
இ+ அணி
= இவ்வணி (பக்.131)
இ + யானை
= இவ் யானை (பக்.131)
உ + அணி
= உவ்வணி (பக்.131)
உ + யானை
= உவ் யானை (பக்.131)
‘அகர’, ‘இகர’ ‘உகர’ சுட்டுகளின் முன்பு ‘ய’கரம் தவிர்த்த பிற மெய்கள் வந்தால், இடையில் ,அவ்வந்த மெய்கள் தோன்றும். (பக்.131) ) (நூற்பா.163)
அ + குதிரை
= அக்குதிரை (பக்.131) ) (நூற்பா.163)
இ + குதிரை
= இக்குதிரை (பக்.131)
உ = குதிரை
= உக்குதிரை (பக்.131)
அ + சேனை அச்சேனை (பக்.131)
அ + தானை
= அத்தானை (பக்.131)
அ + படகு
= அப்படகு (பக்.131)
அ + ஞாலம்
= அஞ்ஞாலம் (பக்.131)
அ + ஙனம்
= அங்ஙனம் (பக்.131)
அ + நாடு
= அந்நாடு (பக்.131)
அ + மாடு
= அம்மாடு (பக்.131)
அ = வீடு
= அவ்வீடு (பக்.131)
செய்யுளில் வரும் சுட்டு நீண்டு வருமொழி முதலில் உயிர் வந்தால் இடையில் ‘ய’கர மெய் தோன்றும் (பக்.130) ) (நூற்பா.163)
ஆ + இடை
= ஆயிடை (பக்.131) ) (நூற்பா.163)
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .