பக்கங்கள்

வெள்ளி, ஏப்ரல் 23, 2021

பாக்கள் (03) கலிப்பாவும் அதன் இனமும் !

 கலிப்பாவும் கலிப்பா இனமும்

------------------------------------------------------------------------------------------------------------

கலிப்பா

(01)                   ஈரசைச் சீர் நான்கும் = ஆசிரிய உரிச்சீர் (.22)

(02)                   ஈரசைச் சீரை இயற்சீர் என்றும் சொல்வர். (பக்.23)

(03)                   நேரசை இறுதியாகிய மூவசைச் சீர் (காய்ச்சீர்) நான்கும் = வெண்பா உரிச்சீர்! (.24)

(04)                   நிரையசை இறுதியாகிய மூவசைச் சீர் (கனிச்சீர்) நான்கும் = வஞ்சி உரிச்சீர் (.24)

(05)                  ஈரசை  கூடியசீர்  இயற்சீர்   அவை

ஈரிரண்  டென்பர்  இயல்புணர்ந்தோரே !

மூவசைச் சீர் உரிச் சீர் இருநான்கினுள்

நேரிரு நான்கும்  வெள்ளை;  அல்லன,

பாவினுள்  வஞ்சியின்  பாற்பட்  டனவே !

நாலசைச்  சீர்பொதுச்  சீர்பதினாறே,

ஓரசைச்  சீருமஃ  தோரிரு  வகைத்தே ! (பக்.23. யாப்பு)

 

(06)                  நாலசைச் சீர் 16-ம்............ = பொதுச்சீர் (.24)

(07)                   ஓரசைச் சீர்  இரண்டும் = அசைச்சீர் (.24)

(08)                   நாலசைச் சீர் செய்யுளில் பொதுவாக வராது. ஆனால் அருகி வரும் (.25)

(09)                   தண்பூ, நறும்பூ என்று முடியும் நாலசைச்  சீர்கள் எட்டும், அசை பிரிக்கையில் காய்ச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(10)                   தண்ணிழல், நறுநிழல் என்று முடியும் நாலசைச் சீர்கள் எட்டும் அசை பிரிக்கையில் கனிச் சீராகக் கொள்ளப்படும் (.25)

(11)                   ஆசிரியப் பாவினுள்  குற்றுகரம் வந்துழி அன்றி நாலசைச் சீர் வாரா (.26)


தளை (பக்.30)

 

(12)                   மாமுன் நேர்  (நேர் முன் நேர்)..............= நேரொன்றாசிரியத் தளை

(13)                   விளமுன் நிரை (நிரை முன் நிரை).....= நிரையொன்றாசிரியத் தளை

(14)                   மாமுன் நிரை ( நேர் முன் நிரை).........= இயற்சீர் வெண்டளை

(15)                   விளமுன் நேர் (நிரை முன் நேர்)..........= இயற்சீர் வெண்டளை

(16)                   காய்முன் நேர்  (.....................................).......= வெண்சீர் வெண்டளை

(17)                   காய்முன் நிரை (....................................)......= கலித்தளை

(18)                   கனிமுன் நிரை (.....................................)......= ஒன்றிய வஞ்சித்தளி

(19)                   கனிமுன் நேர்  (.....................................).......= ஒன்றாத வஞ்சித்தளை

 

கலிப்பா இனங்கள்

(01)        நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா (பக்.96). = தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புகளையும் கொண்டு வருவது. (பக்.433. நன்னூல்)

(02)        அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா (பக்.97). தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புகளையும் கொண்டு வருவது. (பக்.433. நன்னூல்)

(03)        வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா (பக்.103). தரவு, தாழிசை, வண்ணகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு  உறுப்புகளையும் கொண்டு வருவது. (பக்.433. நன்னூல்)

(04)        தரவுக் கொச்சகக் கலிப்பா (பக்.110). தரவு ஒன்றாய்ப் பிற உறுப்புகள் பெற்றும், பெறாதும் வருவது. (பக்.433. நன்னூல்)

(05)        தரவிணைக் கொச்சகக் கலிப்பா. தரவு இரண்டாய்ப் பிற உறுப்புகள் பெற்றும், பெறாதும் வருவது. (பக்.433. நன்னூல்)

(06)        சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (பக்.112). சில தாழிசைகளைப் பெற்று, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் வேறுபட்டு வருவது (பக்.433.நன்னூல்)

(07)        பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (பக்.113). தாழிசைகள் பலவாய் வருவது. (பக்.433.நன்னூல்)

(08)        மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா (பக்.114). கலிப்பாவுக்குக் கூறப் பெற்ற உறுப்புகள் மிக்கும், குறைந்தும், மயங்கியும் வருவது. (பக்.433. நன்னூல்)

(09)        வெண்கலிப்பா (பக்.107). கலித்தளையான் வந்து, வெண்பாவைப் போல் ஈற்றடி முச்சீரான் முடிவது. (பக்.433. நன்னூல்)

 

(10)        கலித்தாழிசை (பக்.118)

(11)        கலித்துறை (பக்.120)

(12)        கலிவிருத்தம் (பக்.120)

(13)        கலிவெண்பா (பக்.107)

 


கலிப்பாவின் இலக்கணம் (பக்.96,97. யாப்பு) (பக்.432, 433. நன்னூல்)

(01)                   கலித்தளை மிக்குடையதாய், நாற்சீர் கொண்டது ஓரடியாய் வருவது கலிப்பா.கலிப்பாவில் மாச்சீரும், விளங்கனிச் சீர்களும் வாரா. தரவு, தாழிசை, அம்போதரங்கம், வண்ணகம், தனிச் சொல், சுரிதகம் என்பன கலிப்பாவின் உறுப்புகளாம். (பக்.432, 433. நன்னூல்)

(02)                   துள்ளல்  ஓசை உடையதாய், நிரை முதலாகிய வெண்பா உரிச் சீர் (புளிமா, கருவிளம்) மிக்கு, நேரடித்தாய் கலித் தளையும், அத்துடன் அயற்தளையும் இயன்று, வரும் (பக்.96. யாப்பு)

(03)                   நேரீற்று இயற்சீரும் (தேமா), நிரை நடுவாகிய வஞ்சி உரிச் சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி), கலிப்பாவில் வாராது (பக்.96.143. யாப்பு)

(04)                   தரவு, தாழிசை, என்னும் முதலுறுப்பும், அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் துணை உறுப்பும் உடைத்தாய், ஒத்தாழிசைக் கலி, வெண்கலி, கொச்சகக் கலி, ஆகிய வகைகளில் கலிப்பாக்கள் வரும் (பக்.96. யாப்பு)

(05)                   தரவு எனினும் எருத்தம் எனினும் ஒக்கும் (பக்.97)

(06)                   தாழிசை எனினும் இடைநிலைப் பாட்டு எனினும் ஒக்கும் (பக்.97)

(07)                   தனிச் சொல் எனினும், விட்டிசை எனினும் கூன் எனினும், தனிநிலை எனினும் ஒக்கும் (பக்.97)

(08)                   சுரிதகம் எனினும் அடக்கியல் எனினும், வாரம் எனினும், வைப்பு எனினும், போக்கியல் எனினுமொக்கும் (பக்.97)

 

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா (பக்.98)

      

வா,ணெடுங்,கண்  பனி,கூர்  வண்,ணம்,வே  றாய்த்,திரிந்,து

தோ,ணெடுந்  தகை,துறந்,து  துன்,பங்,கூர்  பசப்,பின,வாய்ப்

பூ,ணொடுங்,கு  முலை,கண்,டும்  பொருட்,பிரி,தல்  வலிப்,பவோ.

 

இது தரவு

 

சூ,ருடை,     கடுங்,கடங்,கள்    சொலற்,கரிய    வென்,பவாற்

பீ,ருடை,     நலந்,தொலை,யப்    பிரி,வா,ரோ    பெரி,யவ,ரே

சே,ணுடை,    கடுங்,கடங்,கள்    செலற்,கரி,   வென்,பவால்

நா,ணுடை,     நலந்,தொலை,   நடப்,பா,ரோ    நல,மில,ரே

சிலம்,படைந்,  வெங்,கா,னஞ்   சீ,ரில,வே   யென்,பவாற்

புலம்,படைந்,து  நலந்,தொலை,யப்  போ,வா,ரோ  பொரு,ளில,ரே

 

இவை மூன்றுந் தாழிசை

                    எனவாங்கு

இது தனிச்சொல்

 

அரு,ளெ,னு  மில,ராய்ப்  பொருள்,வயிற்  பிரி,வோர்

பன்,னெடுங்  கா,லமும்  வா,ழியர்

பொன்,னெடுந்  தே,ரொடு  தா,னை,யிற்  பொலிந்,தே.

 

இதுசுரிதகம்

 

(01)                   இது தரவு மூன்றடியாய்த், தாழிசை மூன்றும் இரண்ட்டியாய்த், தனிச் சொல் பெற்று, மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா (பக்.98. யாப்பு)

(02)                   ஈற்றயலடி முச்சீராய் வந்தமையால் இது ஆசிரியச் சுரிதகம் ஆகிறது.

(03)                   செய்யுளின் தரவுப் பகுதியில் வந்துள்ள தளைகள்:- கலித்தளை = 7; வெண்சீர் வெண்டளை = 4;, இயற்சீர் வெண்டளை = 2;, நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் தலா ஒன்று.

(04)                   நேர் ஈற்று இயற்சீர் (தேமா, புளிமா) ஒத்தாழிசைக் கலியுள் வராது. (பக்.143. யாப்பு)

(05)                   தாழிசைப் பகுதியில் வந்துள்ள தளைகள்:- கலித்தளை = 13;, வெண்சீர் வெண்டளை = 4;, இயற்சீர் = 2;, நிரையொன்றாசிரியத் தளை ஒன்று

(06)                   சுரிதகம் பகுதியில் வந்துள்ள தளைக்ள்:- கலி = 2;, வெண்சிர் = 6;, ஆசிரியம் = தலா ஒன்று.

(07)                   மொத்தத்தில் கலி = 22, வெண்சீர் = 8, இயற்சீர் = 10, ஆசிரியம் தலா2 மற்றும் 3.

(08)                   சுரிதகத்தின் ஈற்றடி முச்சீரால் அமைந்தால் அது வெள்ளைச் சுரிதகத்தால் இற்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். (பக்.99)

(09)                   நீரலை போல நாற்சீரடியும், முச்சீர் அடியும், இருசீர் அடியும் ஆகிய அசையடிகளை தாழிசைக்கும் தனிச் சொல்லிற்கும் நடுவே, தொடுத்து, தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஐந்து உறுப்பு உடையதாய் வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும் (பக்.100. யாப்பு)

(10)                   அம்போதரங்கம் என்னும் அசையடி, ஈரடியால் இரண்டும், ஓரடியால் நான்கும், முச்சீரால் எட்டும், இருசீரால் பதினாறுமாய் வருவது சிறப்பு.

(11)                   அம்போதரங்கம் எனினும், அசையடி எனினும், பிரிந்திசைக் குறள் எனினும், சொற்சீரடி எனினும் எண் எனினும் ஒக்கும். (பக்.100)

 

இவை நாற்சீரடி இரண்டம்போதரங்கம் (பேரெண்)


இலங்கொளி   மகரத்   தெழின்மிகு   வியன்கடல்

வலம்புரித்   தடக்கையின்  மாஅ   னின்னிறம்;

விரியிணர்க்  கோங்கமும்  வெந்தெரி  பசும்பொனும்

பொருகளி   றட்டோய்   புரையு   நின்னுடை.

 

முதலிரண்டு வரிகளும் ஒரு அடியாயும், அடுத்த இரு வரிகளும் இரண்டாவது அடியாயும் வந்தமையான் இவை நாற்சீரடி இரண்டம்போதரங்கம் (பேரெண்) எனப்பட்டது.

 

இவை நாற்சீரடி நான்கம்போதரங்கம் (அளவெண்)


கண்கவர்  கதிர்முடி  கனலுஞ்  சென்னியை ;

தண்சுட  ருறுபகை  தவிர்த்த  வாழியை ;

ஒலியிய  லுவண  மோங்கிய  கொடியினை ;

வலிமிகு  சகட  மாற்றிய  வடியினை ;

 

நான்கு வரிகளும் தனித்தனியே நின்று, நான்கு அடிகளாக வந்தமையான், இவை நாற்சீர் ஓரடி நான்கம்போதரங்கம் (அளவெண்) எனப்பட்டது.

 

இவை முச்சீர் ஓரடி நான்கம்போதரங்கம் (இடை எண்)


போரவுணர்க்    கடந்தோய்    நீ ;

புணர்மருதம்    பிளந்தோய்    நீ ;

நீரகல    மளந்தோய்    நீ ;

நிழறிகழைம்    படையோய்    நீ ;

 

நான்கு வரிகளும் தனித் தனியே நின்று, நான்கு அடிகளாய் வந்தமையால், இவை முச்சீரடி நான்கம்போதரங்கம் (இடி எண் ) எனப்பட்டது.

 

இவை இரு சீரடி எட்டு அம்போதரங்கம் (சிற்றெண்)


ஊழி  நீ ;

உலகு  நீ ;

ஆழி  நீ ;

அருளு  நீ ;

உருவு  நீ ;

அருவு  நீ ;

அறமு  நீ ;

மறமு  நீ ;

 

எட்டு வரிகளும் தனித் தனியே நின்று, எட்டு அடிகளாய் வந்தமையால், இவை இருசீரடி எட்டு அம்போதரங்கம் (சிற்றெண்) எனப்பட்டது.

 

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா (பக்.103)


(01)                   அம்போதரங்கம் எனினும், அசையடி எனினும், பிரிந்திசைக் குறள் எனினும், சொற்சீரடி எனினும் எண் எனினும் ஒக்கும். (பக்.100.யாப்பு)

(02)                   அம்போதரங்க உறுப்பிற்கும் தாழிசைக்கும் நடுவே அராக (வண்ணக) உறுப்புப்பெற்று, தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்பிணையும் உடைத்தாய் வருவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும் (பக்.104.யாப்பு)

(03)                   அராகம், வண்ணகம், முடுகியல், அடுக்கியல், அனைத்தும் ஒரே பொருளைக் குறிப்பன ஆகும் (பக்.104. யாப்பு)

(04)                   அராக உறுப்பு சிற்றளவாக நான்கடியும், பேரளவாக எட்டடியும் வரும். ஐந்தடி, ஆறடி, ஏழடியானும் வரப்பெறும் ((பக்.104.யாப்பு)

 

கலி வெண்பா () வெண்கலிப்பா (பக்.107)


(01)                   கலி வெண்பா என்பது கலித்தளை பயின்று, கலியோசை (துள்ளலோசை) தழுவியும், வெண்தளை பயின்று, வெள்ளோசை (செப்பலோசை) தழுவியும் வந்து, ஈற்றடி முச்சீரான் இறும். (பக்.107.யாப்பு)

(02)                   நேரீற்று இயற்சீர் (தேமா, புளிமா) வெண்கலியுள் வருதல் உண்டு. (பக்.143. யாப்பு)

(03)                   வேற்றுத் தளைகள் அருகியும் வரும் (பக்.107 யாப்பு)

 

வெண்கலிப்பா (பக்.107)

 

வா,ளார்ந்,  மழைத்,தடங்,கண்  வன,முலை,மேல்   வம்,பனுங்,கக்

கோ,ளார்ந்,  பூ,ணா,கங்   குழை,புர,ளக்   கோட்,டெருத்,தின்

மா,லை,தாழ்   கூந்,தலார்   வரன்,முறை,யான்   வந்,தேத்,தச்

சோ,லை,தாழ்  பிண்,டிக்,கீழ்  சூழ்ந்,தவர்,தஞ்  சொன்,முறை,யான்

மனை,யற,முந்  துற,வற,மு   மண்,ணவர்க்,கும்   விண்,ணவர்க்,கும்

வினை,யறுக்,கும்   வகை,தெரிந்,து   வீ,டொடு,கட்  டிவை,யுரைத்,

தொன்,மை,சால்   மிகு,குணத்,தெந்  துற,வர,சைத்  தொழு,தேத்,

நன்,மை,சால்   வீ,டெய்,து   மா,று

 

(04)                   இவ் வெண்கலிப்பாவில் கலித்தளை 11-ம், வெண்சீர் வெண்டளை 18-ம்  வந்துள்ளன. ஒரேயொரு ஆசிரியத் தளை (கூந்தலார்   வரன் முறையான்)  அருகி  வந்துள்ளது.

(05)                   கலித் தளையானும், ஆசிரியத் தளையானும், இயன்று வெண்கலிப்பா வருவதுண்டு. (பக்.108.யாப்பு)

 

கலிவெண்பா (பக்.108)


(01)                   கலிவெண்பா, வெண்கலிப்பா இரண்டும் ஒன்றே (பக்.108. யாப்பு

 

சுடர்த்,தொடீ,    கே,ளாய்     தெரு,வினா   மா,டும்

மணற்,சிற்,றில்     கா,லிற்      சிதை,யா     அடைச்,சிய

கோ,தை     பரிந்,து      வரிப்,பந்,து      கொண்,டோ,டி

நோ,தக்,   செய்,யும்     சிறு,பட்,டி     மே,லோர்,நாள்

அன்,னை,யும்  யா,னு  மிருந்,தோ,மோ  இல்,லிரே

உண்,ணுநீர்  வேட்,டே  னென,வந்,தார்   கன்,னை

.............................................................................................................

......................................................................................................

(02)                   இது வெண்டளை பயின்று வெள்ளோசை (செப்பலோசை) தழுவி ஒரு பொருண்மேல் வந்தமையால் கலிவென்ஆ எனப்படும். (பக்.108.யாப்பு)

(03)                   இந்தக்  கலி வெண்பாப் பாடலில் முதல்  ஆறு அடிகளை மட்டும் ஆய்வு செய்ததில் வெண்சீர் வெண்டளை 10-ம் (பத்து) , இயற்சீர் வெண்டளை 13-ம் வந்துள்ளன. வேறு தளைகள் வரவில்லை.


கொச்சகக் கலிப்பா


01)        கொச்சகக் கலிப்பா 5 வகைப்படும் (பக்.109)

(02)        அவை; (1) தரவுக் கொச்சகக் கலிப்பா (2) தரவிணைக் கொச்சகக் கலிப்பா (3) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (4) பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (5) மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா (பக்.109. யாப்பு)

(03)        தரவே, தரவிணை, தாழிசை தாமுஞ் சிலபலவாய், மரபே இயன்று மயங்கியும் வந்தனகொச்சகக் கலிப்பா (பக்.109. யாப்பு)

(04)        ஒரு தரவு வந்தும், இரண்டு தரவு வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்பும், தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும், ஆசிரியத்தினோடும் மயங்கியும் வருவன எல்லாம் கொச்சகக் கலிப்பா என்று பெயரிட்டு வழங்கப்படும். (பக்.109.யாப்பு)

(05)        ஒரு தரவு வந்தால், தரவுக் கொச்சகக் கலிப்பா என்று பெயர் (பக்.109)

(06)        இரண்டு தரவு வந்தால், தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்று பெயர்.(பக்.109.யாப்பு)

(07)        சில தாழிசை வந்தால், சிஃறாழிசை கொச்சகக் கலிப்பா என்று பெயர். (பக்.109. யாப்பு)

(08)        பல தாழிசை வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்று பெயர் (பக்.109.யாப்பு)

(09)        கலியுறுப்பில் மிக்கும், குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும், மயங்கியும், கலிப்பாவில் வாராது என்று சொல்லப்பட்ட நேர் ஈற்று இயற்சீரும் (தேமா, புளிமா) நிரை நடுவாகிய வஞ்சி உரிச் சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி), ஐஞ்சீர் அடியும் வந்து, ஒத்தாழிசைக் கலிப்பாக்களோடு ஒவ்வாது வருவன எல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். (பக்.110. யாப்பு)

 

தரவுக் கொச்சகக் கலிப்பா (பக்.110)

 

செல்,வப்,போர்க்   கதக்,கண்,ணன்   செயிர்த்,தெறிந்,  சின,வா,ழி

முல்,லைத்,தார்   மற,மன்,னர்   முடித்,தலை,யை   முருக்,கிப்,போய்

எல்,லை,நீர்   வியங்,கொண்,மூ   விடை,நுழை,யு   மதி,யம்,போல்

மல்,லலோங்   கெழில்,யா,னை   மரு,மம்,பாய்ந்  தொளித்,ததே

 

(01)        இது  சுரிதகம் இல்லாத தரவுக் கொச்சகக் கலிப்பா (பக்.110. யாப்பு)   

(02)        இப்பாடலில் கலித்தளை 11-ம், வெண்சீர் வெண்டளை  3-ம், நிரையொன்றாசிரியத் தளை 1-ம் வந்துள்ளன.

(03)        இது மயக்கமில்லாக் கலித் தளையான் வந்த செய்யுள் (பக்.34.யாப்பு)

(04)        தரவுக் கொச்சகக் கலிப்பாவுக்கு அடிச் சிற்றெல்லை நான்கு அடியாகும்(பக்.42.யாப்பு)

(05)        இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமையால், அகவல் துள்ளலோசை ஆகும் (பக்.59.யாப்பு)

(06)        தரவுக் கொச்சகக் கலிப்பாவில் நேரீற்று இயற்சீரும் (தேமா, புளிமா), நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கணி) வாராது; (பக்.141. யாப்பு) நேரீற்று இயற்சீர் (தேமா, புளிமா) கொச்சகத்துள் வரும் (பக்.143.யாப்பு) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் கொச்சகத்துள் அருகி வரும் (பக்.143.யாப்பு)

(07)        தரவுக் கொச்சகக் கலிப்பாவில் நிரை ஈற்று ஆசிரிய உரிச்சீரும் (விளம்முன் நிரை), வெண்பா உரிச்சீரும் (காய்முன் நேர்), நேர் நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (தேமாங்கனி, புளிமாங்கனி) வந்து, வெண்டளையும், ஆசிரியத்தளையும், கலித்தளையும், வஞ்சித்தளையும் மயங்கி வரும் (பக்.141.யாப்பு)

 

கலித்தாழிசை


(01)                   பாடலில் இரண்டு அடிகளோ பல அடிகளோ வந்து, ஈற்றடி மிக்கு (நீண்டிசைத்து), பிற அடிகள்  தம்முள் ஒத்தும், ஒவ்வாதும் வருவது கலித்தாழிசை எனப்படும். (பக்.118. யாப்பு)  

(02)                   கலித்தாழிசை ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பு. தனியே ஒரேயொரு தாழிசையாகவும் வரப் பெறும். (பக்.118. யாப்பு)

 

கலித்தாழிசை


கொய்,தினை  காத்,துங்  குள,வி  அடுக்,கத்,தெம்

பொய்,தற்  சிறு,குடி  வா,ரல்,நீ   ,  நலம்,வேண்,டின் !

 

ஆய்,தினை  காத்,தும்  அரு,வி  அடுக்,கத்,தெம்

மா,சில்  சிறு,குடி  வா,ரல்,நீ  ,  நலம்,வேண்,டின் !

 

மென்,தினை  காத்,து  மிகு,பூங்  கமழ்,சோ,லைக்

குன்,றச் சிறு,குடி  வா,ரல்,நீ  ,  நலம்,வேண்,டின் !

 

(03)                   இவை இரண்டடியாய் ஈற்றடி மிக்கு, ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால் கலித் தாழிசை ஆகும் (பக்.119.யாப்பு)

(04)                   இக்கலித் தாழிசையில் 18 இயற்சீர் வெண்டளையும், 8 வெண்சீர் வெண்டளையும் வந்துள்ளன.

(05)                   இரண்டடுக்கி வந்துள்ள ஒரு கலித் தாழிசையில், ஈற்றடி மிக்கும், இரண்டாமடி குறைந்தும், முதலடியும் மூன்றாமடியும் ஒத்தும் வருவது உண்டு. (பக்.119. யாப்பு)

(06)                   ஈற்ரடி மிக்கும், ஏனைய மூன்றடிகள் அளவொத்தும் வருவதுமுண்டு. (.119. யாப்பு)

(07)                   சீர் வரையறுத்து இலாமையால் கலித் தாழிசை, எனைத்துச் சீரானும், அடியானும் வரப்பெறும்  (பக்.119. யாப்பு)


கலித்துறை (பக்.120)


(01)        கலித்துறை என்பது ஐஞ்சீரடி நான்காய் வருவது ஆகும். நான்கடி உள்ள பாடலாகவும், ஒரு அடிக்கு ஐந்து சீர்களாகவும் வரும். (பக்.119. யாப்பு)

 

யா,னுந்   தோ,ழியும்   ,யமும்   ,டுந்   துறை,நண்,ணித்

தா,னுந்   தே,ரும்   பா,கனும்   வந்,தென்   நல,னுண்,டான்

தே,னும்   பா,லும்   போல்,வன   சொல்,லிப்   பிரி,வா,னேல்

கா,னும்   புள்,ளும்   கை,தை,யு   மெல்,லாங்   கரி,யன்,றே

 

(02)        இது நெடிலடி (ஐஞ்சீர்) நான்காய் வந்த கலித்துறை (பக்.120 யாப்பு)

(03)        இப்பாடலில் 8 இயற்சீர் வெண்டளையும், 4 வெண்சீர் வெண்டளையும், 7 நேரொன்றாசிரியத்  தளையும்  வந்துள்ளன.

 

கலிவிருத்தம் (பக்.120)


(01)        அடிதோறும் நான்கு சீர்களும், நான்கு அடிகளும் உடையதாய் வருவது கலிவிருத்தம் (பக்.120. யாப்பு)

 

வேய்,தலை   நீ,டிய   வெள்,ளி   விலங்,கலின்

ஆய்,தலின்   ஒண்,சுடர்   ,ழியி   னான்,றமர்

வாய்,தலின்   நின்,றனர்   வந்,தென   மன்,னர்,முன்

நீ,தலை    சென்,றுரை   நீள்,கடை   காப்,போம்

 

(02)        இப்பாடலில் 14 இயற்சீர் வெண்டளையும், 1 வெண்சீர் வெண்டளையும் வந்துள்ளன.   

 

வளர்,கொடி,யன  மணம்,விரி,வன  மல்,லிகை,யொடு  மௌ,வல்

நளிர்,கொடி,யன  நறு,விரை,யன  நகு,மல,ரன  வகு,ளம்   

குளிர்,கொடி,யன  குழை,மா,தவி  குவி,முகை,யன  கோங்,கம்

ஒளிர்,கொடி,யன  உயர்,தளி,ரினோ  டொழு,கிண,ரன  வோ,டை

 

(03)        இக்கலிவிருத்தத்துள் நிரைநடுவாகிய வஞ்சி உரிச் சீரும் (11), நேர் ஈற்று இயற்சீரும் (3), வஞ்சித்தளையும், இயற்சீர் வெண்டளையும் மயங்கி வந்துள்ளன. (பக்.143. யாப்பு)

(04)        தேமா, புளிமா என்னும் இரு மாச்சீர்களும் கலியுள் புகா. (பக்.140 .யாப்பு)   

(05)        கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இரண்டும் கலிப்பாவினுள் புகப்பெறா. (பக்.140. யாப்பு)

(06)        கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் தவிர்த்த எல்லாச் சீர்களும் வெண்பா தவிர்த்த எல்லாப் பாக்களிலும், பாவினத்துள்ளும்  வந்து மயங்கும் (பக்4.141. யாப்பு)

 

 ------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,;

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------

              

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன .