உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
“முற்றுகர” ஈற்றுச்
சிறப்பு விதி
நூற்பா.179. ( ”உ”கர ஈற்று முன் வலி வருதல்)
”மூன்று ஆறு உருபு” “எண்” ”வினைத்தொகை’ ”சுட்டு’
ஈறாகும் “உ’கரம் முன்னர் இயல்பாம். (நூற்பா.179)
மூன்றாம் வேற்றுமை உருபு, ஆறாம் வேற்றுமை உருபு, எண்ணுப் பெயர், வினைத்தொகை, சுட்டுப் பெயர் ஆகியவற்றில் வரும் “உ”கரம் முன் வலி வந்தால் மிகா.(நூற்பா.179)
மூன்றாம் வேற்றுமை உருபிற்கு ஈறாகும் ‘உ”கரம் (முற்றுகரம்) முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும். (பக்.145) (நூற்பா.179)
சாத்தனொடு
+ கொண்டான் = சாத்தனொடு
கொண்டான்.(பக்.145)
பரிதியொடு
+ சென்றான் = பரிதியொடு
சென்றான்
ஆறாம் வேற்றுமை உருபிற்கு ஈறாகும் ‘உ”கரம் (முற்றுகரம்) முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும். (பக்.145) (நூற்பா.179)
சாத்தனது
+ கை = சாத்தனது
கை
கண்ணனது தேர்
= கண்ணனது தேர்.
இயல்பாயும் விகாரமாயும் வரும் எண்ணுப் பெயரின் ஈறாகும் ‘உ”கரம் (முற்றுகரம்) முன் வலி இயல்பாகும். (பக்.145) (நூற்பா.179)
ஒரு + கை
= ஒரு கை
இரு = செவி
= இரு செவி
அறு + தலை
= அறுதலை
எழு + புறம்
= எழுபுறம்
வினைத் தொகை ஈற்று “உ”கரம் (முற்றுகரம்) முன் வரும் வல்லெழுத்து இயல்பாகும்.(பக்.145) ) (நூற்பா.179)
அடு + களிறு
+ அடுகளிறு (பக்.145)
தரு + சேனை
= தருசேனை
புகு + தானை
= புகுதானை
விடு = கணை
= விடுகணை
சுடு + சோறு
= சுடுசோறு
சுட்டுப் பெயர் ஈற்று “உ”கரம் (முற்றுகரம்) முன் வரும் வல்லெழுத்து இயல்பாகும்.(பக்.145) ) (நூற்பா.179)
அது + குறிது
= அது குறிது
இது + சிறிது
= இது சிறிது.
(அல்வழியில்
சுட்டுப் பெயர் முன் வலி இயல்பாயது) (பக்.145)
அது + கண்டான்
= அது கண்டான்
இது + தந்தான்
= இது தந்தான்
(வேற்றுமையில்
சுட்டுப் பெயர் முன் வலி இயல்பாயது.) (பக்.145)
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .