பக்கங்கள்

செவ்வாய், மே 04, 2021

நன்னூல் விதிகள் (21) பொதுப் புணர்ச்சி - முன்னிலை வினை, ஏவல் வினை முன் வல்லினம் வரல் (நூற்பா.161)

 

 

                              பொதுப்புணர்ச்சி

 

நூற்பா.161. (முன்னிலை வினை, ஏவல் வினை முன் வல்லினம்) (பக்.128)

 

ஆவி, ‘’,’’,’இறுதி முன்னிலை  வினை

ஏவன் முன் வல்லினம் இயல்பொடு விகற்பே. (நூற்பா.161)

 

 

 

யிரையும், ‘’, ‘’, ’என்னும் மூன்று மெய்களையும் இறுதியாக உடைய (முன்னிலை வினை என்னும்) ஏவல் வினை முன்  வரும் வல்லினம் ,இயல்பாகவும், விகற்பமாகவும் புணரும் (பக்.128) (நூற்பா.161)

 

உண்டி + சாத்தா = உண்டி சாத்தா ! (நூற்பா.161)

உண்டாய் + சாத்தா = உண்டாய் சாத்தா !

உண்டீர் + சாத்தரே = உண்டீர் சாத்தரே !

(உயிர், ‘’, ‘’, இறுதி முன்னிலை வினை முன் இயல்பாயின) (பக்.128)

 

[விகற்பத்திற்கு காட்டுகள் தரப்படவில்லை)

 

வா + கொற்றா = வா கொற்றா (நூற்பா.161)

ஆய் + கொற்றா = ஆய் கொற்றா

சேர் + கொற்றா = சேர் கொற்றா

தாழ் + கொற்றா = தாழ் கொற்றா

(உயிரெழுத்து, ‘’, ‘’,’  இறுதி ஏவல் முன் இயல்பாயின) (பக்.129)


-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


வை.வேதரெத்தினம்,

[Veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

 

 --------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .